Bigg Boss Tamil

Bigg Boss Tamil

Bigg Boss Tamil

பிக் பாஸ், இந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சி. இது 10 சீசன்களை கடந்து அங்கு சாதனை படைத்துள்ளது. இது கன்னடத்திலும் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பானது. தற்போது தமிழுக்கு வந்திருக்கும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

கான்சப்ட்:

குறிப்பிட்ட போட்டியாளர்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு வீட்டில் தங்க வைக்கப்படுவார்கள். நிகழ்ச்சி தொடங்கிய அன்று அந்த வீட்டிக்குள் அனுமதிக்கப்படுபவர்கள், எலிமினேட் செய்யப்பட்டாலோ அல்லது நிகழ்ச்சி முடிந்தாலோதான் அந்த வீட்டில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். அந்த வீட்டில் தொலைக்காட்சி, தொலைபேசி, செல்போன், இணையம், கடிகாரம், பேனா, பென்சில், பேப்பர்... எந்தத் தொலைத் தொடர்புக்கும் அனுமதி கிடையாது. போட்டியாளர்கள் வெளிஉலகத் தொடர்பில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்படுவார்கள். கழிவறை, குளியலறை தவிர அந்த வீட்டின் அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டு போட்டியாளர்களின் செயல்பாடுகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும். 

அவர்களுக்குள் போட்டிகள், கேம்கள் நடத்தப்படும். இவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து பொதுமக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். குறைவான வாக்குகளைப் பெறுபவர்கள் வாரம் ஒருவராக போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இறுதி வாரத்தில் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்களில் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்பட்டு அவருக்கு பரிசு வழங்கப்படும். இதுதான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். 

போட்டியாளார்கள்:

தற்போது தமிழில் ஶ்ரீ, அனுயா, ஓவியா, ஆரவ், ஆர்த்தி, காயத்ரி ரகுராம், ஜூலி, நமீதா, கஞ்சா கருப்பு, வையாபுரி, பரணி, ரைஸா, சக்தி, சிநேகன், கணேஷ் வெங்கட்ராம் என பதினைந்து போட்டியாளர்களை வைத்து நடத்தப்படுகிறது. 

இதுவரை அனுயா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, நமீதா, ஜூலி, சக்தி ஆகியோர் குறைவாக ஓட்டுகள் பெற்று வெளியேற்றப்பட்டனர். ஸ்ரீ உடல்நிலை சரியில்லாததால் வெளியேறினார். பரணி மற்றும் ஓவியா மன அழுத்தம் காரணமாக தாங்களாகவே வெளியேறினர். இந்நிலையில் பிந்து மாதவி புதிய போட்டியாளாராக வீட்டுக்குள் நுழைந்தார். தற்போது மீண்டும் இன்னொரு பிரபலம் பிக்பாஸ் போட்டியாளாராக வீட்டுக்குள் நுழைகிறார். அவர் நடிகை சுஜா வருணி யாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 30: இன்றோடு முடிவடைகிறது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. நடிகர் ஸ்ரீ தொடங்கி, பிந்துமாதவி வரை... பலரையும் வடிகட்டிய பிறகு எஞ்சி இருப்பதோ... சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரீஷ் கல்யாண் என நால்வர்தாம்.பலத்த ஆரவாரத்துடனும் ஆர்ப்பரிப்பரிப்புக்கும் மத்தியில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக ஆரவை கமல் அறிவித்தார். அந்த விருதை கமல்ஹாசன் ஆரவ்வுக்கு வழங்கினார். 

ஜூன் 17, 2018: பிக்பாஸ் முதல் சீசனின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இரண்டாவது சீசன் இன்று ஆரம்பிக்கப்பட்டது. முதல் நாளான இன்று போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி ஆடம்பரமாக தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 2.

பிக் பாஸின் ஒவ்வொரு சீசனைப் பற்றி படிக்க:  Bigg Boss Tamil 2

``அந்த `boy bestie' கூடத்தானே கல்யாணம்னு கேக்குறாங்க?!'' - `பிக் பாஸ்' ஜூலி
அய்யனார் ராஜன்

``அந்த `boy bestie' கூடத்தானே கல்யாணம்னு கேக்குறாங்க?!'' - `பிக் பாஸ்' ஜூலி

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Vanitha Wedding Viral Video | Peter Vanitha Marriage Video | Bigg Boss, Vijay Tv
அஜித் குமார் S

Vanitha Wedding Viral Video | Peter Vanitha Marriage Video | Bigg Boss, Vijay Tv

பிக் பாஸ்... செப்டம்பரில் சீஸன் 4... போட்டியாளர்களுக்கு முதல் கண்டிஷன் என்ன தெரியுமா?!
அய்யனார் ராஜன்

பிக் பாஸ்... செப்டம்பரில் சீஸன் 4... போட்டியாளர்களுக்கு முதல் கண்டிஷன் என்ன தெரியுமா?!

`` `வனிதா பீட்டர்'னு என் பேரை மாத்துறளவுக்கு காதலிக்கப் போறாராம்!'' - உற்சாகத்தில் வனிதா விஜயகுமார்
சனா

`` `வனிதா பீட்டர்'னு என் பேரை மாத்துறளவுக்கு காதலிக்கப் போறாராம்!'' - உற்சாகத்தில் வனிதா விஜயகுமார்

``ஆமா, எனக்கு கல்யாணம் ஆகப்போகுது... மாப்பிள்ளை யார்னா?'' - வனிதா விஜயகுமார்
சனா

``ஆமா, எனக்கு கல்யாணம் ஆகப்போகுது... மாப்பிள்ளை யார்னா?'' - வனிதா விஜயகுமார்

``கமல் சார், இவனுக்கு அறிவில்லைன்னு கண்டுபிடிச்சிடுவாரோனு பயந்துட்டேன்!'' - `டாக்டர்' நெல்சன்
மா.பாண்டியராஜன்

``கமல் சார், இவனுக்கு அறிவில்லைன்னு கண்டுபிடிச்சிடுவாரோனு பயந்துட்டேன்!'' - `டாக்டர்' நெல்சன்

`தாடி பாலாஜி மகளுக்கு உதவல.. பழையபடி ஹெச்.ஆர்!' - `பிக் பாஸ்' நித்யா திடீர் முடிவு?
அய்யனார் ராஜன்

`தாடி பாலாஜி மகளுக்கு உதவல.. பழையபடி ஹெச்.ஆர்!' - `பிக் பாஸ்' நித்யா திடீர் முடிவு?

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

கொரோனாவை எலிமினேட் பண்ணுவோம்
ச. ஆனந்தப்பிரியா

கொரோனாவை எலிமினேட் பண்ணுவோம்

``மருத்துவம் முடியாது; ஆனா, தூய்மை பணியாளர்கள்கூட வேலை செய்யத் தயார்!" - சினேகன்
சனா

``மருத்துவம் முடியாது; ஆனா, தூய்மை பணியாளர்கள்கூட வேலை செய்யத் தயார்!" - சினேகன்

`` `கப் முக்கியம் அக்கா'னு மீம் போட்டாங்க; அப்பதான் யோசிச்சேன்!" - `குக் வித் கோமாளி' வனிதா
சனா

`` `கப் முக்கியம் அக்கா'னு மீம் போட்டாங்க; அப்பதான் யோசிச்சேன்!" - `குக் வித் கோமாளி' வனிதா