அஜித்

அஜித்
இவர் மோட்டார் பந்தயத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரண் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இதுவரை 56 படங்கள் நடித்துள்ளார். இதில் வாலி, வில்லன், அட்டகாசம், பில்லா, அசல் ஆகிய படங்களில் இரட்டை வேடங்களிலும் நடித்துள்ளார்.
வாலி, வில்லன், வரலாறு ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம் ஃபேர் விருதினை பெற்றார். `பூவெல்லாம் உன் வாசம்`, `வரலாறு` ஆகிய படங்களுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். தமிழ் திரை உலகில் அனைவருக்கும்க் பிடித்த முன்னனி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
விவேகம் அஜித்குமாரின் 57 வது படம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். மேலும் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன் ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்தார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் 'விசுவாசம்'. அஜித்தின் 58-வது படமான இந்தப் படத்துக்காக சிவாவுடன் நான்காவது முறையாக ஒன்று சேர்ந்தார் அஜித்.

Exclusive: `வலிமை' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர் ரிலீஸ்... அஜித் ஓகே சொல்லிவிட்டாரா?! #Valimai

உண்மைகள் சொல்வேன்! - 16

உண்மைகள் சொல்வேன்! - 15

வலைபாயுதே

Thala Ajith சொன்ன விஷயம் ஷாக்கா இருந்துச்சு! - Sahana & Shiva Reel Couple | Idhayathai Thirudathey

"சிம்புவுக்கு மாஸா ஒரு டைட்டில்; கிராமத்துக் கதை ரெடி; `நடுநிசி நாய்கள்' ஏன் புரியலை?!"- கௌதம் மேனன்

"அஜித்தை வச்சு `நான் கடவுள்' பண்ணிருக்க முடியாது!" - Arthur Wilson | Director Bala

`வலிமை'தான் டாப்பா?! மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் எது? #VikatanPollResults

ஒரிஜினல் இந்திரன்... ‘செளத்’ சந்திரன்!

``விஜய், அஜித் பேட்டிக்கு வெயிட்டிங்... கால்வலி பெட்டர்... அடுத்த வருஷம் கம்பேக்!" - டிடி

``ரஜினி, அஜித்திடம் உண்மை இருக்கிறது!’’ - சர்டிஃபிகேட் கொடுக்கிறார் ராஜேந்திர பாலாஜி!
