பன்வாரிலால் புரோஹித் | Latest tamil news about Banwarilal Purohit | VikatanPedia
Banner 1
ஆளுநர்

பன்வாரிலால் புரோஹித்

பன்வாரிலால் புரோஹித் , ஏப்ரல் 16, 1940ஆம் ஆண்டு நவல்கா,ஜூஞ்சுனு மாவட்டம் இராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தார். இவர் மகாராஷ்ட்ரா மாநிலம், விதர்பா பிராந்தியத்தை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். அவர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்திய ஜனாதிபதியால் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டு அக்டோபர் 6 ம் தேதி முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.

பன்வாரிலால் புரோஹித் , ஏப்ரல் 16, 1940ஆம் ஆண்டு நவல்கா,ஜூஞ்சுனு மாவட்டம் இராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தார். இவர் மகாராஷ்ட்ரா மாநிலம்,  விதர்பா பிராந்தியத்தை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். அவர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்திய ஜனாதிபதியால் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டு அக்டோபர் 6 ம் தேதி முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பன்வாரிலால் ஆளுநர் ஆகும் முன்பு வித்யாசாகர் ராவ் பொறுப்பு ஆளுநராக பணியாற்றினார். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி அஸ்ஸாம் மாநில ஆளுநராக இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டிருந்தார்.இது மட்டுமின்றி மேகாலயாவின் பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றி வந்தார்.பன்வாரிலால் நாக்பூர்   நாடாளுமன்றத்   தொகுதியில்  இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இரு முறை இந்திய தேசிய காங்கிரஸ்  கட்சியிலிருந்தும் ஒரு முறை பாரதிய ஜனதா கட்சியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றவர்.இவரது மனைவி பெயர் புஸ்பா புரோஹித்.


ஆரம்பகால அரசியல்:         
பன்வாரிலால் முதன் முதலாக  அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு என்ற  கட்சியில் சேர்ந்து தன் அரசியல் வாழ்வை தொடங்கினார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து இந்திரா காந்தி பிரிந்து துவக்கிய இந்திரா காங்கிரஸ் கட்சி சார்பில், 1978 ஆம் ஆண்டில் நாக்பூர் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர் நாக்பூர் தெற்கு தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டில் மகாராட்டிர மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் 1982 ஆம் ஆண்டு குடிசை மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.1984 ஆம் ஆண்டில் அவர் 8 வது மக்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 ஆம் ஆண்டில் அவர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .


அரசியல் வாழ்வு: 
           பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தபோது அதில் சேர்ந்தார். 1991 ஆம் ஆண்டில் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் அவர் இந்திய தேசிய காங்கிரசின் தத்தா மெகேவிடம் தோல்வியடைந்தார்.1996 இல், 11வது மக்களவைக்கு பாஜக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரமோத் மகாஜனுடன் உருவாகிய தீவிர வேறுபாடு காரணமாக, பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1999-ல் ராம்தேக்கில் இருந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

                2003 ஆம் ஆண்டில் விதார்பா ராஜ்யக் கட்சி என்ற தனது சொந்த கட்சியைத் தொடங்கினார். 2004 இல் நாக்பூரிலிருந்து லோக் சபா தேர்தலில் போட்டியிட்டார். 2009 இல் மீண்டும் பா.ஜ.க.வின் சார்பாக போட்டியிட்டார். இந்திய தேசிய காங்கிரசின் விலாஸ் முத்தெமரிடம் தோல்வியுற்றார்.பாதுகாப்புத் துறையின் பாராளுமன்ற ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். கோபால கிருஷ்ண கோகலே தொடங்கிய “ஹிடேவாடா“ என்ற ஆங்கில நாளிதழை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார் பன்வாரிலால்.1979 இல் நாக்பூர் தினசரி செய்தித்தாளான தி ஹிடேவாடாவின் உரிமையை சர்வீன்ஸ் ஆஃப் இந்தியா சொஸைட்டியிடமிருந்து புரோகித் பெற்றார். இச்செய்தித்தாள் 1911 இல் கோபால் கிருஷ்ணா கோகலேவால் தொடங்கப்பட்டது. புரோகித் அதன் தற்போதைய நிர்வாக இயக்குனர் ஆவார். இவர் நாக்பூரில் உள்ள ஸ்ரீ ராம்தேபாபா பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் தலைவராகவும் உள்ளார்.

தொகுப்பு : இரா.வாஞ்சிநாதன்