Banner 1
மாணவி

அனிதா

ப்ளஸ் டூ-வில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் 1,176. நல்ல மதிப்பெண் இருந்தும் கிராமத்தின் விருப்பத்தை நிஜமாக்க விடாமல், தடையாக வந்து நின்றது ‘நீட்’ தேர்வு. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிற்கும் மாணவிகளின் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம்வரை சென்றுள்ளார் அனிதா.

தண்ணீர் தொட்டியில் ஒரு பந்தை அழுத்தினால் என்ன ஆகும்...? திமிறி மேலே வரும்தானே...? அதுபோலத் திமிறி எழுந்தவர் அரியலூர் அனிதா. ஒரு கிராமத்தின் மருத்துவக் கனவையே ஒற்றை மனுஷியாகச் சுமந்து மேலே வந்த முதல் தலைமுறை மாணவி. 

”என்னிடம் எளிமையான கேள்வி இருக்கிறது. இங்கு எல்லோருக்கும் எல்லாமும் சரிசமமாகக் கிடைக்கிறதா... எல்லோருக்கும் ஒரே தரமான கல்வி கிடைக்கிறதா... எல்லோருடைய பொருளாதார நிலையும் ஒன்றுபோல இருக்கிறதா...இங்கு ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லையா...? எனக்குப் பெரிதாக அரசியல் புரிதல்கள் எல்லாம் ஒன்றும் இல்லை. எல்லா அரசியலும் எங்களுக்கும் தெரியும் என்பவர்கள், எனது இந்த எளிமையான கேள்விக்குப் பதில் சொல்லட்டும். இங்கு யாருக்கும் எதுவும் சரிசமமாகக் கிடைக்காதபோது அனைவருக்கும் ஒற்றைத் தேர்வு என்பது யாரை ஏமாற்றும் வேலை..?” என்று அனிதா கேட்ட கேள்விகள் அவர் மரணத்துக்குப் பிறகும் அப்படியே இருக்கிறது.

 

தொகுப்பு : விகடன் டீம்