Budget 2018

Budget 2018

Budget 2018

Union Budget 2018 Highlights:

 

இந்த 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் விவசாய வளர்ச்சி தொடர்பான பல அறிவிப்புகள் இருந்தன. வேளாண் துறை சார்ந்த உள்கட்டமைப்புகளுக்காக ரூ.22 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, 42 வேளாண் பூங்காக்கள் அமைப்பு; விவசாயக் கூட்டுறவு சங்கங்களுக்கு 100 சதவிகித வருமான வரி விலக்கு, வேளாண் துறையின் மேம்பாட்டுக்காக ரூ.500 கோடி நிதியில் ‘ஆபரேஷன் க்ரீன்’ திட்டம், வேளாண் ஏற்றுமதியை 10,000 கோடி டாலராக உயர்த்த இலக்கு, உணவுப்பதப்படுத்துதல் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கியிருப்பது, மீன் வளத்துறையின் மேம்பாட்டுக்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு என பல அறிவிப்புகள் விவசாயத் துறை மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு வழிசெய்து தருவதாக இருந்தது

விவசாயத்துக்கு அடுத்தபடியாக, மருத்துவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் 5 லட்சம் மருத்துவ மையங்களை அமைப்பது, 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது தவிர, 10 கோடி ஏழைக் குடும்பங்களின் சுகாதாரத்துக்காக, தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பீடு வழங்குவது போன்றவை முக்கியமான அறிவிப்புகளாகும்.

உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் 8 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது, முதல்முறையாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இ.பி.எஃப் தொகையை 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைத்திருப்பது, மிகவும் மூத்த குடிமக்களின் மருத்துவச் செலவுக்கு ரூ.50 ஆயிரம் வரை வரிச் சலுகை, ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட்டில் போடப்படும் பணத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை வரித் தள்ளுபடி.

ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் குற்றங்களைத் தடுக்க ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் படும் என்றும், அனைத்து ரயில்களிலும் இலவச வைஃபை வசதி செய்து தரப்படும் என்றும் பட்ஜெட்டில் சொல்லப் பட்டுள்ளன. 25,000 பேருக்கும் அதிகமாகப் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் வசதி செய்து தரப்படும் எனவும், நாடு முழுக்க 18,000 கி.மீ தூரத்திற்கு புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப் படும் என்றும், 5,000 கி.மீ தூரத்திற்கு அகல ரயில் பாதைகளாக மாற்றப்படும் என்றும் சொல்லப் பட்டுள்ளன.

பட்ஜெட்டில்  ரூ.3,794 கோடி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முதலீட்டுக்காக ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், முத்ரா யோஜனா திட்டத்தில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்குக் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்திருப்பதும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் புதிய பணியாளர் களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாக 12 சதவிகிதத்தை மத்திய அரசு வழங்க முன்வந்திருப்பதும் நல்ல விஷயம்

பட்ஜெட் 2020: அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு பலன் உண்டா?
தெ.சு.கவுதமன்

பட்ஜெட் 2020: அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு பலன் உண்டா?

பட்ஜெட் 2020: கடந்த 10 ஆண்டுகளின் பட்ஜெட் தொகையும், நிதி பற்றாக் குறையும்! #VikatanInfographics
செ.கார்த்திகேயன்

பட்ஜெட் 2020: கடந்த 10 ஆண்டுகளின் பட்ஜெட் தொகையும், நிதி பற்றாக் குறையும்! #VikatanInfographics

கார்ப்பரேட்களின் கடன் தள்ளுபடியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்! #Budget2020
தெ.சு.கவுதமன்

கார்ப்பரேட்களின் கடன் தள்ளுபடியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்! #Budget2020

உங்கள் கணவர் / மனைவி அதிகம் செலவு செய்பவரா... அதை இப்படியும் மாற்றலாம்! 
பா.கவின்

உங்கள் கணவர் / மனைவி அதிகம் செலவு செய்பவரா... அதை இப்படியும் மாற்றலாம்!