தீபா

தீபா

தீபா

சிறு அறிமுகம்
 

ஜெ. தீபா. தமிழகத்தின் தற்போதைய இளம் பெண் அரசியல்தலைவர். முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள். லண்டனில் இதழியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். சில காலம் பத்திரிகையாளராக பணியாற்றியவர். அத்தை ஜெயலலிதாவின் இறப்புக்குப்பின் அதிரடியாக அரசியலுக்கு வந்தவர். ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்த சர்ச்சையை அடுத்த சசிகலாவுடன் முரண்பட்டு 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை துவக்கி அதன் பொருளாளராக இருந்தார். பின்னர் சில சலசலப்புகள் எழுந்ததையடுத்து செயலாளராக பொறுப்பு எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அமைப்பின் பணிகளில் தீவிரமாக இயங்கிவருகிறார். தற்போது ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தீபா அம்மா பேரவையின் சார்பாக போட்டியிடுகிறார்.

 பிறப்பு
 

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார்  வெளிநாட்டில் படித்தவர். இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கும் 1971 ம் ஆண்டு  திருமணம் நடந்தது. நடிகை செம்மீன் புகழ் 'ஷீலா' வின் உறவிரான விஜயலட்சுமி- ஜெயக்குமார் தம்பதிக்கு தீபா, தீபக் என இருபிள்ளைகள். ஜெயக்குமார் திருமணத்திற்குப்பின் சகோதரி ஜெயலலிதாவுடன் போயஸ்கார்டன் இல்லத்திலேயே சிறிதுகாலம் வசித்தார். அங்கு 1974 ம்ஆண்டு நவம்பர் 12 ந்தேதி பிறந்தவர் தீபா. தீபா பிறந்தபோது அவருக்கு பெயரிட்டது அத்தை ஜெயலலிதாதான். சில வருடங்களில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஜெயக்குமார் குடும்பம் போயஸ் கார்டனிலிருந்து வெளியேறி தி.நகரில் இப்போது உள்ள சிவஞானம் தெரு இல்லத்திற்கு குடிபுகுந்தது. தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் இருவருமே வெளிநாட்டில் படிக்கவைக்கப்பட்டனர். 

தனிப்பட்ட வாழ்க்கை
 

புகழ்பெற்ற நடிகையாக இருந்தபோதே அண்ணன் ஜெயக்குமாருக்கு தானே முன்னின்று திருமணம் செய்துவைத்து போயஸ் கார்டனிலேயே தங்க வைத்திருந்தார் ஜெயலலிதா. ஆனால் குடும்ப பிரச்னையால் மனவருத்தம் அடைந்து சில வருடங்களில் ஜெயக்குமார் குடும்பம் அங்கிருந்து வெளியேறியது. சந்தியா வழியில் சொந்தமான தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள இல்லத்திற்கு அவர்கள் குடிபுகுந்தனர். தீபா வளர்ந்தது அங்குதான். பள்ளிப்படிப்பை முடித்தபின் இதழியல் படிக்க லண்டன் சென்றார் தீபா. 

 1995ம் ஆண்டு  தீபாவின் தந்தையான ஜெயக்குமார் ஒரு விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அதுதான் தீபாவின் தி.நகர் வீட்டுக்கு ஜெயலலிதா கடைசியாக வந்தது.  

படிப்பை முடித்துக்கொண்டு அவர் சென்னை திரும்பியபின் கடந்த 2012 ம் ஆண்டு நவம்பர் 11 ந்தேதி அவருக்கும் மாதவன் என்ற தொழிலதிபருக்கும் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. திருமணத் தேதியை ஜெயலலிதாவிடம் கூறி முன்கூட்டியே ஒப்புதல் பெற்றுதான் திருமண ஏற்பாடுகள் நடந்தது. இருப்பினும் ஜெயலலிதா அந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. 

