Banner 1

மேகமலை

மேகமலை நான்கைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள மலைவாசஸ்தலங்களில் சிறந்த நில அமைப்பு கொண்டதாக இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இந்த நகரம் உள்ளது. சின்னமனூரிலிருந்து  மேகமலைக்கு மலைப் பாதைவழியாகதான் செல்ல முடியும். மலைப் பாதையின் முதல் 30 கி.மீ. வனப்பகுதி, அடுத்த 20 கி.மீ. தேயிலை தோட்டங்கள்...மேகமலை செல்ல பஸ் வசதி இருக்கிறது. காரில் செல்பவர்களுக்கு கொஞ்சம் கடினம் தான். ஜீப், எஸ்யூவி போன்ற வாகனங்களை பயன்படுத்தினால் அதிக கஷ்டம் இல்லாமல் மலைப் பாதையில் பயணிக்கலாம்.

தொகுப்பு : விகடன் டீம்