Banner 1
Demonetisation

பணமதிப்பிழப்பு நடவடிக்கை

நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி, நள்ளிரவு 12 மணியிலிருந்து 500, 100 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அந்த அறிவிப்பால், நாடு முழுவதும் ஸ்தம்பித்து போனது

நவம்பர் 8.... இரவு எட்டு மணி இருக்கும்... செய்தி சேனல்களைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அதுதான் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த முதல் ‘பிக் பிரேக்கிங்’ செய்தியாக இருந்திருக்கக்கூடும். ‘500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. உங்களிடம் இருக்கும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள். இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்றுவோம். பணமில்லாப் பரிவர்த்தனையை இந்தியாவின் பிரதானமாக்குவோம்’  என்று விரிவுரையாற்றினார் பிரதமர். திடீரென்று தடாலடியாக பணமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார் மோடி.

தொகுப்பு : விகடன் டீம்