பாரதிதாசன்

பாரதிதாசன்
தமிழ்த்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வர் ; தமிழுக்கென்று தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்; தமிழக மக்களுக்கு எழுச்சி உணர்வை தூண்டியவர் ; புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டவர்; 'தமிழ்க்கு அமுதென்று என்று பேர் ' இந்த வரிகளுக்கு சொந்தக்காரர்; தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக்கதாசிரியர், எழுத்தாளர் என பல பரிமாணங்களில் தனது திறமையை நிருபித்தவர்தான், பாரதம் வியக்கும் "பாரதிதாசன் "
பிறப்பு :
புதுச்சேரியில் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் நாள் கனகசபை மற்றும் லக்குமி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இவரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம்.
பள்ளி வாழ்க்கை :
திருப்புள்ளி சாமியிடம் தனது ஆரம்பகல்வியை பயின்றார். பிரெஞ்சு மொழி பள்ளியில் கல்வி பயின்றாலும் தமிழில் எழுதுவதிலேயே அதிக ஈடுபாடு காட்டினார். தனது 16 - வது வயதில் கல்வே கல்லூரியில் சேர்ந்தார். தமிழ் புலமையின் காரணமாக மூன்று ஆண்டுகள் படிக்க வேண்டிய கல்வியை இரண்டாண்டுகளிலேயே முடித்தார். (1919 ) தனது 18 வது வயதிலிருந்து தமிழாசிரியராக பணியாற்றினார். மகாவித்வான் பு.அ. பெரியசாமி, புலவர் பங்காரு பத்தரிடமும் இலக்கண இலக்கியங்கள், சித்தாந்த வேதாந்த பாடங்களை கற்றார். சிறு வயது முதலே கவிதை இசையில் ஆர்வம் இருந்ததால் பாடல்களை எழுதி தோழர்களுக்கு பாடிகாட்டுவார். நன்றாக. பாடல் பாடுவார், உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவார், சிலம்பம் மற்றும் குத்துசண்டை போன்ற கலைகளை பயின்றார்.
கனகசுப்புரத்தினத்திலிருந்து பாரதியின்தாசனாக,...
ஒரு நாள் தன் நண்பரின் திருமணத்திற்கு சென்றிருந்தார், பாரதிதாசன். அங்கு பாரதியும் சென்றிருந்தார். பாரதிதாசன் விருந்துக்குப் பிறகு திருமணத்தில் பாரதியாரின் நாட்டுபுற பாடல் ஒன்றை பாடியுள்ளார். பாரதியார் திருமணத்திற்கு வந்திருப்பது அவருக்கு தெரியாது. அப்பாடல் நிகழ்வே இவர்கள் இருவரையும் முதன்முதலில் சந்திக்க வைத்தது. பிறகு, பாரதி தன் நண்பர்கள் முன்னால் பாரதிதாசனை அறிமுகம் செய்து பாடல் பாடுமாறு கூறியுள்ளார் அப்பொழுது எங்கெங்கு காணிணும் சக்தியடா என்ற பாடலை பாடியுள்ளார். பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். தேச சேவகன், புதுவை கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்தபோதினி, சுதேசிமித்திரன், புதுவை முரசு, குயில் போன்ற இதழ்களின் ஆசிரியராக பணியாற்றினார்.
அரசியல் வாழ்க்கை :
தந்தை பெரியாரின் தீவிர தொண்டர் அதனால் திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். 1954 ஆம் ஆண்டு புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் அரசியல் வாழ்க்கை அதிக நாள் நீடிக்கவில்லை, சட்ட மன்ற தேர்தலில் 1960 - ல் தோல்வியை தழுவினார்.
