பாஜக

பாஜக
இந்திய நாட்டின் இரண்டு முக்கிய பெரும் கட்சிகளில் ஒன்றானது , பாரதிய ஜனதா கட்சி. பா.ஜ.க என அழைக்கப்படுகிறது. பா.ஜ.க வலதுசாரி சிந்தனையுள்ள இயக்கம்.இந்தக் கட்சியின் சின்னம் தாமரை .இந்துத்துவம் தான் பா.ஜ.க வின் மூச்சு. 1989ஆம் ஆண்டு இந்து தேசியவாதத்தை தன் சித்தாந்தமாய் ஆக்கிக்கொண்டது .ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க (ஆர்.எஸ்.எஸ்) கொள்கைகளும் பா.ஜ.க வின் கொள்கைகளும் மிக நெருக்கமான தொடர்புடையவை. நேரடியாக தேர்தல் அரசியலில் ஈடுபடாத ஆர்.எஸ்.எஸ் , தேர்தல் அரசியலில் பா.ஜ.க வுக்குத் தன் ஆதரவைக் கொடுக்கும். இந்தக் கட்சி காவியை தன கட்சி நிறமாகக் கொண்டது.
ஆரம்பப்புள்ளி
1951 ஆம் ஆண்டு சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வலதுசாரி சிந்தனையுள்ள இயக்கம் பாரதிய ஜன சங்கம், இது தான் தற்போதைய பா.ஜ.க வின் அடித்தளம். முதன்முதலில் இந்திய தேசிய காங்கிரசில் இருந்த சியாமா பிரசாத் முகர்ஜி 1950 வரை நேருவின் அமைச்சரவையில் தொழில் மற்றும் விநியோகத்துறை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால். கட்சியிலிருந்து பிரிந்து பாரதிய ஜன சங்கத்தை ஆரம்பித்தார். இந்தக் கட்சியின் முக்கிய நோக்கம் இந்தியாவின் இந்து மத கலாச்சார அடையாளத்தை காத்து வளர்த்தெடுப்பது. இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வ தேர்தலில் மூன்று லோக் சபை இடங்களில் மட்டுமே வெற்றி கண்டது. 1967 வரை சிறிய கட்சியாகவே வலம் வந்தது.
1953 ஆம் ஆண்டு இந்தியாவை ஜம்மு- காஷ்மீருடன் இணைக்க நடந்த போராட்டமே ஜன சங்கம் முன்னிறுத்திய முதல் போராட்டம். அந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட சியாமா பிரசாத் முக்கர்ஜி மாரடைப்பு காரணமாக சிறையிலேயே உயிரிழந்தார். இதன் பின்னர் மௌலி சந்திர சர்மா தலைவர் தேர்தலில் தேர்ந்தேடுக்கபட்டாலும் உட்கட்சி பூசல் காரணமாக ஆர்.எஸ்.எஸ்.இலிருந்து வெளியே தள்ளப்பட்டதால், இவருக்கு அடுத்து கட்சியின் மிகப்பெரும் ஆளுமையாக இருந்த தீனதயாள் உபாத்யாயா கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அடுத்த பதினைந்து ஆண்டுகள் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து கட்சியை வளர்த்தார். 1965 ஆம் ஆண்டு தீனதயாள் உபாத்யாயா எழுதிய ஒரு நூலின் அடிப்படையில் ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’ என்ற தத்துவத்தை அதிகாரப் பூர்வக் கொள்கையாகக் கொண்டது.
1967ஆம் ஆண்டு வரை அவரே கட்சியின் தலைமையாக இருந்தார்.இவரின் மறைவுக்கு பின்னர் வாஜ்பாய் தலைவரானார். அனைவருக்குமான பொதுவியல் சட்டம், பசுவதைத் தடுப்புச் சட்டம் , காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை திரும்ப பெறுவது, ஹிந்தி மொழியை வளர்த்தெடுப்பது போன்றவற்றை கொள்கையாய் கொண்டு செயல்பட்டது. இந்த கட்சியைப் போன்றே கொள்கைகளையுடைய பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மத்திய பிரதேசம் , பீகார் , உத்திர பிரதேசம் போன்ற ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஆட்சியமைத்தது.
ஜனதா தளமாக உருவெடுத்தல்
1977இல் நெருக்கடி நிலை பிரகடனம் அமலில் இருந்தபோது ஆளும் இந்திராகாந்தி அரசை எதிர்த்து, ஜனதா மோர்ச்சா, பாரதிய லோக் தால், சுதந்திராக் கட்சி, இந்திய சோசலிஸக் கட்சி ஆகிய கட்சிகளோடு பாரதிய ஜன சங்கமும் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் ஒன்றிணைந்து ஜனதா கட்சி என்றானது.
1977-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனதா கட்சி ஆளும் இந்திரா காந்தி அரசை தோற்கடித்து, காங்கிரஸ் அல்லாத முதல் நடுவணரசை அமைத்தது. அப்போது அடல் பிகாரி வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ஜனதா தளம் அரசு பொறுப்பேற்ற காலத்தில் இந்து முஸ்லிம்கள் இடையே கலவரங்கள் அதிகரித்தது. முன்னாள் ஜன சங்கத்தின் உறுப்பினர்கள் இந்தக் கலவரங்களில் ஈடுபட , ஜனதா தளத்தின் மற்ற பிற கட்சிகள் ஆர்.எஸ்.எஸ். இலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. இதற்கு ஜன சங்கம் மறுப்பு தெரிவிக்க , ஜனதா கட்சியிலிருந்து வெளியேறி ஜனதா(எஸ்) என்ற புதிய கட்சியை தோற்றுவித்தார் ராஜ்நாராயணன், இதனால் சிறுபான்மையாக பலவீனமடைந்த ஜனதா தள அரசு கவிழ்ந்தது.
பா.ஜ.க உருவானது
