அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

அனைத்து இந்திய அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டுவரும் அரசியல் கட்சி. மேலும் இந்திய பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் திகழ்கிறது. இக்கட்சியின் தலைமையகம் ராயப்பேட்டையில்  அவ்வை சன்முகம் சாலையில் உள்ளது. இக்கட்சின் சார்பில் 37 மக்களவை உறுப்பினர்களும், 12 மாநிலங்களவை உறுப்பினர்களும், 134 சட்ட மன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இக்கட்சியின் சின்னம் இரட்டை இலை. இக்கட்சியை  எம். ஜி.இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) தோற்றுவித்தார். எம்.ஜி.ஆர் க்கு பிறகு  இக்கட்சி செல்வி ஜெ.ஜெயலலிதாவால் (அம்மா) பொறுப்பேற்று நடத்தினார். அம்மாவின் மறைவிற்கு பின் சசிகலா அதிமுக தன்வசப்படுத்தினார். இவ்வாறு தமிழக அரசியலில் தனக்கென ஒரு வரலாற்றையே உருவாக்கிய கட்சி அதிமுக.

அஇஅதிமுக தோற்றம்:
                           
      தமிழகத்தில் முதலில் மிகப்பெரிய கட்சியாக திகழ்ந்தது திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) மட்டும் தான். இக்கட்சியின் தலைவராக அப்போது சி.என்.அண்ணாதுறை இருந்தார். அண்ணா துறையின் மறைவிற்கு பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் முதல்வர் ஆனார் மு.கருணாநிதி (கலைஞர்). இவர் சிறந்த எழுத்தாளர்,பேச்சாளர் மற்றும் அரசியல்வாதி. கட்சியில் அப்போது பொருளாளராக இருந்தார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர் திரையுலகில் மட்டுமல்லாது அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டார். கட்சியின் கணக்கு வழக்குகள் பற்றி தலைவரிடம் கேட்க தலைவர் பொருளாளரை கட்சியை விட்டே நீக்கிவிட்டார். திராவிடக் கட்சியிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர் கட்சியின் சிறு தொண்டனான அனகாபுத்தூர் இராமலிங்கம் தொடங்கிய அதிமுக கட்சியில் தன்னை உறுப்பினராக இணைத்து கொண்டார். பின் கட்சியின் தலைவரான எம்.ஜி.ஆர் கட்சியின் பெயரை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எனப் பெயர் மாற்றினார். இப்பெயர் மாற்றத்தை கட்சியின் தொண்டர்கள் முதலில் ஏற்கவில்லை. எம்.ஜி.ஆர் பின் தான் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறேன் என்று கூறியவுடன் எம்.ஜி.ஆர் மீது கொண்ட அதீத மரியாதையில் அனைவரும் ஏற்றனர். அனகாபுத்தூர் இராமலிங்கத்தை மேல் சபை உறுப்பினராக (எம்.எல்.சி) மாற்றினார். 1972 ல் தொடங்கப் பட்ட இக்கட்சியின் சின்னமாக இரட்டை இலை தேர்வு செய்யப்பட்டது. கட்சியின் கொடியாக கருப்பு, சிவப்பு நிறம் அதில் தாமரை இருப்பது போன்று  உருவாக்கி, மதுரையில் ஜான்சிராணி பூங்காவில் இயற்றினார். பின் அண்ணாவின் சிறந்த படத்தை தேடி அண்ணா ஆணையிடுவது போன்ற படத்தை கருப்பு, சிவப்பு கொடியோடு சேர்த்து அதிமுக கொடி உருவாக்கப்பட்டது. இக்கொடியானது எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலோடு நடிகர் பாண்டு அதிமுக கொடியை உருவாக்கினார். இக்கட்சியின் கொடி அன்றைய நாட்களில் அனைத்து ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் வீட்டில் அலங்காரக் கொடியாக திகழ்ந்தது.
            