பாரதிதாசனின் படைப்புகள்:
கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்ற தலைப்புகளிலேயே தனது படைப்புகளை எழுதினார். கவிதை, இசைப்பாடல், நாடகம், புதினம், சிறுகதை, கட்டுரை என பல வடிவங்களில் படைப்புகளை எழுதினார். பாரதிதாசனின் சில படைப்புகள்,...
1. அம்மைச்சி ( நாடகம்)
2. 1948 - ல் உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு, உரிமை கொண்டாட்டமா, கடவுளை கண்டீர், எது பழிப்பு ( குயில் )
3. கழைக்கூத்தியின் காதல்( நாடகம்)
4. 1955- கலை மன்றம், விடுதலை வேட்கை.
5. 1959 - வீட்டுக் கோழியும் காட்டுக்கோழியும் குயில் புதுவை
6. 1960- கற்பு காப்பியம் ( குயில்)
7. சத்திமுத்துப் புலவர் (நாடகம்)
8. நீலவண்ணன் புறப்பாடு
9. பிசிராந்தையார் (நாடகம்)
10.1967 - ல் பாரி நிலையம்
11. பெண்கள் விடுதலை
12. ரஸ்புடீன் (நாடகம்)
13. திருக்குறளின் பெருமையை வெளிப்படுத்தம் வகையில் ஐந்து கட்டளை கலித்துறை பாடலையும் எழுதியுள்ளார்.
பாரதிதாசனின் நூல்கள்:
பாரதிதாசனின் மறைவிற்கு பின்னரும் அவருடைய படைப்புகள் நூல் வடிவத்தில் வெளியிடப்பட்டது.
பாரதிதாசனின் நூல்கள்
- 1926 மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
- 1930 சஞ்சீவி பர்வதத்தின் சாரல், சிறுவர் சிறுமியர் தேசிய கீதம், தாழ்த்தப்பட்டோர் சமத்துவ பாட்டு, தொண்டர் வழி நடைப் பாட்டு, கதர் இராட்டினப்பாட்டு
- 1931 சுய மரியாதை சுடர்.
- 1937 புரட்சி கவி.
- 1938 பாரதிதாசன் 1- ம் தொகுதி கவிதைகள், எதிர்பாராத முத்தம்.
- 1939 இரணியன் அல்லது இணையற்ற வீரன்
- 1942 இசையமுது ( முதலாம் தொகுதி), குடும்ப விளக்கு ( முதல் பகுதி ஒரு நாள் நிகழ்ச்சி)
- 1943 பாரதிதாசன் ஆத்திச்சூடி, முல்லை பதிப்பகம்
- 1944 அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, காதல் நினைவுகள், குடும்ப விளக்கு 2- ம் பகுதி விருந்தோம்பல், நல்ல தீர்ப்பு.
- 1945 எது இசை? , கற்கண்டு, தமிழியக்கம்,
- 1946 அமைதி
- 1947 சௌயமின், கவிஞர் பேசுகிறார்
- 1948 அகத்தியன் விட்ட புதுக்கரடி, இந்தியன் எதிர்ப்பு பாடல்கள், கடற்மேற் குமிழிகள், காதலா? கடமையா?, குடும்ப விளக்கு மூன்றாம் பகுதி திருமணம், சேர தாண்டவம், திராவிடர் திருப்பாடல், படித்த பெண்கள், முல்லைக்காடு.
- 1949 ஏற்றப்பாட்டு, தமிழச்சியின் கத்தி, திராவிடர் புரட்சி திருமணத் திட்டம், பாரதிதாசன் 2 - ம் தொகுதி கவிதைகள்.
- 1950 சத்திமுத்தப்புலவர், இன்பக்கடல், குடும்ப விளக்கு 4- ம் பகுதி மக்கட்பேறு, குடும்பவிளக்கு 5- ம் பகுதி முதியோர் காதல்.
- 1951 அமிழ்து எது?
- 1952 இசையமுது இரண்டாம் தொகுதி
- 1954 பொங்கல் வாழ்த்துக் குவியல், சேரதாண்டவம்
- 1955 பாரதிதாசன் கதைகள்
- 1956 தேனருவி
- 1958 இளைஞர் இலக்கியம்
- 1959 குறிஞ்சிதிட்டு, பாரதிதாசன் நாடகங்கள்
- 1962 கண்ணகி புரட்சிகாப்பியம், மணிமேகலை வெண்பா
- 1964 பண்மணித்திரள்