1980-ல் மொரார்ஜி தேசாயின் ஆட்சி கவிழ்ந்த பின்னர், ஆர்.எஸ்.எஸ்., ஜனதா தளம் இரண்டிலும் உறுப்பினராக இருத்தல் கூடாதென ஜனதா தளத்தின் தேசிய நிர்வாக சபை அறிவிக்க, முந்தைய ஜன சங்கத்தின் உறுப்பினர்கள் ஜனதா கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா என்னும் கட்சியை தோற்றுவித்தனர். அடல் பிஹாரி வாஜ்பாய் இதன் முதல் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். இந்து தேசியவாதமும் காந்தியின் சோசலிஸ கொள்கையையும் முன்னிறுத்தி நின்ற பா.ஜ.க. 1984-ல் நடந்த தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தது. வாஜ்பாயின் இந்த அரசியல் தந்திரம் தோல்வியடைய, 1984ஆம் ஆண்டு அத்வானி கட்சி தலைவரானார், இவரின் தலைமையில் பா.ஜ.க தீவிர இந்து தேசியவாதத்தை கையில் எடுத்துகொண்டது. ராமஜென்மபூமி இயக்கத்தை விஷ்வ இந்து பரிஷத் முன்னெடுத்தது அப்போது பா.ஜ.க அதற்கு ஆதரவு தெரிவித்தது. ராமர் பிறந்த இடம் அயோத்தி எனவும் தற்பொழுது பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் எனவும் பல ரத யாத்திரைகள் செய்து விழிப்புணர்வு மேற்கொண்டார் அத்வானி. டிசம்பர் 6 ,1992ஆம் ஆண்டு விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டு , பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் அரங்கேரிய இந்து முஸ்லிம் கலவரத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து விஷ்வ இந்து பரிஷத் தடை செய்யப்பட்டது. அத்வானி உட்பட பல இந்துத்துவ தலைவர்கள் கலவரத்திற்கு காரணமானவர்கள் என கைது செய்யப்பட்டனர். பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் பல விமர்சனங்களுக்கு பா.ஜ.க ஆளானாலும், இந்துக்களின் ஆதரவு பெருகியது. 1993ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலிலும் 1995ஆம் ஆண்டு குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது. 1996 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் நூற்றியருபத்தியொரு இடங்களைப் பெற்று வெற்றி கண்டது பா.ஜ.க. அத்வானி முன்னர் அறிவித்தது போலவே வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் இந்த ஆட்சி வெறும் பதிமூன்று நாட்களில் கவிழ்ந்தது. பின்னர் 1998 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சமதா கட்சி , சிரோமனி அகாலி தளம் , சிவா சேனா , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தது, தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது. வாஜ்பாய் பிரதமராகி ஓராண்டில் பா.ஜ.க வுக்கும் ஆ.தி.மு.க வுக்கும் ஏற்பட்ட மோதலில் ஆதரவை அ.இ.அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா திரும்பப் பெற்றதால் கூட்டணி உடைந்து, நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்தப்பட்டது, இதில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது, இதனால் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தல் நடக்கும் வரை காபந்து அரசாக நீடித்த வாஜ்பாயின் பா.ஜ.க அரசு கார்கில் போரில் வெற்றி பெற்றதால் வாஜ்பாயின் புகழ் பரவியது ,அதிகமான மக்கள் ஆதரவுடன் மீண்டும் வாஜ்பாய் 1999 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 296 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க மட்டும் நூற்றியென்பத்திமூன்று இடங்களை கைப்பற்றியது. இந்த அரசு 2004ஆம் ஆண்டு வரை நீடித்து முழு ஆட்சிகாலத்தையும் பூர்த்தி செய்தது. 2002ஆம் ஆண்டு குஜராத்தில் இந்து- முஸ்லிம் இடையே மிகப்பெரும் கலவரம் உண்டானது. அதில் பல கொலை,கொள்ளை, பாலியல் வன்முறைகள் ஆகியவை நிகழ்ந்தது.இதில் 1,044 பேர் உயிரிழந்தனர் , 223 பேரை காணவில்லை, 2,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் 790 பேர் முஸ்லிம் எனவும் 254 பேர் இந்து எனவும் கூறப்படுகிறது. இந்த மத மோதல்களுக்கு அன்றைய குஜராத் முதலமைச்சரும் , இன்றைய புதிய இந்தியாவின் பிரதமருமான நரேந்திர மோடி தான் காரணம் என பல்வேறு தரப்பினர் கடுமையாக சாடினார். 2004 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியுற்றதற்கு இந்தக் கலவரமும் ஒரு முக்கிய காரணமென கருதப்படுகிறது.
தொடர்தோல்வி
தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2004 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வென்று டாக்டர். மன்மோகன் சிங் பிரதமராகக் கொண்டு அரசமைத்தது.
கர்நாடகாவில், மே 2008 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வென்றது. இதுவே தென்னிந்திய மாநிலத்தில் பா.ஜ.க வென்ற முதல் முறை. அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோற்று தனது ஆட்சியை இழந்தது. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் தோல்வியுற்றது , அதனால் அதன் பலம் 116 ஆகக் குறைந்தது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 இடங்களில் வென்றது. பா.ஜ.க. மட்டுமே 282 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். எக்கச்சக்க பொய் பரப்புரை , போலியான தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவையால் தான் பா.ஜ.க ஆட்சியை பிடித்தது என்று பல்வேறு விமர்சனங்கள் பா.ஜ.க மீது குவிந்த வண்ணம் இருக்கிறது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பினால் இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் பாதிப்படைந்தது என பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் கூறினார்கள். 2017ஆம் ஆண்டு,ஜூலையில் கொண்டு வந்த ஜி.எஸ்.டி ஆகிய திட்டங்கள் மக்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையிலேயே இருந்து வருகிறது.

