அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா
விஜய் டி.வி-யின் காமெடி கேடி... அறந்தாங்கி நிஷாவுக்கு அறிமுகம் அவசியமில்லை. பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர். ‘காமெடி எங்க ஏரியா...’ என்று ஆண்கள் கட்டிய அரணைத் தகர்த்து, அதிரடியாக உள்ளே புகுந்தவர்.
சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குநர் தாமிராவின் ‘ஆண் தேவதை’, விஷால் - சமந்தா நடிக்கும் ‘இரும்புத்திரை’ என இரண்டு படங்கள்... இடையிடையே விஜய் டி.வி நிகழ்ச்சிகள் என நிஷா செம பிஸி!
‘` `நிஷாவா... பயங்கரக் கறுப்பா இருப்பாங்களே'ன்னாங்க. அப்புறம் `கறுப்பா பயங்கரமா இருப்பாங்களே அவங்க தானே'ன்னு கலாய்ச்சாங்க. அதெல்லாம்கூட ஓகே. ஒருமுறை `கலக்கப்போவது யாரு’ல என்கூட ஷோ பண்ற பழனி அண்ணாகூட பஸ் ஸ்டாண்டுல நின்னுக்கிட்டிருந்தேன். புர்கா போட்டிருந்தேன். அவரை ஒருத்தர் பாராட்டிப் பேசிட்டிருந்தார். அப்போ ‘உங்ககூட ஒருத்தங்க லேடி கெட்டப் போட்டுக்கிட்டுப் பண்றாங்களே... சூப்பரா பண்றாங்க சார்’னு சொன்னார். பழனி அண்ணாவுக்குப் புரியலை... ‘யாரைச் சொல்றீங்க’னு கேட்டார். ‘அதான் சார் அவங்களுக்கு நீங்ககூட நிஷானு பேர் வச்சிருக்கீங்களே’ன்னார். அவர் வேணும்னெல்லாம் சொல்லலை. பழனி அண்ணா என்னைக் கூப்பிட்டு, ‘இதுதான் அந்த நிஷா... இவங்க உண்மையிலயே பொண்ணுதான்’னு சொன்னார். அதை நினைச்சு பஸ் ஸ்டாண்டுல நைட் ரெண்டு மணிக்குச் சிரிக்க ஆரம்பிச்சு ஒரு வாரத்துக்குச் சிரிச்சிருக்கேன். நல்லாப் பார்த்துச் சொல்லுங்க... நான் பொண்ணு மாதிரி இல்லையா?’’ - க்ளோசப்பில் முகம் காட்டி, பயங்கரமாகச் சிரிக்கவும் வைக்கிறார் நிஷா எம்.பி.ஏ.

சேனல் சைட் டிஷ்

BIGG BOSS சீசன் 4: ஆரி வென்றதும், ரேகா வெளியேறியதும், பாலாஜி பயந்ததும் எதனால்?! ஒரு முழுமையான அலசல்!

`குழந்தாய்' அர்ச்சனா... குத்துறாங்க ரியோ... அழுகை ஆரி... நடிகன் பாலாஜி! பிக்பாஸ் – நாள் 99

பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி... பொங்கல் ஸ்பெஷல் என்ன தெரியுமா?!

அர்ச்சனாவின் அன்பு ஜெயிக்குமா, `அடிங்’ ஜெயிக்குமா? வெளிப்படும் ரியோ, கலாய்க்கும் பாலாஜி! பிக்பாஸ் – 70

கமலுக்கே `பாபநாசம்' டெக்னிக்கா... அன்பு கேங் அர்ச்சனா - ரியோ கபட நாடகங்கள்! பிக்பாஸ் – நாள் 69

`ராஜா வீட்டு கன்னுக்குட்டி' ரமேஷ் இன்றே வெளியேறுகிறார்... நாளை யார் தெரியுமா? #BiggBossEviction

டபுள் எவிக்ஷன்?! `அன்பு' கேங்கில் இரண்டு விக்கெட்கள் விழுமா? பிக்பாஸ் – நாள் 68

BIGG BOSS TAMIL Season 4, DAY 67 Review: Anitha and Jithan Ramesh in jail!

நிஷாவுக்கு கட் அவுட்; அனிதாவுக்கு கெட் அவுட்? ஆண்டவரே தட்டி கேட்குற நேரம் வந்துடுச்சு! பிக்பாஸ் - 67

BIGG BOSS TAMIL Season 4, Day 66 Review: Robot vs Human task - roles swapped!
