சுப்ரமணிய பாரதியார்

சுப்ரமணிய பாரதியார்

சுப்ரமணிய பாரதியார்

பாரதி இதுவெறும் பெயர் மாத்திரமல்ல இதுவொரு சகாப்தம், காலங்காலமாக தொண்மையின் தோள்களில் தூங்கிக் கொண்டிருந்த தமிழ், இவர் மீசையின் முருக்கத்தில் தான் புத்துணர்ச்சி பெற்றது. கவிதையை புரட்சிக்காக பயன்படுத்திய மிகச் சில கவிஞர்களில் பாரதிக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு....  "கத்தி முனையை விட பேனா முனைக்கு சக்தி அதிகம்" என்பதை தமிழுக்கும், தமிழர்க்கும் முதன்முதலாக அறிமுகப்படுத்திய ஒரு மிகப்பெரிய பேராற்றல் பாரதியார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கும், அந்த பிறப்பு  நாளை ஒரு சரித்திரமாக மாற வாழும் நாட்களில் நாம் எடுத்துக்கொள்ளுகிற சிரத்தை,  சமூகத்தின்பால் நமக்கு இருக்கிற அக்கறை, சுயநலம் கலக்காத பொதுநலம் என்று நாம் ஆற்றுகிற கடமைகள்தான் காரணம். திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரத்திற்கு மட்டும் தமிழை சுமந்த மண் என்று ஒரு பெரிய பேறு கிடைத்திருக்கிறது! திசம்பர் 11, 1882 ம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் ஒரு நெருப்பு குழந்தையாய் பிறந்தது, அந்த நெருப்புக்கு சுப்பிரமணியன் என்று பெயர் வைத்து அழகு பார்தார்கள்... அதுதான் பிந்நாளில் பாரதி என்று பார்முழுக்க போற்றப்பட்டது.

பாரதியார் தனக்கு ஐந்து வயது இருக்கும்போதே தன் தாயார் இலக்குமி அம்மாளை இழந்துவிட்டார். அதன்பிறகு தன் பாட்டி பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார். தன்னுடைய ஏழு வயதிலேயே தமிழின் மீது தீராத காதலும், வற்றாத கவிப்புலமையும் கொண்டவராகத் திகழ்ந்தார். இவருக்கு பதினொரு வயதிருக்கும்போது இவருடைய கவிப்புலைமையை பார்த்து வியந்த எட்டயபுர சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு ஆட்படுத்தி அன்போடு வழங்கிய பட்டம் "பாரதியார்" அன்றிலிருந்துதான் சுப்பிரமணி ,சுப்பிரமணிய பாரதியார் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

இப்படி தமிழும் கவிதையுமாக பாரதி வலம் வந்து கொண்டிருக்கும்போது அவரின் தந்தை தன் மகன் கணிதமும் தொழில்நுட்பமும் பயில வேண்டும் என்று ஆசைப்பட்டு தமிழ்ப்பள்ளியில் சேர்க்காமல் ஆங்கிலமும் கணிதமும் கற்கச்சொல்லி திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார்.அங்கு சென்று படித்துக் கொண்டிருந்தபோதே செல்லாமாள் என்ற ஏழுவயது சிறுமியை பாரதிக்கு திருமணம் செய்து வைத்தார்.

ஆனால் பிந்நாளில் பாரதியார் இதுபோன்ற பால்ய திருமணங்களை வன்மையாக கண்டித்தார். " பாலருந்தும் மழலையர் தம்மையே கோலமாக மணத்திடைக் கூட்டும் இப்பாதகர்கள் இன்னும் ஆயிரமாண்டு அடிமைகளாக இருந்து அழிவர்" என்று சாடினார்.

பாரதியாரின் தந்நை நல்ல நிலையில் இருந்தபோது எட்டயபுரத்தில் பருத்தி அரவை ஆலை தொடங்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்களையும் உதிரி பாகங்களையும் சுமந்து வந்த கப்பல் நடுக்கடலில் மூழ்கிப் போக பெருத்த நஷ்டம் ஏற்பட்டது அந்த கவலையிலிருந்து மீள முடியாமல் நோய்வாய்ப்பட்டு இறந்தே போனார். அப்போது பாரதிக்கு வயது வெறும் பதினாறு தான்! தந்தையின் இறப்புக்கு பிறகு பாரதியின் குடும்பம் வறுமையில் வாடியது.பின்னர் பாரதி தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி காசிக்கு சென்றார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கற்றுத் தேர்ந்தார்.

