அட்லீ

அட்லீ

அட்லீ

எல்லா இயக்குனருக்கும் தனிப்பட்ட Making Style உண்டு. தன்னுடைய ஸ்டைலை தன் முதல் படமான “ராஜா ராணி”யிலே முத்திரை பதித்தார்.முதல் படமான ராஜா ராணி 100 நாட்கள் திரையரங்குகளில்  வெற்றிகரமாக ஓடியது.இரண்டாவது படமான தெறி 100 கோடி ரூபாய் வசூல் செய்தது.மூன்றாவது படமான மெர்சல் 100 கோடி ரூபாய் பட்ஜெட்,என அட்லீயின் அசுர வளர்ச்சி வியப்புக்குரியது.

பிறப்பு:-
                  
மதுரையில் செப்டம்பர் 21ஆம்  1986 ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் அருண் குமார். பிரிட்டிஷ் நாட்டின் தொழிலாளர்  கட்சியின் முன்னாள் தலைவரும்,அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான “கிளமென்ட் அட்லீ”யின் ஞாபக அர்த்தமாக அவரது பெரியப்பா வைத்த செல்லப் பெயர் அட்லீ.இவர் சத்தியபாமா பல்கலைகழகத்தில் இளங்கலை விஸ்காம் படித்து முடித்தார் .அருண் குமார் என்ற பெயரில் நிறைய பேர் இருப்பார்கள் உன்னை அட்லீ என்றே அறிமுகப்படுத்திக்கொள் என்ற தன் தாயின் அறிவுறுத்தலின்படி, தன் முதல் குறும்படத்திலிருந்து தன்னை அட்லீ என்றே அறிமுகம் செய்து கொண்டார்.

இளமைக்காலம்:-
                அட்லீயின் முதல் குறும்படமான “என் மேல் விழுந்த மழைத் துளி” தேசிய அளவில் இரண்டு விருதுகள் வாங்கிட அட்லீ என்ற  பெயர் நிலைத்துவிட்டது. இதன் பின்னர் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோரை வைத்து முகபுத்தகம் என்ற குறும்படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய வரவேற்பைக் கொடுத்தது. இவருடைய குடும்பம் மிடில் கிளாஸ் குடும்பம் என்றாலும் இவரது குடும்பம் இவர் கனவுக்கு மிகவும் துணையாக இருந்ததாம்.அட்லீயின் அம்மா அவர் குறும்படம் எடுப்பதற்காக தன்னுடைய தங்க சங்கிலியைக் கூட அடகு வைத்து பணம் கொடுத்துள்ளாராம்.

                 இயக்குனர் ஷங்கரிடம் நேர்காணலுக்காக தன்னுடைய சுயவிவரம் மற்றும் தன்னுடைய இரண்டு குறும்படங்களை அவருக்கு அனுப்பி வைக்க,அதை பார்த்து பிடித்து போன இயக்குனர் பிரமாண்டம் உடனடியாக அட்லீக்கு உதவி இயக்குனராக சேர்ந்துகொள்ளுமாறு தொலைபேசியில் அழைத்தாராம்.இது தான் அவர் வாழ்க்கையின் திருப்புமுனை என அட்லீ கூறியிருக்கிறார்.
                
                சூப்பர்ஸ்டாரின் எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அட்லீ. அப்போது ஷங்கர் சொல்ல சொல்ல அட்லீ தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எழுதுவாராம், அது தான் தனக்கு வசனம் எழுதவும், திரைக்கதை எழுதவும் இன்று வரை உதவிகரமாக உள்ளது என்று கூறியிருக்கிறார். பிறகு இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தில் இணை இயக்குனர் ஆனார்.

இயக்குனர் படலம் 
                 2013ஆம் ஆண்டு ராஜா ராணி  படத்தின்  மூலம் இயக்குனராய் திரை உலகுக்கு அறிமுகமானார்.  “Love after love failure”  என்பதை மிக அழகாகவும் உருக்கமாகவும் திரையில் காட்டியிருப்பார். ஆர்யா,ஜெய்,நயன்தாரா,நஸ்ரியா,சத்யராஜ்,சந்தானம்,சத்யன் என்று முதல்  படத்திலேயே பெரிய நட்சத்திர பட்டாளத்தை நேர்த்தியாக கையாண்டிருப்பார். விமர்சகர்களிடமும் மக்களிடையேயும் பெரும் வரவேற்பை இப்படம் பெற்றது. திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடியது.

