தனுஷ்

தனுஷ்

தனுஷ்

சினிமா வட்டத்திற்குள் தனுஷ் என அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு,பிரபல இயக்குனரான கஸ்தூரி ராஜாவின் மகனும்,இயக்குனர் செல்வராகவனின் தம்பியும் ஆவார்.

தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு “துள்ளுவதோ இளமை”திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் திரை உலகில்அறிமுகமானார்.

இளமை பருவம்:

கஸ்தூரி ராஜாவிற்கு நான்காவது மகனாக 1984-ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்திருந்த தனுஷ்,கல்லூரி செல்லும் முன்பே தன் தந்தை மற்றும் அண்ணன் செல்வராகவன் வற்புறுத்தலால் சினிமாவில் காலடி எடுத்த வைத்தார்.2004-ஆம் ஆன்டு நடிகர் ரஜினிகாந்த-இன் மூத்த மகளான ஐஸ்வர்யாவை மணந்தார்.தன் மனைவியின் இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் “3” இதில் இடம்பெற்ற “வொய் திஸ் கொலவெறி டி”எனும் பாடல் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த்து.இந்த பாடலை எழுதியவர் தனுஷ் ஆவார்.

சினிமா பயணம்:

தொடர்ந்து காதல் கொண்டேன்,திருடா திருடி,தேவதையை கண்டேன்,அது ஒரு கனா காலம் ,புதுப்பேட்டை,திருவிளையாடல் ஆரம்பம், படிக்காதவன், பொல்லாதவன், குட்டி, உத்தம புத்திரன், ஆடுகளம் உள்ளிட்ட 25  படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார், மேலும் "வுண்டர்பார் பிலிம்ஸ் "எனும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வரும் தனுஷ் நடிப்பு தவிர பாடலாசிரியர்,தயாரிப்பாளார்,பாடகர் என பன்முகம் கொண்டவர் ஆவார். ஒரு நடிகனாக தன் நடிப்பு திறனை மென்மேலும் மெருகேற்றிக் கொண்ட தனுஷ்,ஆடல் பாடல் என அனைத்திலும் தன் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

கோலிவிட்டில் டைரக்டர்கள்-களின் ஹீரோவாக இருந்த தனுஷிற்கு 2013-ஆம் ஆண்டு ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் ஆனந்த எல்.ராய் இயக்கத்தில்,சோனம் கபூர் ஜோடியாக ஹிந்தியில் களம் இறங்கினார் தனுஷ்,வழக்கமான பாலிவுட் மசாலா-ஆக இல்லாமல் நடிப்பில் ஸ்கோர் செய்யும் காசியில் வாழும் இளைஞனின் இயல்பை எடுத்து சொல்லும் குந்தன் கதாபாத்திரத்தை மிகவும் அழகாக நடித்திருப்பார் தனுஷ்.

இதை தொடர்ந்து,2015-ஆம் ஆண்டு”ஷமிதாப்”திரைப்படத்தில் இயக்குனர் பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு தனுஷிற்கு கிடைத்தது.இளையராஜா-வின் இசை,பி.சி.ஶ்ரீராமின் ஒளிப்பதிவு என பாலிவுட்டில் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான ஷமிதாப்பில் கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா-உடன் ஜோடி சேர்ந்து நடித்தார் தனுஷ்.

சினிமா பயணத்தில் தன் நடிப்பிற்கான அங்கீகாரமாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு உருவான ஆடுகளம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர்ருக்கான தேசிய விருதை பெற்றார் தனுஷ்.இது இவரது திரை பயணத்தில் ஒரு மைல்கல் ஆகும்.தனக்கு இயக்கத்தில் ஆர்வம் உள்ளதாக தொடக்கம் முதல் கூறி வரும் தனுஷ் 2017-ஆம் ஆண்டு ராஜ் கிரண் மற்றும் ரேவதி இரண்டு பேரையும் வைத்து “ப.பாண்டி”எனும் படத்தை இயக்கி தன் சொந்த தயாரிப்பிலும் வெளியிட்டார்.இந்த படத்தில் ஃப்லாஷ்பேக்-இல் கவுரவ வேட்த்திலும் தனுஷ் தோன்றி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் கடும் உழைப்பிற்கு ஈடாக ஹாலிவுட் வாய்ப்பு கதவை தட்டியது.”த எக்ஸ்டார்டனரி ஜார்னி ஆஃப் ஃபகிர்”எனும் ஹாலிவுட் திரைப்பட்த்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இது விரைவில் வெளியாக உள்ளது. 