ஆங்கில மொழியிலும் அளவற்ற புலமை பெற்று விளங்கினார், ஷெல்லி பைரனின் கவிதைகளில் பாரதியார் மிகுதியான ஈடுபாடு கொண்டிருந்தார். இதன் காரணமாக ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரில் ஏராளமான கட்டூரைகளை எழுதியிருக்கிறார்.
தவிர பெங்காலி ஹச் போன்ற மொழிகளும் பாரதி மிகவும் புலமைபெற்று விளங்கினார். 
இத்தனை மொழிகளை கற்றுத் தேர்ந்த பாரதி "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதானது எங்கும் காணோம்" என்று தமிழின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொன்னார்.

பெண் அடிமைத்தனங்களும், ஜாதிய குரூரங்களும் இடைவெளி இல்லாமல் அரங்கேறி கொண்டிருந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தவர் பாரதி. தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தை சாடிப் பேசுவதற்கு ஒரு பெரிய துணிச்சல் வேண்டும் அந்த துணிச்சல் பாரதியிடம் இருந்தது. முதன்முதலாக தீண்டாமைக்கு எதிராக பார்ப்பனர் என்று பாகுபடில்லாமல் விமர்சித்தார். சமுதாயம் வகுத்த பொய்யான விழுமியங்களையும் மூடப் பழக்கங்களையும் வேரறுக்க ஆசைப்பட்டு தான் பூண்டிருந்த பூநூலை அறுத்தெறிந்தார்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று குழந்தைகளிடத்தில் சமத்துவ மனோபாவத்தை தம் கவிதைகளின் வாயிலாக கற்பித்தார்....
பெண் அடிமைத்தனங்களை பெயர்த்தெறிய போராடினார்.


"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் 
அறிவில் ஓங்கி இவ்வையம் தளைக்குமாம்"

என்று பெண்களுக்கு புத்துயிர் தந்து புதுமைப்பெண் படைத்தார்.

நான்கு ஆண்டுகள் காசியில் இருந்த பாரதியார் பின்பு எட்டயபுரம் திரும்பி மன்னரின் அழைப்பை ஏற்று அரசவைக் கவிஞராகப் பணியாற்றினார். 1903-ம் ஆண்டு அவருடைய எழுத்துக்கள் முதன்முதலாக அச்சில் வெளியாகின. அதன்பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியாராகப் பணியில் இருந்தார்.

சுதேசமித்திரனின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு பாரதியின் சுதந்திர தாகம் எல்லையில்லாமல் விரிந்தது. சுதந்திரம் குறித்தும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகவும் பல்வேறு கட்டூரைகளை எழுதினார். 1907ம் ஆண்டு இந்தியா என்ற வார இதழையும் பாலபாரதம் என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். வ.உ.சி க்கு அளிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை எதிர்த்து தலையங்கம் தீட்டீனார். இவர் எழுத்துக்களின் வீரியம் உறங்கிக் கொண்டிருந்த உணர்வுகளை எல்லாம் மக்கள் மனதிலிருந்து தட்டி எழுப்பியது... இதைப் புரிந்துகொண்ட பிரிட்டிஷ் அரசு பாரதியை கைதுசெய்ய திட்டமிட்டது.

தன் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் தமிழகத்தில் இருந்து பாரதி பாண்டிச்சேரிக்கு இடம்பெயர்ந்தார். பாண்டிச்சேரியில் இருந்துகொண்டுதான் பாரதி காலத்தால் அழியாத காவியங்களான கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்றவற்றை படைத்தார். கீதையை தமிழில் மொழிபெயர்த்தார். 

பாண்டிச்சேரியில் இருந்துகொண்டே இந்தியா இதழில் சுதந்திர போராட்டங்களை தூண்டிவிடுகிற பல கட்டூரைகளை எழுதினார். பாரதிக்கு தமிழகத்தில் ஆதரவு பெருகியது. பாரதியின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் சுதந்திரப் போராட்டங்களைத் தூண்டியது.
இதனால் ஆங்கிலேய அரசு இந்தியா இதழை தடை செய்ய உத்தரவிட்டது.

1918ம் ஆண்டு ஆங்கிலேய அரசு தமிழக எல்லையில் பாரதியை கைது செய்து 34 நாட்கள் சிறையில் வைத்து பின் விடுதலை செய்தது. விடுதலைக்கு பின் கடையம் என்னும் ஊருக்கு குடியேறிய பாரதி வறுமையால் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் அத்தனை வறுமையிலும் தோள்கொடுத்து கூடவே நின்று துணையிருந்தார் செல்லம்மாள்.

வறுமையில் வாடியபோதும் கவிஞருக்கும் அன்பும் குறையவில்லை, செருக்கும் குறையவில்லை. மதிய உணவுக்காக வைத்திருந்த சிறிதளவு அரிசியையும் அள்ளி காகத்திற்கு வீசிவிட்டு "காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடியவராயிற்றே....