Tamil News Live Today: மதிமுக-விலிருந்து விலகுகிறாரா திருப்பூர் துரைசாமி?

``திருமாவளவன் மட்டுமே சாராய உயிரிழப்புகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார்!" - செல்லூர் ராஜூ

``புகார் கூறிய மல்யுத்த வீராங்கனைகள், எந்த ஆதாரத்தையும் இதுவரை அளிக்கவில்லை!" - அண்ணாமலை

``கலங்கி நிற்பவர்களின் முகத்தை மார்பிங் செய்கிறார்களே..." - வீராங்கனை சாக்ஷி மாலிக் வேதனை!

``சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது; குழந்தை சாவுக்குத் தமிழக அரசே முழுப் பொறுப்பு’’- அண்ணாமலை

``தமிழ் ஆதீனங்களை நாடாளுமன்றத்துக்கு அழைத்துப் பெருமை சேர்த்த முதல் பிரதமர், மோடி!" - மதுரை ஆதீனம்

``வருங்காலத்தில் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்..!" - புதிய நாடாளுமன்றத்தில் மோடி உறுதி

புதிய நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீராங்கனைகள் கைது; ராகுல் கண்டனம்!

"அமைதியைச் சீர்குலைத்தால் அம்பேத்கரின் அரசமைப்பு அதிகாரத்தைக் காட்டுவோம்" - பிரியங்க் கார்கே காட்டம்

`தமிழில் நடந்த பூஜைகள்... செங்கோலை நிறுவிய மோடி!' - நாடாளுமன்றத் திறப்பு விழா ஹைலைட்ஸ் போட்டோ ஆல்பம்

`விவாதிக்க நான் ரெடி' `நானும் ரெடி'- பொன்முடி Vs அண்ணாமலை; முற்றும் வார்த்தைப்போரில் நடப்பதென்ன?