மார்ச் 26 தனுஷின் 'ஜகமே தந்திரம்'... சிம்புவின் 'மாநாடு'டன் மோதும் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'!
தேனூஸ்

மார்ச் 26 தனுஷின் 'ஜகமே தந்திரம்'... சிம்புவின் 'மாநாடு'டன் மோதும் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'!

"தமிழ் சினிமா மாதிரி கேரளாவுல நடந்தா மக்கள் சோலியை முடிச்சிடுவாங்க" - `கர்ணன்' லால்!
சனா

"தமிழ் சினிமா மாதிரி கேரளாவுல நடந்தா மக்கள் சோலியை முடிச்சிடுவாங்க" - `கர்ணன்' லால்!

“என் வைராக்கியம் இப்ப ஜெயிச்சிருக்கு!”
சனா

“என் வைராக்கியம் இப்ப ஜெயிச்சிருக்கு!”

நெட்ஃபிளிக்ஸில் 'ஜகமே தந்திரம்'... ரிலீஸ் டேட் என்ன?!
பிரசன்னா ஆதித்யா

நெட்ஃபிளிக்ஸில் 'ஜகமே தந்திரம்'... ரிலீஸ் டேட் என்ன?!

''தனுஷை என் சொந்த புள்ளையா நினைச்சு பாடுனேன்!'' -  'கண்டா வரச்சொல்லுங்க' கிடக்குழி மாரியம்மாள்
சனா

''தனுஷை என் சொந்த புள்ளையா நினைச்சு பாடுனேன்!'' - 'கண்டா வரச்சொல்லுங்க' கிடக்குழி மாரியம்மாள்

தனுஷுக்கு ஏன் போயஸ் கார்டனில் வீடு பார்த்தார் ரஜினி?!
நமது நிருபர்

தனுஷுக்கு ஏன் போயஸ் கார்டனில் வீடு பார்த்தார் ரஜினி?!

போயஸ் கார்டனில் புது வீடு... லாஸ் ஏஞ்சலீஸில் THE GRAY MAN ஷூட்டிங்... தனுஷ் பிளான் என்ன?
தேனூஸ்

போயஸ் கார்டனில் புது வீடு... லாஸ் ஏஞ்சலீஸில் THE GRAY MAN ஷூட்டிங்... தனுஷ் பிளான் என்ன?

`வலிமை'தான் டாப்பா?! மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் எது? #VikatanPollResults
விகடன் டீம்

`வலிமை'தான் டாப்பா?! மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் எது? #VikatanPollResults

“ஒன்மோர் ஷாட் தனுஷுக்குப் பிடிக்காது!”
உ. சுதர்சன் காந்தி

“ஒன்மோர் ஷாட் தனுஷுக்குப் பிடிக்காது!”

'ஜகமே தந்திரம்' பிரச்னை முடிந்தது... தியேட்டரா, ஓடிடியா எதில் ரிலீஸ் தெரியுமா?!
தேனூஸ்

'ஜகமே தந்திரம்' பிரச்னை முடிந்தது... தியேட்டரா, ஓடிடியா எதில் ரிலீஸ் தெரியுமா?!

'ஜகமே தந்திரம்' ரிலீஸ் பிரச்னை... ஓடி ஒளிகிறாரா தயாரிப்பாளர்  'Y Not' சஷிகாந்த்?!
தேனூஸ்

'ஜகமே தந்திரம்' ரிலீஸ் பிரச்னை... ஓடி ஒளிகிறாரா தயாரிப்பாளர் 'Y Not' சஷிகாந்த்?!

"Karnan வேற மாதிரி இருக்கும்!" -Theni Eashwar
Gopinath Rajasekar

"Karnan வேற மாதிரி இருக்கும்!" -Theni Eashwar