தன் நண்பன் தனக்களித்த பட்டாடையை வழியில் மேலாடை இன்றி அவதிபட்ட வறியவருக்கு வழங்கி ஆனந்தப்பட்டார் கவிஞர்.
செல்வத்தில் மட்டுமில்லை இயற்கை ஆயுளையும் அவருக்குத் தாரளமாய் தரவில்லை.....
1921 ம் ஆண்டு திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவிலில் எமன் அவரை உயிரை பறிக்க எருமை மேல் வராமல் யானைமேல் வந்திருக்கிறான். யானைத் தூக்கியெறிந்ததால் படுகாயம் அடைந்து நோய்வாய்ப்பட்டு கடுமையான வயிற்றுக் கடுப்பு நோயால் அதே ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இந்த உலகிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு வயது வெறும் 39.


காலம் கவிஞரை தின்றது ஆனால் அவன் கவிதை இன்று காலத்தைதை வென்றது. இருந்தபோதும் அப்படிபட்ட மகானின் உடல் மயானத்திற்கு செல்லும்போது இருபதுபேர் கூட உடனில்லாது போனது நாம் தமிழுக்கு செய்த அவமரியாதை.. காலம் முழுக்க பிறக்கும் ஒவ்வொரு தமிழ் குழந்தையும் இதற்காக மன்னிப்பு கேட்டாலும் அது போதாது.

எழுதிய நூல்கள்:

கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், தேசிய கீதங்கள், பாரதி அறுபத்தாறு, ஞானப்பாடல்கள், தோத்திரப்பாடல்கள்,விடுதலைப் பாடல்கள், விநாயகர் நான்மணிமாலை, பாரதியார் பகவத் கீதை, பதஞ்சலியோக சூத்திரம், நவதந்திரக் கதைகள், புதிய ஆத்திச்சூடி, பொன்வால் நரி, ஆறில் ஒரு பங்கு, சந்திரிகையின் கதை, ஞானரதம், சின்னஞ்சிறு கிளியே.

பெரிது கேள்!
பாலு சத்யா

பெரிது கேள்!

வரலாறு தெரியாத மோடியே… வடநாடு மட்டும்தான் இந்தியாவா?
Guest Contributor

வரலாறு தெரியாத மோடியே… வடநாடு மட்டும்தான் இந்தியாவா?

திருச்சி - ஊறும் வரலாறு 27: `குறிஞ்சித் தேன்' எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்!
கவிஞர் நந்தலாலா

திருச்சி - ஊறும் வரலாறு 27: `குறிஞ்சித் தேன்' எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்!

திருச்சி - ஊறும் வரலாறு - 23: சொல் புதிது - கவிஞர் திருலோக சீதாராம்!
கவிஞர் நந்தலாலா

திருச்சி - ஊறும் வரலாறு - 23: சொல் புதிது - கவிஞர் திருலோக சீதாராம்!

“பாரதி நூல்களை மட்டும் பதிப்பிப்பதே என் வேலை” - பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் பேட்டி!
சு. அருண் பிரசாத்

“பாரதி நூல்களை மட்டும் பதிப்பிப்பதே என் வேலை” - பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் பேட்டி!

இன்னமும் வற்றாத பாரதி வீட்டுக் கிணறு... தற்போது எப்படி இருக்கிறது மகாகவி பிறந்த வீடு?
அய்யனார் ராஜன்

இன்னமும் வற்றாத பாரதி வீட்டுக் கிணறு... தற்போது எப்படி இருக்கிறது மகாகவி பிறந்த வீடு?

பாரதியார் நினைவு நூற்றாண்டு: தற்காலத் தமிழகத்திலும் பாரதியின் தேவை என்ன? - சமூக ஆர்வலர்களின் பார்வை
ரா.அரவிந்தராஜ்

பாரதியார் நினைவு நூற்றாண்டு: தற்காலத் தமிழகத்திலும் பாரதியின் தேவை என்ன? - சமூக ஆர்வலர்களின் பார்வை

“பாரதியை ஆங்கிலத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்!”
சு. அருண் பிரசாத்

“பாரதியை ஆங்கிலத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்!”

“பாரதியைப் பரப்புவோம்!”
சு. அருண் பிரசாத்

“பாரதியைப் பரப்புவோம்!”

யார் மனிதர் என்பதற்கான மகாகவி பாரதியின் விளக்கம் | Sumathi Sri | Thinamthorum Thiruvarul
சைலபதி

யார் மனிதர் என்பதற்கான மகாகவி பாரதியின் விளக்கம் | Sumathi Sri | Thinamthorum Thiruvarul

படிப்பறை
சைலபதி

படிப்பறை

``எதற்கு இந்தத் தேவையில்லாத ஆணிகள்?'' - உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு நினைவலைகள்
மகுடேசுவரன்

``எதற்கு இந்தத் தேவையில்லாத ஆணிகள்?'' - உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு நினைவலைகள்