                 அடுத்த படமே கலைப்புலி தாணு தயாரிப்பில் , இளையதளபதி விஜயை வைத்து “தெறி” போலிஸ் படத்தை இயக்கினார்.இது 2016ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளிவந்தது.இந்தப் படத்தில் விஜயின் மகளாக, நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். முள்ளும் மலரும்,உதிரிப் பூக்கள்  போன்ற கிளாசிக் படங்களை இயக்கிய மகேந்திரன் இதில் வில்லனாக நடித்து,நடிகர் அவதாரம் எடுத்தார். விஜய்,சமந்தா,ஏமி ஜாக்சன், மகேந்திரன், பிரபு,மொட்டை ராஜேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டது இப்படம். வெளியான ஆறே நாட்களில் படம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. பிள்ளைகளை அப்பாக்கள் ஒழுங்காக வளர்த்தால் நல்ல சமுதாயம் அமையும் என்பதை படத்தின் கருவாக வைத்து, பெண்கள் பாதுகாப்பு,குழந்தை தொழிலாளர், ஒப்பந்தத் தொழிலாளர் ஆகிய பிரச்சனைகளையும் கையாண்டிருப்பார்.   

                 இவர் தற்போது மீண்டும் தளபதி விஜயுடன் இணைந்து தேனாண்டாள் ஸ்டுடியோ தயாரிப்பில்,நூறு கோடி பட்ஜெட்டில் (தேனாண்டாள் தயாரிப்பில் மெர்சல் நூறாவது படம்), தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு மெர்சல் என்ற தலைப்பு வைக்கபட்டிருக்கிறது .விஜய்,சமந்தா,காஜல் அகர்வால்,நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா,கோவை சரளா,யோகி பாபு என வாயை பிளக்கும் அளவு நட்சத்திர பட்டாளம் மெர்சலிலும் உண்டு. தன் முதல் இரண்டு படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார், ஆனால் மெர்சலில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இளையதளபதியின் பிறந்த நாளான ஜூன் 21ஆம்  தேதி,2017 மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது. இது பெரும் வரவேற்பை பெற்றது.இதையடுத்து அட்லீயின் பிறந்த நாளான செப்டம்பர் 21ஆம் தேதி,2017 அன்று மெர்சல் படத்தின் டீசர் வெளிவந்தது. ஒரே நாளில் 11 கோடி பேர் இணையத்தில் பார்த்து ரசித்தார்கள். இது மட்டுமின்றி வெளியான நான்கு மணி நேரத்திலேயே 6இலட்சம் லைக்குகள் பெற்று உலகின் மிகஅதிக லைக்குகள் பெற்ற டீசராக உருவெடுத்தது.மெர்சல் படம்  இந்த ஆண்டு (2017) தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது. 

தயாரிப்பாளர் படலம் 
         இவர் இயக்குனர் மட்டுமன்று A For Apple என்ற தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து, ஜீவா நடிப்பில் வெளிவந்த “சங்கிலி புகிலி கதவ தொற” படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

``Vijay - Atlee ku NO Sollitan’’ - Devadharshini Reveals | Bigil
Gopinath Rajasekar

``Vijay - Atlee ku NO Sollitan’’ - Devadharshini Reveals | Bigil

BREAKING: Record Business for Vijay's Bigil | inbox | Atlee | Nayanthara
Gopinath Rajasekar

BREAKING: Record Business for Vijay's Bigil | inbox | Atlee | Nayanthara

BREAKING: Is Vijay's BIGIL Releasing Before Diwali Date? | Atlee | Nayanthara | Inbox
Gopinath Rajasekar

BREAKING: Is Vijay's BIGIL Releasing Before Diwali Date? | Atlee | Nayanthara | Inbox

AR Rahman Upset Over Singappenne  Bigil | Vijay | Atlee
Gopinath Rajasekar

AR Rahman Upset Over Singappenne Bigil | Vijay | Atlee

Vijay படத்தில் Atlee-க்கு நிபந்தனைகள் ? | Thalapathy 63
Vikatan Correspondent

Vijay படத்தில் Atlee-க்கு நிபந்தனைகள் ? | Thalapathy 63

மெர்சல் டீசர்ல வரும் குறியீடுகளின் பின்னணி என்ன? | MERSAL TEASER | ATLEE
Vikatan Correspondent

மெர்சல் டீசர்ல வரும் குறியீடுகளின் பின்னணி என்ன? | MERSAL TEASER | ATLEE

FUNNY: Vijay Imitation on Sets: Bigil Keerthana | Making Of Verithanam
Gopinath Rajasekar

FUNNY: Vijay Imitation on Sets: Bigil Keerthana | Making Of Verithanam

``அடுத்தவங்க உயரம்... வாய்ப்புகள்ல வர கஷ்டம்... தலை தாங்குற கணம்!'' - `பிகில்' விஜய் பன்ச்கள்
தார்மிக் லீ

``அடுத்தவங்க உயரம்... வாய்ப்புகள்ல வர கஷ்டம்... தலை தாங்குற கணம்!'' - `பிகில்' விஜய் பன்ச்கள்