இந்த வருத்தத்தில் இருந்தபோதே இன்னொரு சோகம் அந்த குடும்பத்தில் நிகழ்ந்தது. திருமணம் முடிந்த 20 வது நாள் தீபாவின் தாயார் விஜயலட்சுமி மரணமடைந்தார். அந்த துக்க நிகழ்விலும் ஜெயலலிதா கலந்துகொள்ளாதது தீபாவின் மனதில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. 

Deepa with jayalalitha and Sasikala

சம்பிரதாயமாக தம்பதி சமேதராக தங்களை வீட்டிற்கு அழைத்து அத்தை வாழ்த்துவார் என்ற தீபாவின் எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனதில் சோர்ந்துபோனார் தீபா. தாய் தந்தையற்ற தங்களுக்கு ஒரே ரத்த உறவான ஜெயலலிதாவின் புறக்கணிப்பை அவரால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. சசிகலாவின் துாண்டுதலின்பேரால்தான் தன் திருமணத்தையும் அம்மாவின் துக்கநிகழ்வையும் அத்தை ஜெயலலிதா தவிர்த்தார் என பரபரப்பு குற்றஞ்சாட்டினார் தீபா.  அதன்பின் சில சந்தரப்பங்களில் ஜெயலலிதாவை போயஸ் கார்டன் இல்லத்தில் தீபா சந்தித்து உரையாடினார். ஆனால் மீண்டும் அவருக்கு போயஸ் கார்டன் இல்லம் மூடப்பட்டது. ஜெயலலிதாவின் ரத்த உறவனா தீபா அவருடன் இணக்கமான நட்பில் இருப்பது தங்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் சசிகலா திட்டமிட்டு தீபாவை விரட்டியடித்ததாக தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து பல முறை அத்தையை சந்திக்க முயன்றும் தோல்வியே கிடைத்தது. இருப்பினும் அவர் முயற்சியை கைவிடவில்லை. இறுதியாக கடந்த 2002 ம் ஆண்டு சந்தித்ததுதான் கடைசி தடவை. அதன்பின் அவரை சந்தித்தது அவரது இறப்புக்குப்பின்தான். இந்த துக்க நிகழ்விலும் அவர் சசிகலா தரப்பால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 

அரசியல் பங்களிப்பு
 

தீபா இயல்பில் பத்திரிகையாளர். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருக்கு அரசியல் ஆர்வம்  அவ்வளவாக இல்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் அதிமுக சசிகலாவின் கட்டுப்பாட்டில் வந்தபின் தீபாவும் அரசியலில் ஆர்வம் காட்டத்துவங்கினார். தன் அத்தையின் மரணத்தில் ஆரம்பத்தில் சந்தேகம் இல்லையென்று தெரிவித்த அவர் பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றி ஜெயலலிதாவின் மரணம் குறித்து சர்ச்சை எழுப்பினார். இதுகுறித்து அப்போலோ மருத்துவக்குழு அளித்த விளக்கங்களை அவர் ஏற்கவில்லை என தெரிவித்தார். ஜெயலலிதாவை பார்ப்பதையும் அவருடன் பேசுவதையும் சசிகலா தரப்பு விரும்பாமல் தன்னை தொடர்ந்து புறக்கணித்ததோடு அவரது மரணத்தின்போதும் தன்னை இருட்டடிப்பு செய்தது தீபாவை எரிச்சலடையச்செய்ததால் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார்

இதையடுத்து சசிகலா மற்றும் ஓ.பி.எஸ்ஸை ஏற்காத அதிமுகவினர் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது வீட்டின் முன் குவிந்தனர். அவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை செய்துவந்த தீபா,  தன் அத்தை ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ந்தேதி தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பேன் என எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17, 2017 அன்று அறிவித்தார். சொன்னபடி அன்றைய தினம் 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா' பேரவை என்ற அமைப்பு துவங்கியதோடு அமைப்புக்கான கொடியையும் அறிமுகம் செய்தார். ஆரம்பத்தில் அதன் பொருளாளராக பொறுப்பேற்றுக்கொண்டவர் பின்னர் நியமனங்கள் குறித்து சலசலப்புகள் எழுந்ததையடுத்து சில நாட்களில் தானே அமைப்பின் செயளலாளர் என தன்னை அறிவித்துக்கொண்டார். தொடர்ந்து அறிக்கைகளும் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டுவருகிறார். 