தேர்தல் களம்:
                  1973ல் தனது முதல் தேர்தலை எதிர்கொண்டது அஇஅதிமுக. அத்தேர்தல் திண்டுகல் நாடளுமன்ற தொகுதி உறுப்பினருக்கான தேர்தல். இதில் அஇஅதிமுக வேட்பாளர் அதிக வாக்கு வித்தியசத்தில் வெற்றி பெற்றார். இதுவே அதிமுக கண்ட முதல் வெற்றி. பின் 1977 ல் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் , அஇஅதிமுக இந்திய பொதுவுடைமைக் கட்சி( மார்க்சியம்), அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து நான்கு முனைப் போட்யில் அமோக வெற்றிக் கண்டது. இத்தேர்தலில் திமுக 234 தொகுதிகளில் வெறும் 48 தொகுதி மட்மே வென்று டெப்பாசிட்டை இழந்தது. இத்தேர்தலின் போது எம்ஜிஆர் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அதனால் பிரச்சாரத்திற்க்கு செல்லவில்லை. இருப்பனும் அவர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. இத்தேர்தலுக்கு பின் அதிமுக தமிழகத்தில் மிகப் பெறிய கட்சியாக உருவெடுத்தது.பின் 1991, 2002, 2011, 2016 நடைப்பெற்ற தேர்தல்களிலும் வென்று ஆட்சியை கைப்பற்றியத்து. மேலும் 2016 ல் நடைபெற்ற தேர்தலில் கூட்டணி இன்றி தனித்து நின்று வெற்றி பெற்றது.

ஜெயலலிதா காலம்:

             வெற்றியை மட்டுமே சந்தித்து  வந்த அஇஅதிமுக ஓர் பேர் இடரை சந்திக்க நேர்ந்தது. அதிமுகவின் இரும்பு தூண் மண்ணில் சரிந்த நாள் அன்று. அது டிசம்பர் 24 ,1987 ல் நிகழ்ந்த எம்.ஜி.ஆரின் மறைவு. எம்.ஜி.ஆரின் மறைவிற்க்கு பின் கட்சி இரண்டானது. அதிமுக ஜானகி அணி மற்றும் அதிமுக ஜெயலலிதா அணி. ஆனால் ஜெயலலிதாவை அப்போது அனைவரும் ஏற்க தயாராக இல்லை. கட்சியின் பொறுப்பை ஆர்.எம். வீரப்பன் தலைமையில் ஜானகி ஏற்றுக் கொண்டார்.மேலும் எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி.எச். பாண்டி ஜானகி அணிக்கு ஆதரவாக இருந்தார். 132 சட்டமன்ற உறுப்பினர்கள் ஜானகிக்கு  ஆதரவாகவும், 33 பேர் ஜெலலிதாவுக்கு ஆதரவாகவும் நின்றனர். இதனால் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதை எதிர்கட்சிகள் மற்றும் ஜெ அணி ஏற்க்கவில்லை. இதனால் சட்ட மன்றத்தில் குழப்பம் ஏற்ப்பட்டது. சபநாயகர் ஜெ அணியை சட்ட மன்றம் விட்டு வெளியேற்றினார். இதனால்1988 ல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி அணி வெற்றி பெற்றது. ஆனால் சட்டமன்றததில்  நடந்த சர்ச்சையினால் மத்திய அரசு ஆட்சியை கலைத்தது. இதனால் ஜனவரி 21, 1989ல் நடந்த தேர்தலில் 69.69% பதிவு  நடைப்பெற்றது. ஆனால் மதுரை மற்றும் மருங்காபுரி பகுதிகளில் வாக்குபதிவு நடக்கவில்லை. அங்கு சுமார் 11 மாதம் கழித்து நடந்த தேர்தலில் ஜெ அணி வெற்றி பெற ஆளும் முதல்வராக மாறினார் ஜெயலலிதா. சுமார் 26 வருடங்களுக்கு மேலாக அஇஅதிமுக வின் தாங்கும் தூணாக இருந்த அம்மா டிசம்பர் 5, 2017 ல் உயிர் பிரிந்தார். இவரது மறைவில் சந்தேகம் இருப்பதாக இன்று வரை சர்ச்சைகள் எழுந்துவருகின்றனர்.

பல பிரிவுகளாக மாறிய அஇஅதிமுக:

         ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு முதல்வராக ஒ.பன்னீர் செல்வம் பதவி ஏற்றார். மேலும் பொதுச் செயலாலராக சசிகலா பதவி ஏற்றார். பிறகு கட்சியின் தொண்டர்கள் விருப்பத்திற்க்கு ஏற்றவாறு முதலமைச்சராக சசிகலாவே பொறுப்பேற்றார். ஆனால் மக்கள் நினைக்காதவாறு நடந்தது ஒ.பி.எஸின் வாக்குமூலம். அம்மா கல்லறையின் முன் தியானம் செய்த பிறகு எழுந்த ஒ.பி.எஸின் அதிரடி பேட்டி அதிமுக கட்சியை அதிர வைத்தது. ஒ.பி.எஸ் சசிகலாவிற்க்கு எதிரானார். சட்டமன்ற உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக மாறினர். இந்நிலையில் ஏற்கனவே நடந்து கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என நிறுபனமாக 4 வருட சிறை தண்டனையை அடைகிறார் சசிகலா. இந்நிலையில் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை நியமிக்கிறார். ஓ.பி.எஸ் அணியா ஈ.பி.எஸ் அணியா என பரபரபான அரசியல் களமாக மாறியது அஇஅதிமுக. மேலும் ஆர்.பே நகர் இடைத்தேர்தல் இன்னும் சிக்கலாக்கியது. அம்மாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் ஒ.பி.எஸ் அணியின் சார்பாக மனுசூதனன் இரட்டை விளக்கு சின்னத்திலும், ஈ.பி.எஸ் அணியின் சார்பாக டிடிவி.தினகரன் தொப்பி சின்னத்திலும் போட்டியிட்டனர். ஆனால் பணம் பட்டுவாட பிரச்சனையில் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. கட்சியின் சின்னம் எங்களுக்கு என இரு அணிகளும் சண்டையிட இறுதியில் ஒ.பிஎஸ் மற்றும் ஈ.பி.எஸ் அணிகளும் இணைய கட்சின் சின்னம் அவர்களுக்கு சென்றது. ஆனால் இந்த இணைப்பை ஏற்க முடியாத தினகரன் மற்றும்சிலர் கட்சியில் இருந்து வெளியேறினர். தற்போது நடைப்பெற்றுக் கொண்டிருப்பது முதல்வர் எடப்பாடி ஆட்சி. ஜெயலலிதா போன்ற வலிமையான அதிகாரம் இல்லாமலும், மக்களின் நம்பிக்கையை இழந்ததாலும் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே உள்ளது.


அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட, கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது. 

'இரட்டை இலை' எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே! - தேர்தல் ஆணையம் தீர்ப்பு எனத் தகவல்

இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிகள் இணைந்தன. அதன்பின்னர் இரு அணிகள் இணைந்து பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தன. சசிகலா தரப்பிலும் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் 'இரட்டை இலை' எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே!  எனத் தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. மேலும் அதற்கான காரணத்தையும் 82 பக்கத் தீர்ப்பில் விவரத்திள்ளது தேர்தல் ஆணையம்.

இரட்டை இலைச் சின்னம் பழனிசாமி அணிக்கு வழங்கியது ஏன்? தேர்தல் ஆணையத்தின் 83 பக்க தீர்ப்பு

Vellore Election: NOTA Defeated ADMK
Nivetha R

Vellore Election: NOTA Defeated ADMK

ADMK's Top 5 Corruptions!
Nivetha R

ADMK's Top 5 Corruptions!

அ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்? | ADMK | DMK | Kamalhassan
Nivetha R

அ.தி.மு.க-வை காப்பாற்றுமா கார்ப்பரேட் வியூகம்? | ADMK | DMK | Kamalhassan

தினகரன் தோற்றது எப்படி?- ஆனந்த் ராஜ் | ADMK | DMK
Vikatan Correspondent

தினகரன் தோற்றது எப்படி?- ஆனந்த் ராஜ் | ADMK | DMK

'BJP-ADMK' எத்தனை சீட் வெல்வார்கள் ?- சாமியாரின் கணிப்பு !
Vikatan Correspondent

'BJP-ADMK' எத்தனை சீட் வெல்வார்கள் ?- சாமியாரின் கணிப்பு !

தே.மு.தி.க அழிவுக்கு அ.தி.மு.க-தான் காரணமா..? #Vijayakanth #ADMK #DMDK #TNPolitics
Vikatan Correspondent

தே.மு.தி.க அழிவுக்கு அ.தி.மு.க-தான் காரணமா..? #Vijayakanth #ADMK #DMDK #TNPolitics

சாதி அரசியல் ஆட்டம் காணும் ADMK !
Vikatan Correspondent

சாதி அரசியல் ஆட்டம் காணும் ADMK !

Sasikala ADMK-ல இல்ல - OPS | வெறுப்பு ஏத்தாத ப்ளிப்ஸு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌
Vikatan Correspondent

Sasikala ADMK-ல இல்ல - OPS | வெறுப்பு ஏத்தாத ப்ளிப்ஸு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