அனிருத் ரவிச்சந்தர்

அனிருத் ரவிச்சந்தர்
தமிழ் சினிமாவின் இளமை துள்ளும் இசையமைப்பாளர்,பாடகர் அனிருத் ரவிசந்தர்,மிக சிறிய வயதிலேயே வெற்றியை எட்டி பிடித்தவர்,இளைஞர்களின் பல்ஸ் பிடித்து மியூசிக் போடும் கம்போசர் இவர்.யூத் ரசிகர்களும் குறிப்பாக பெண் ரசிகர்கள் அனிருத்திற்கு எப்போதுமே உண்டு.
இளமை பருவம்:
1990-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 16-தேதி பிறந்தார்,இருபத்தியேழு வயதாகும் அனிருத் தமிழ்நாட்டின் மோஸ்ட் வாண்டட் பேச்சுலர் என்றால் தவறல்ல!இவரின் தந்தை நடிகர் ரவிச்சந்தர் ராகவேந்திரா.சென்னை கே.கே நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளியில் தன் பள்ளிபடிப்பையும்,சென்னை லயோலா கல்லூரியில் தன் பட்டப்படிப்பையும் முடித்தார்.பள்ளியில் படிக்கும்போதே “ஜின்க்ஸ்”என்னும் ஒரு இசைக்குழு ஒன்றில் அங்கமாக இருந்திருக்கிறார் அனிருத்
சினிமா பயணம்:
ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவின் சித்தி மகனான அனிருத்தின் இசை ஆர்வத்தை மொத்த குடும்பமே அறிந்திருக்க,அவரின் இசையையும்,திறமையையும் எப்படியாவது வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வம் தனுஷிடம் நிறையவே இருந்தது,இதனால் தான் பள்ளியில் படிக்கும்போதே கீபோர்ட் வாங்கி தனக்கு பரிசளித்தாக அனிருத் கூறியுள்ளார்.
அஸ்வர்யா இயக்கும் குறும் படங்களுக்கும்,தன் நண்பர்கள் இயக்கும் குறும்படங்களுக்கும் இசை அமைத்து வந்த அணிருத்திற்கு முதன்முறையாக ஒரு திரைப்பட்த்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பை வழங்கினர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா.
இது ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த “3” திரைப்படம்,இந்த திரைப்பட்த்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் செம்ம ஹிட்.வெகு நாட்கள் கழித்து தமிழ்சினிமாவில் ஒட்டுமொத்தமாக ஒரு ஆல்பம் ஹிட் மற்றும் படத்தின் மயக்கும் பின்னனி இசையும் ஹிட் அடித்தது.
காதலின் வெவ்வேறு நிலைகளை எடுத்துக்கூறுமாறு படத்தில் அமைந்திருக்கும் மெலோடி பாடல்கள் இன்று வரை அனைவரின் ப்லேலிஸ்டிலும் இடம்பிடிக்கிறது,குறிப்பாக “வை திஸ் கொலவெறி டி”என்ற பாடல் அதிரி புதிரி ஹிட் வெளியான ஒரு மணிநேரத்தில் அதிக வுயூஸ்களை பெற்ற பாடல்,என உலகப் பிரபலம் ஆனது “வை திஸ் கொலவெறி டி”.”3” திரைப்பட்த்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்,
தனது முதல் வெற்றியை தொடர்ந்து,சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “எதிர் நீச்சல்”திரைப்படத்திற்கு இசை அமைத்தார் அனிருத்,முதல் படத்தை போலவே இந்த திரைப்பட்த்தின் ஆல்பமும் ஹிட்.
தொடர்ந்து,வணக்கம் சென்னை,மான் கராத்தே,வேலையில்லா பட்டதாரி என வரிசையாக வெளியான அனைத்து படத்தின் பாடல்களுமே தெறி ஹிட்,வி.ஐ.பி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்ததன் மூலமாக யூத் ஐகான்-ஆக கருதப்பட்டார்,தொடர் வெற்றிகளுக்கு பிறகு பெரிய ஹீரோக்களின் திரைப்படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது,அதனை மிக சரியாக பயன்படுத்தி கொண்டார் அனி,கத்தி,வேதாளம்,மீண்டும் தனுஷுடன் மாரி,காக்கி சட்டை,நானும் ரௌடி தான்,தங்க மகன்,ரெமோ என்று மேக்ஸிமம் அனைத்து பாடல்களுமே ஹிட்.பொதுவாவே தன் படத்தில் ஒரு பாடல் மட்டும் ஹிட் ஆவதை விட,தன் இசையமைக்கும் ஆல்பமே ஹிட்ஆவதை தான் விரும்புவதாகவும்,அனிருத் கூறியுள்ளார்.
இடையில் இண்டிபென்டன்ட் ஆல்பங்கள் இசையமைப்பதும் பாடல்கள் பாடுவதிலும் பிஸியாக இருக்கிறார்.பீப் பாடல்,தொடங்கி மாதம் ஏதோ ஒரு காண்ட்ரோவர்சியில் சிக்கினாலும்,அடுத்த வாரமே ஏதேனும் ஒரு அவார்டு ஃபங்ஷனில் வந்து விருதை வாங்கி கெத்து காட்டுவர் அனிருத்.
இப்போது,சூர்யா நடிப்பில் “தானா சேந்த கூட்டம்.சிவகார்த்தியேன் நடிப்பில் வேலைக்காரன்,விஜையின் 62-வது திரைப்படம் மற்றும் அஜீத்தின் 58-வது திரைப்படம் என வரிசையாக பட்டையை கிளப்ப தயாராகிறார் அனிருத்.

`மாஸ்டர்' படம் எப்படி இருக்கிறது?! மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults

கமல்ஹாசனுடன் இணையும் `காதலா காதலா' நண்பன்... `விக்ரம்' அப்டேட்ஸ்! #Vikram

இரண்டாவது படம் வெளியாகும் முன்பே விஜய் படம்... யார் இந்த இயக்குநர் நெல்சன்?! #VIjay65

#Vijay65 இயக்குநர் நெல்சன் கன்ஃபார்ம்?! அறிவிப்பு எப்போது?

`மாஸ்டர்' டீஸர்... இதையெல்லாம் மிஸ் பண்ணாம பார்த்தீங்களா? #Master #HiddenDetails

`விக்ரம்' கமல்... பாலா, சம்யுக்தாவுக்குக் கிடுக்கிப்பிடி; சுரேஷின் நிலை என்ன? பிக்பாஸ் – நாள் 34

வலைபாயுதே

Chellamma Video Song Making | Jonita Gandhi | DOCTOR | Anirudh | Sivakarthikeyan

Doctor - Chellamma Lyric Making Video | Sivakarthikeyan | Anirudh Ravichander | Nelson | Jonita

Chellama - Doctor First Single Details | Anirudh | Sivakarthikeyan | inbox

கை கோத்த இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான்... `யாரையும் விட்டுடக்கூடாது!'