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் சசிகலா தரப்புடன் முரண்பட்டு தனி அணியாக செயல்பட்டுவரும் ஓ.பி.எஸ்சுடன் இணைந்து செயல்படும் முகமாக இருவரும் ஜெயலலிதாவின் சமாதியில் சந்தித்தனர். தொடர்ந்து ஓ.பி.எஸ் இல்லத்திலும் இருதரப்புக்கிடையே பேச்சுவார்த்தை நிகழ்ந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ இது தோல்வியில் முடிந்தது. ஓ.பி.எஸ் உடன் இணைந்து செயல்படுவது குறித்து யோசித்து முடிவெடுப்பதாக கூறி தற்காலிகமாக இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் தீபா. இப்போது அமைப்பை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

சாதனை
 

தன் அரசியல் பயணத்தில் தன் அண்ணன் மகளை எப்போதும் வாரிசாகவோ துணையாகவோ கைப்பற்றி அழைத்துச்சென்றவரில்லை ஜெயலலிதா. ஆனால் அவருக்குப்பின் துணிச்சலாக சசிகலா தரப்பினரின் எதிர்ப்பை மீறி அரசியல் அமைப்பை துவக்கியதோடு கணிசமான அதிமுகவினரை தன் பக்கம்  இழுத்தது தீபாவின் சாதனையாக சொல்லலாம். 

விமர்சனங்கள்
 

ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்த சர்ச்சை தொடர்பான வழக்கில் ரத்த உறவுகள் மட்டுமே வழக்கு தொடரலாம் என நீதிமன்றம் சொன்னபோதும் அதுதொடர்பாக முயற்சி எடுக்காததும், மரணத்தில் மர்மம் இல்லை என முதலில் தெரிவித்து பின்னாளில் முரண்பட்டதும் விமர்சிக்கப்பட்டது.

அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் செயல்படாமல் புதியதாக பேரவையை உருவாக்கியது அவரை நம்பிவந்த தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. 

அரசியல் அனுபவமின்மையால் குழப்பமான முடிவுகள் எடுத்தவை... ஓ.பி.எஸ் உடன் இணைந்து செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதில் தெளிவான ஒரு முடிவெடுக்காதது. கட்சி நடத்துவத்றகான நிர்வாகத்திறமையின்மை, தொண்டர்களிடம் சரியான அணுகுமுறை இல்லாதது. கணவரின் முரணான பேட்டிகள், செயல்பாடுகள்  போன்றவை இவர் மீதான விமர்சனங்களாக வைக்கப்பட்டன. ஆரம்பத்தில் இருந்த அதேவேகத்துடன் சசிகலாவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்காதது, தன் அரசியல் பயணம் குறித்து தெளிவான ஒரு செயல்திட்டத்தை இதுவரை தொண்டர்கள் முன்வைக்காதது இவர்மீதான பொதுவான குற்றச்சாட்டு  

சகோதரர் தீபக் மற்றும் கணவருடன் சரியான புரிதல் இல்லாதது போன்றவை இவரின் அரசியல் பயணத்திற்கு சறுக்கலானதாக பத்திரிகைகள் விமர்சனம். 

புத்தகங்கள்
 

கவிதை எழுதும் வழக்கம் உள்ளவர் தீபா. கடந்த காலங்களில் தான் எழுதிய கவிதைகளை தொகுத்து இளவேனில் பூக்கள் என்ற கவிதைத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.

அவரும் விகடனும்
 

ஒரு அரசியல் அமைப்பின் தலைவி என்ற முறையில் தீபா, ஜூனியர் விகடன் இதழுக்கும் விகடன் டாட்காம் மின்னிதழுக்கும் பல தடவைகள் பேட்டியளித்திருக்கிறார்.  (ஜூனியர் விகடனில் வந்த தீபா பேட்டி)

கடந்த காலங்களில் தன் அத்தையை பார்க்க முடியாதவாறு சசிகலாவால் அவர் தடுக்கப்பட்ட சமயங்களில் அவரது பேட்டிகளை வெளியிட்டிருக்கிறது விகடன். இதுதவிர சர்ச்சையான நேரங்களில் விகடன் நேர்மையாக அவரது செய்திகளை வெளியிட்டிருக்கிறது.   