- 1967 பிசிராந்தையர்
- 1977 காதல் பாடல்கள், குயில் பாடல்கள், பாரதிதாசன் 4- ம் தொகுதி கவிதைகள்
- 1978 ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, தமிழுக்கு அமிழ்தென்று பேர், நாள் மலர்கள், புகழ் மலர்கள், வேங்கையே எழுக
- 1980 ஏழைகள் சிரிக்கிறார்கள், கோயில் இருகோணங்கள், பாட்டுக்கு இலக்கணம், வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வமா?
- 1981 கேட்டலும், கிளத்தலும், சிரிக்கும் சிந்தனைகள், பாரதிதாசன் பேசுகிறார்
- 1984 மானுடம் போற்று
- 1992 குமரகுருபரர், பாரதிதாசனின் புதினங்கள், பாரதிதாசன் திருக்குறள் உரை
- 1994 இலக்கிய கோலங்கள், உலகம் உன் உயிர், உலகுக்கோர் ஐந்தொழுக்கம், பாரதிதாசனின் புதிய நாடகங்கள்
- 2008 பாரதிதாசன் கடிதங்கள்
- 2012 பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ்
திரைப்படத்துறை :
1937 - ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்தார், பாரதிதாசன். திரைப்படக் கதை, பாடல், உரையாடல், தயாரிப்பு என அனைத்திதிலும் தன் திறயை காட்டினார். திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாக திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசனே. பின்வரும் படங்களுக்கு திரைக்கதை, உரையாடல், பாடல் எழுதியுள்ளார்.
- 1937 பாலாமணி அல்லது பக்காத் திருடன்,
- 1938 இராமானுஜர்
- 1940 கவிகாளமேகம்
- 1944 சுலோசனா
- 1947 ஆயிரம் தலை வாங்கிய. ஆபூர்வ சிந்தாமணி
- 1949 பொன்முடி
- 1952 வளையாபதி.
திரைப்பட பாடல்கள் :
பாரதிதாசன் இயற்றிய பாடல்கள் இன்றளவும் நம் இதயம் விட்டு நீங்காதவை. பாரதிதாசன் இயற்றிய திரைப்பட பாடல்கள்,..பாலாமணி அல்லது பக்காத் திருடன், ஸ்ரீராமானுஜர், கவி காளமேகம் போன்ற படங்களில் அனைத்துப் பாடல்களும் எழுதியுள்ளார்.
- வெண்ணிலாவும் வானும் போல (பொன்முடி),
- துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ (ஓர் இரவு),
- அதோ பாரடி அவரே என் கணவர் (கல்யாணி),
- வாழ்க வாழ்க வாழ்கவே (பராசக்தி),
- பசி என்று வந்தால் ஒரு பிடி சோறு (பணம்),
- அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும் (அந்தமான்),
- குளிர்தாமரை மலர் பொய்கை மற்றும் குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி (வளையாபதி),
- தாயகமே வாழ்க தாயகமே வாழ்க (பூங்கோதை),
- ஆலையின் சங்கே நீ ஊதாயோ (ரத்த கண்கள்),
- எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் (என் மகள்),
- நீலவான் ஆடைக்குள் (கோமதியின் காதலன்),
- ஆடற்கலைக்கழகு தேடப் பிறந்தவள் (நானே ராஜா),
- தலைவாரி பூச்சூடி உன்னை பாட (ரங்கோன்),
- கோரிக்கையற்று கிடக்குதண்ணே (குலதெய்வம்),
- ஒரே ஒரு பைசா பெரிசா, பாடி பாடி பாடி வாடி, மனதிற்க்கேற்ற மயிலே வான்விட்டு
- (பெற்ற மனம்),
- தமிழுக்கும் அமுதென்று பேர் (பஞ்சவர்ணக்கிளி),
- எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் (கலங்கரை விளக்கம்),
