அறந்தாங்கி நிஷா | Latest tamil news about Aranthangi Nisha | VikatanPedia
Banner 1

அறந்தாங்கி நிஷா

பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர் அறந்தாங்கி நிஷா .விஜய் டி.வியின் “கலக்க்ப் போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர். அறந்தாங்கியை சேர்ந்த இவர் பி.பி.ஏ மற்றும் எம்.பி.ஏ படித்திருக்கிறார்.

விஜய் டி.வி-யின் காமெடி கேடி... அறந்தாங்கி நிஷாவுக்கு அறிமுகம் அவசியமில்லை. பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர். ‘காமெடி எங்க ஏரியா...’ என்று ஆண்கள் கட்டிய அரணைத் தகர்த்து, அதிரடியாக உள்ளே புகுந்தவர். 

சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குநர் தாமிராவின் ‘ஆண் தேவதை’, விஷால் - சமந்தா நடிக்கும் ‘இரும்புத்திரை’ என இரண்டு படங்கள்... இடையிடையே விஜய் டி.வி நிகழ்ச்சிகள் என நிஷா செம பிஸி!

‘` `நிஷாவா... பயங்கரக் கறுப்பா இருப்பாங்களே'ன்னாங்க. அப்புறம் `கறுப்பா பயங்கரமா இருப்பாங்களே அவங்க தானே'ன்னு கலாய்ச்சாங்க. அதெல்லாம்கூட ஓகே. ஒருமுறை `கலக்கப்போவது யாரு’ல என்கூட ஷோ பண்ற பழனி அண்ணாகூட பஸ் ஸ்டாண்டுல நின்னுக்கிட்டிருந்தேன். புர்கா போட்டிருந்தேன். அவரை ஒருத்தர் பாராட்டிப் பேசிட்டிருந்தார். அப்போ ‘உங்ககூட ஒருத்தங்க லேடி கெட்டப் போட்டுக்கிட்டுப் பண்றாங்களே... சூப்பரா பண்றாங்க சார்’னு சொன்னார். பழனி அண்ணாவுக்குப் புரியலை... ‘யாரைச் சொல்றீங்க’னு கேட்டார். ‘அதான் சார் அவங்களுக்கு நீங்ககூட நிஷானு பேர் வச்சிருக்கீங்களே’ன்னார். அவர் வேணும்னெல்லாம் சொல்லலை.  பழனி அண்ணா என்னைக் கூப்பிட்டு, ‘இதுதான் அந்த நிஷா... இவங்க உண்மையிலயே பொண்ணுதான்’னு சொன்னார். அதை நினைச்சு பஸ் ஸ்டாண்டுல நைட் ரெண்டு மணிக்குச் சிரிக்க ஆரம்பிச்சு ஒரு வாரத்துக்குச் சிரிச்சிருக்கேன். நல்லாப் பார்த்துச் சொல்லுங்க... நான் பொண்ணு மாதிரி இல்லையா?’’ -  க்ளோசப்பில் முகம் காட்டி, பயங்கரமாகச் சிரிக்கவும் வைக்கிறார் நிஷா எம்.பி.ஏ. 

தொகுப்பு : விகடன் டீம்