ஓவியா | Latest tamil news about Oviya | VikatanPedia
Banner 1
நடிகை

ஓவியா

களவாணி படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதுவரை 15 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

'ஓவியா'வாக  ரசிகர்களிடையே அறிமுகமான இவரின் இயற்பெயர் ஹெலன்.1991-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி கேரள மாநிலம் திரிச்சூரில் பிறந்தார்.திரிச்சூர் விமலா கல்லூரியில் பி.ஏ ஆங்கிலப் பாடப்பிரிவில் தன் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

2010-ஆம் ஆண்டு கிராமிய மென்மையோடும்,கேலி கிண்டலோடும் வெளியாகி வெற்றி பெற்ற “களவாணி”யில் விமலுக்கு ஜோடியாக அறிமுகமானார் ஓவியா. கிராமத்து பெண்களின் குணாதிசயங்களோடு, குறும்புடன் க்யூட்டாக நடித்திருந்ததால்  இவரது கதாபாத்திரம் வெகுவாக பிரபலமானது. 

 தொடர்ந்து ‘களவாணி’  திரைப்படத்தின் கன்னடம் மற்றும் தெலுங்கு ரீமேக்கிலும் ஹீரோயினாக நடித்தார். தமிழில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மெரினா, சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு மற்றும் மூடர் கூடம், மதயானை கூட்டம், புலிவால்,சில்லுனு ஒரு சந்திப்பு, சண்டமாருதம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.  கமல் நடிப்பில் வெளியான “மன்மதன் அம்பு” திரைப்படத்தில் கவுரவ வேடத்திலும் தோன்றியுள்ளார்.

ஜூன் 25, 2017ல் விஜய் தொலைக்காட்சி தொடங்கிய “பிக் பாஸ்” சீசன் - 1  நிகழ்ச்சியில்  15 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கினார் ஓவியா. ஆரம்பத்தில் 15 பேரில் ஒருவராக இருந்தவர், தன் வெளிப்படைத் தன்மையால் ரசிகர்களைக் கவர்ந்தார். அவரது  புறம் பேசாமை, வெகுளித்தனம் ஆகிய குணங்களாலும் நடனத்திறனாலும் கவரப்பெற்ற ரசிகர்கள், ஒவ்வொரு வாரம் உடன் இருப்பவர்களால் நாமினேட் செய்யப்பட்டபோதும், ஓட்டு போட்டு அவரை பிக் பாஸ் வீட்டிலேயே இருக்க வைத்தனர். ஓவியா ஆர்மி, ஓவியாஇஸம் என்றெல்லாம் நெட்டிசன்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்தனர்.  

தொகுப்பு : GOMATHI S M