சசிகலாவால் தான் ஜெயலலிதாவின் துக்க நிகழ்விலும் புறக்கணிக்கப்பட்டதை விகடன் பதிவு செய்திருந்தது.

இணைப்புகள்
 

“நான் சீறும் காலம் சீக்கிரம் வரும்!” - தீபா பேட்டி

தீபாவுக்கு ஒரு காமன் மேனின் கடிதம்

மருத்துவமனையில் அத்தை.. வாசலில் அண்ணன் மகள்.. தடுக்கும் மன்னார்குடி!

தொகுப்பு : எஸ்.கிருபாகரன்

`கொசுக்கடி சிரமங்கள், அம்மாவின் இழப்பு, அந்த ஏக்கம்!’ - `கடைக்குட்டி சிங்கம்’ தீபா ஷேரிங்ஸ்
கு.ஆனந்தராஜ்

`கொசுக்கடி சிரமங்கள், அம்மாவின் இழப்பு, அந்த ஏக்கம்!’ - `கடைக்குட்டி சிங்கம்’ தீபா ஷேரிங்ஸ்

வலைபாயுதே
சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

“சசிகலா நடத்துவது நாடகம்!” - பொளேர் ஜெ.தீபா
ந.பொன்குமரகுருபரன்

“சசிகலா நடத்துவது நாடகம்!” - பொளேர் ஜெ.தீபா

ஊரே கேக்குது!
வருண்.நா

ஊரே கேக்குது!

``மனசுக்குள்ள நிறைய ஒன்லைன்ஸ் ஓடுது!" - மனம் திறக்கும் தீபா
விகடன் டீம்

``மனசுக்குள்ள நிறைய ஒன்லைன்ஸ் ஓடுது!" - மனம் திறக்கும் தீபா

 “அரசியலால நிம்மதி போச்சு!”  - What next தீபா?
ஆர்.சரவணன்

“அரசியலால நிம்மதி போச்சு!” - What next தீபா?

டென்ஷன் ராஜேந்திர பாலாஜியும் மெசேஜ் சொன்ன மிர்ச்சி சிவாவும்...
மா.பாண்டியராஜன்

டென்ஷன் ராஜேந்திர பாலாஜியும் மெசேஜ் சொன்ன மிர்ச்சி சிவாவும்...

வாசகர் மேடை: கடவுள்@facebook.com
விகடன் டீம்

வாசகர் மேடை: கடவுள்@facebook.com

நினைவகமாக மாறும் போயஸ் கார்டன் இல்லம்... சசிகலாவின் உடமைகள் என்ன ஆனது?
ஆ.பழனியப்பன்

நினைவகமாக மாறும் போயஸ் கார்டன் இல்லம்... சசிகலாவின் உடமைகள் என்ன ஆனது?

ஜெயலலிதா: சொந்த வரலாறும் சொத்து வரலாறும்!
ஆ.பழனியப்பன்

ஜெயலலிதா: சொந்த வரலாறும் சொத்து வரலாறும்!

தீபா - தீபக், ஜெயலலிதாவின் ஆயிரம் கோடி சொத்துக்கு வாரிசானது எப்படி... சட்டம் சொல்வது என்ன?
ஜெனிஃபர்.ம.ஆ

தீபா - தீபக், ஜெயலலிதாவின் ஆயிரம் கோடி சொத்துக்கு வாரிசானது எப்படி... சட்டம் சொல்வது என்ன?

மிஸ்டர் கழுகு: வெட்டுக்கிளிகள் பெயரில் ‘கட்டிங்’...
கழுகார்

மிஸ்டர் கழுகு: வெட்டுக்கிளிகள் பெயரில் ‘கட்டிங்’...