- வலியோர் சிலர் எளியோர்தமை (மணிமகுடம்),
- புதியதோர் உலகம் செய்வோம் (சந்திரோதயம்),
- எங்கெங்கு காணினும் சக்தியடா (நம்ம வீட்டு தெய்வம்) ,
- சித்திரச் சோலைகளே (நான் ஏன் பிறந்தேன்),
- புதியதோர் உலகம் செய்வோம் (பல்லாண்டு வாழ்க),
- காலையிளம் பரிதியிலே (கண்ணன் ஒரு கைக்குழந்தை),
- அம்மா உன்றன் கைவளையாய் (நிஜங்கள்),
- கொலை வாளினை எடடா (சிலப்பதிகாரம்),
- அவளும் நானும் அமுதம் தமிழும் (அச்சம் என் மடமையடா).
சிறப்புபட்டங்களும், விருதுகளும்:
பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார் 'புரட்சிக் கவிஞர்' என்ற பட்டமும், அறிஞர் அண்ணா 'புரட்சி கவி' என்ற பட்டமும் வழங்கினார். பாரதிதாசனின் நினைவாகப் தமிழ்நாடு மாநில அரசாங்கம் சிறந்த தமிழ் கவிஞருக்கு பாரதிதாசன் விருது வழங்கி வருகிறது. 'பாரதிதாசன் பல்கலைக்கழகம்' என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டுள்ளது.
- 1946 - ல் 'அமைதி ஊமை' என்ற நாடகத்திற்கு தங்க கிளி பரிசு வென்றார்.
- 1970 ஆம் ஆண்டு இவரின் மரணத்திற்குப் பிறகு 'பிசிராந்தையர் ' நாடகத்திற்காக சாஹித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
- 1990 இல் பாரதிதாசன் படைப்புகளை தமிழ்நாடு அரசு பொதுவுடைமை ஆக்கியது.
- 2001- ல் அக்டோபர் மாதம், ஒன்பதாம் தேதி சென்னை தபால் துறை பாரதிதாசனின் நினைவாக அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது.
இல்லற வாழ்க்கை:
பாரதிதாசன் அவர்கள் தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டில் (1920) பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மன்னர்மன்னன் என்ற மகனும் சரஸ்வதி, வசந்தா, ரமணி என்ற மூன்று மகள்களும் பிறந்தனர்.
மறைவு :
தமிழக்கு பெரும் தொண்டாற்றிய பாவேந்தர் தனது 73 - ம் வயதில், 21. 04. 1964 ஆண்டு காலமானார்.

இலக்கிய காதல்! | சிறுகதை| My Vikatan

பாரதிதாசனுக்கு சென்னையில் நினைவு இல்லம் அமையுமா?

வாசகர் மேடை: எல்லாமே இருக்கு... ஆனா இல்லை!

``எதற்கு இந்தத் தேவையில்லாத ஆணிகள்?'' - உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு நினைவலைகள்

புதுச்சேரி: `கலைமாமணி... தமிழ்மாமணி' -பாவேந்தர் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் காலமானார்!

மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி... சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்ததினப் பகிர்வு!

பெரியார்: காலாவதியானவரா, காலம் கடந்தவரா? பிறந்ததினப் பகிர்வு #Periyar

“முடியாது... மிஸ்டர் காந்தி!” - பாரதி நினைவுதினப் பகிர்வு

54 பணியிடங்களுக்கு ரூ.45 லட்சம் பேரம்?! - பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சுற்றும் அடுத்த சர்ச்சை

அமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்!

15 வகையான கட்டணங்கள் உயர்வு! - போராட்டத்தைத் தொடங்கிய திருச்சி மாணவர்கள்
