அதிதி ராவ் ஹைதரி

அதிதி ராவ் ஹைதரி

அதிதி ராவ் ஹைதரி

பிறப்பும் குடும்பமும்
   1986 அக்டோபர் 28  அன்று பிறந்த அதிதி, ஹைதராபாத்-ஐ பூர்விகமாக கொண்டவர். இவர் இந்திய ஆட்சியர்கள் வம்சத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய எள்ளுத் தாத்தா ஹைதராபாத்தின் முன்னாள் பிரதான மந்திரி ஆவார்; கொள்ளுத் தாத்தா அசாம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார். இவருடைய பாட்டன் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். கர்நாடக இசை பாடகியும் எழுத்தாளரும்  ஆன வித்யா ராவ் தான், அதிதியின் தாயார். இவரது குடும்பம் ஹைதராபாத் வனபர்த்தி சமஸ்தானத்தின் வம்சம் ஆகும். மேலும் நடிகர் அமீர்கான் மனைவியின் அத்தை மகளும் ஆவார். 2009இல் நடிகர் சத்யதீப் மிஸ்ராக்கும் அதிதிக்கும் திருமணம் நடந்தது. பின் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இவர் சிறுவயதிலேயே பரதநாட்டியமும் கர்நாடக இசையும் கற்றுகொண்டவர். பள்ளிகல்வியை ஆந்திராவிலும் கல்லூரி நாட்களை டெல்லியிலும் கழித்தார்.


சினிமா பயணம்
    அதிதியின் சினமா பயணம், தமிழ் திரையுலகத்தில் தான் தொடங்கியது. 2007 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஸ்ரீரங்கம்' படத்தில் வேசியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. இவர் திரைக்கு நடித்த முதல் படம் தமிழானாலும், 2006இல் திரைக்கு வந்த இவரது முதல் படம் மலையாளத்தின் 'பிரஜாபதி' ஆகும். பின் பாலிவுட்டில் நடிக்க தொடங்கினார்.
2008-2016 வரையில் பதினொன்று பாலிவுட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் துணை நடிகையாக நடித்து புகழ் பெற்றிருக்கிறார். அதிலும் இவர் நடித்த 'டெல்லி-6', 'ஏ சாலி ஜிந்தகி', 'ராக்ஸ்டார்', 'மர்டர்-3', 'வாஜிர்', 'பிடூர்' ஆகிய படங்கள் இவருக்கு ரசிகர்களை உருவாக்கியது. 2011இல் திரைக்கு வந்த 'ஏ சாலி ஜிந்தகி' படம் இவருக்கு சிறந்த துணை நடிகை விருது பெற்று தந்தது. 'எனக்கு கவர்ச்சியாய் நடிப்பதை விட நடன காட்சிகளில் நடிப்பது மிகவும் பிடிக்கும்' என அவரது கவர்ச்சிகரமான நடிப்பைக் குறித்து ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார். அதிதி பல விளம்பரங்களில் மாடலாகவும் நடித்து வருகிறார்.  
 
தமிழ் திரையுலகத்தில் அதிதி
    இயக்குனர் மணிரத்னம் மூலம் பத்து வருடங்களுக்கு பின் தமிழ் திரையுலகத்திற்கு மீண்டும் அறிமுகமானார் அதிதி. மணிரத்னத்தின் படங்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு படம் வெளிவந்த பின் ரசிகர்கள் கூடுவது வழக்கம். அதேபோல் 2017 இல் வெளிவந்த 'காற்று வெளியிடை' படம், 'டாக்டர் லீலா ஆபிரகாம்' கதாபாத்திரத்தில் நடித்த அதிதிக்கு தமிழகத்தில் ரசிகர்களை அள்ளி தந்தது. அதிதி பங்குகொண்ட பேட்டிகளில் அவர் பாடிய 'வான் வருவான்' பாடல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. மேலும், 'ஏ.ஆர். ரகுமான் அவர்களின் மிக பெரிய ரசிகை நான். அவருடன் ஒருமுறையாவது பணியாற்ற வேண்டும்' என கூறியிருக்கிறார்.

   'காற்று வெளியிடை' படத்திற்கு பின் அதிதி மீண்டும் பாலிவுட்கே பறந்து விட்டார். 2017 செப்டம்பர் வெளிவந்திருக்கும் 'பூமி' ஹிந்தி படத்தில் நடிகர் சஞ்சய் துட்இன் மகளாக நடித்துள்ளார். அதிதியின் நடிப்பு இந்த படத்தில் அபாரம்.இனிவரும் காலங்களில் அதிதியை ஹீரோயினாகவே படங்கள் காணலாம் என எதிர்பார்க்கபடுகிறது. ஆனால் மீண்டும் தமிழ்த்திரையுலகத்தில் எப்போது காண முடியும் என்பது தெரியாத வண்ணமே உள்ளது.

FULL Details: Abi Saravan shows PHOTO PROOF on his Side against Aditi Menon
Vikatan Correspondent

FULL Details: Abi Saravan shows PHOTO PROOF on his Side against Aditi Menon

வடிவேலு எனக்கு தெய்வம்! - கண்கலங்கிய Vengal  Rao
Vikatan Correspondent

வடிவேலு எனக்கு தெய்வம்! - கண்கலங்கிய Vengal Rao

இப்படி பண்ணுனா ஷூட்டிங் விளங்கிடும் - விஜய்சேதுபதி | Tughlaq Durbar
Gopinath Rajasekar

இப்படி பண்ணுனா ஷூட்டிங் விளங்கிடும் - விஜய்சேதுபதி | Tughlaq Durbar

காத்திருந்த விஜய்... ரஜினியின் காமெடி வில்லன்... #Cinema2020
சந்தோஷ் மாதேவன்

காத்திருந்த விஜய்... ரஜினியின் காமெடி வில்லன்... #Cinema2020

'பிகில்' நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்... சின்னத்திரையில் சமந்தா... #CinemaVikatan2020
சந்தோஷ் மாதேவன்

'பிகில்' நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்... சின்னத்திரையில் சமந்தா... #CinemaVikatan2020

ரஜினி தாத்தாவுக்கு 4 பசங்க, 5 பேர பசங்க! | Actress Easwari Rao Opens Kaala Secrets!
Vikatan Correspondent

ரஜினி தாத்தாவுக்கு 4 பசங்க, 5 பேர பசங்க! | Actress Easwari Rao Opens Kaala Secrets!

SpeakUp Against Sexual Harassment|Vani Bhojan|Aditi|Ambika|Anu|Arulmozhi|Lakshmy|Shalini|Maria Zeena
Vikatan Correspondent

SpeakUp Against Sexual Harassment|Vani Bhojan|Aditi|Ambika|Anu|Arulmozhi|Lakshmy|Shalini|Maria Zeena

Aruvi Aditi Balan Share Shocking Sexual Harassment Incidents! | Speak Up Promo 05
Vikatan Correspondent

Aruvi Aditi Balan Share Shocking Sexual Harassment Incidents! | Speak Up Promo 05