கிரண் பேடி | Latest tamil news about Kiran Bedi | VikatanPedia
Banner 1
புதுவையின் தற்போதைய ஆளுநர்

கிரண் பேடி

கிரண் பேடி 1949ஆம் ஆண்டு ஜீன் 9ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிரகாஷ் பெஷாவாரியா மற்றும் பிரேம் லதா பெஷாவாரியா ஆகியோருக்கு பிறந்தார். இவர் ஒரு அரசியல் வாதியும்,சமூக சேவரும்,ஓய்வு பெற்ற காவலரும்,இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாவார்.

பிறப்பு மற்றும் இளம்வயது:
  கிரண் பேடி 1949ஆம் ஆண்டு ஜீன் 9ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிரகாஷ் பெஷாவாரியா மற்றும் பிரேம் லதா பெஷாவாரியா ஆகியோருக்கு பிறந்தார்....சேக்ரட் ஹார்ட் கான்வென்டில் பள்ளிப் படிப்பு முடித்தார்.1968 ஆம் ஆண்டு  அரசு மகளிர் கல்லூரியில ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்..1970 ஆம் ஆண்டில் பஞ்சாப் பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்..1972 ஆம் ஆண்டில் ,கிரண்பேடி பிரிஜ் பெடிவை மணந்தார் மற்றும் அவருடன் ஒரு மகள் இருக்கிறார்..1988 ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்எல்பி(LLB) பட்டம் பெற்றார் ..1993ஆம் ஆண்டில் டெல்லி இந்தியா தொழில் நுட்பக் கழகத்தில் (IIT) ல் டாக்டர் பட்டம் பெற்றார்.

சமூக சேவை:
   1989 ஆம் ஆண்டில் கிரண் பேடி நவஜோதி இந்தியா அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்..இந்த தொண்டு நிறுவனம் போதைப் பொருள் அடிமைகள்,பெண்கள் அதிகாரம் போன்ற பிற சமூக பிரச்சனைகள் சந்திதுவந்தன....இந்தியாவின் விஷன் ஃபவுண்டேஷனைத் தொடங்கினார..அது போலிஸ் சீர்திருத்தங்கள் ,சிறை சீர்திருத்தங்கள் ,பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் கிராம்ப்புற மற்றும் சமூக வளர்ச்சிக்கீக பணியாற்றி வந்தார்.2011 ஆகஸ்ட் மாதம் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலமையிலான ஊழலுக்கு எதிரான இந்தியாவில் கிரண் பேடி சேர்ந்தார்.அர்விந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து முக்கிய பிரமுகராக இருந்தார்...

சாதனை:
   மாணவப் பருவத்தில் கவிதை ஓப்பிதல் ,நாடகம்,விவாத மேடை,பல பரிசுகளை வென்றுள்ளார்..அமிர்தசரஸ் கல்சா மகளிர் கல்லூரியில் விரிவுரையாளாராக 2ஆண்டுகள் பணியாற்றினார்.இந்தியா காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக 1972ல் பணியில் சேர்ந்தார் டேராடூன் அடுத்து மசூரியில் காவல்துறை பயிற்சியைத் தொடங்கினார் அந்த பிரிவில் பயிற்சி பெற்ற 80பேரில் இவர் ஒருவர்தான் பெண்.

  சிறந்த டென்னிஸ் வீராங்களையும் கூட டென்னிஸ் போட்டியில் ஆசிய அளவிலும்,தேசிய அளவிலும் ஏராளமான பரிசுகள்,பதக்கங்களை வென்றுள்ளார்.போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியாக இருந்தபோது வீதி மீறி நிறுத்தப்பட்டிருந்த பிரதமர் இந்திரா காந்தியின் காரையே கிரேன் வைத்து அப்புறப்படுத்திய அசாத்திய துணிச்சல் படைத்தவர் இவர் பணிபுரிந்த இடங்களில் குற்றங்கள் குறைந்தன.காவல் துறையினறுக்கு பல்வேறு வசதிகளைப் செய்துதந்தார்..20ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் சேவையாற்றியுள்ளார்..சர்வதேச அளவில் பேரும் புகழும் பெற்றார்.ஐ.நா சபையின் சிவிலியன் போலிஸ் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.போதை பொருள் தடுப்பு மற்றும் ஓடுக்கப்பட்ட மக்கள் மேம்பாடுகளுக்காக இந்தியா விஷன்,நவஜோதி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார்..

கிரண்பேடி கடந்துவந்த பாதை:
  1970 ஆம் ஆண்டில் அமிர்தசரஸ் நகரில் பெண்கள் கல்சா கல்லூரியில் அரசியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎஸ் அதிகாரி ஆனார்.இந்த சேவையில் சேர்ந்த இந்தியாவில் முதல் பெண் அதிகாரியாவர்...இந்தியா போலிஸ் சேவையில் பணிபுரிந்த இவர்,மிஸ்ராமில் உள்ள டி.ஜ.ஜி. போலிஸ்,சண்டிகரில் லெப்டினன்ட் கவர்னரின் ஆலோசகரும்,நார்டோடிக் கட்டுப்பாடு ஆணையத்தின் பணிப்பாளரும் இருந்தார் அவரது பணிக்காக ஐக்கிய நாடுகளின் பதக்கம் பெற்றார்..1993-1995 ஆண்டுகளில் சிறைச்சாலைகள் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த போது ,தில்லி சிறை நிர்வாகத்தில் கிரண் பேடி பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்...1994 ஆம் ஆண்டுக்கான ராமன் மாக்சேசே விருது மற்றும் ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருது பெற்றார்.பிற வருடங்களுக்கு பிறகு ,கிரண் பேடி போலிஸ்  சேவையில் இருந்து தன்னார்வமாக ஓய்வு பெற்றார்...


கிரண்பேடி எழுதிய நூல்கள்:
  நான் துணிந்தவள்,ஊழலை எதிர்த்து,தலைமையும் ஆளுமையும்,இந்தியா காவல்துறை,பெண்களுக்கு அதிகாரம்,இதுஎப்பொழுதும் இயலும்,புரூம் குரூம் ஆகிய நூல்கள் எழுதியுள்ளார்..

விருதுகள்:

 • ஜனாதிபதி கல்லாண்ட்ரி விருது(1979)
 • சிறந்த மகளிர் விருது(1980)
 • மருந்து தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகான ஆசியா பிராந்தியம் விருது (1991)
 • அரசாங்க சேவைகான மகசே விருது (1994)
 • மிலிலா சிரோமணி விருது (1995)
 • தந்தை மாசிஸ்மோ மனிதாபிமான விருது(1995)
 • லயன் ஆஃப் தி இயர்(1995)
 • ஜோசப் பீயிஸ் விருது (1997)
 • இந்தியாவின் பெறுமை (1999)
 • அன்னை தெரேசா மெமோரியல் தேசிய விருது (2005)
   

தொகுப்பு : கு.மோகனலட்சுமி