தேசிய முற்போக்கு திராவிட கழகம்

தேசிய முற்போக்கு திராவிட கழகம்

தேசிய முற்போக்கு திராவிட கழகம்

தேமுதிக உருவானது
  2005ஆம் ஆண்டு செப்டெம்பர் 14இல் மதுரையில் விஜயகாந்த் தலைமையில் தொடங்கப்பட்டது தேசிய முற்போக்கு திராவிட கழகம்.சிவப்பு-கருப்பு கொடியின் நடுவில் மஞ்சள் வட்டதுக்குள்ளே ஒரு தீப சுடர் இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.

விருதாச்சலத்தில்  முதல் வெற்றி
   2006 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது தேமுதிக.இதில் 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும் மீதம் உள்ள 2 தொகுதிகளில் (கடயநல்லூர், திருநெல்வேலி) மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டது.தேமுதிக தலைவர் விஜயகாந்த் 'விருதாச்சலம்' தொகுதியில் போட்டியிட்டு தனி ஒருவராக வெற்றிப்பெற்று,முதல் முறையாக சட்டமன்றத்தில் காலடிவைத்தார் விஜயகாந்த். மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளையே பெற்றனர்.இந்த தேர்தலில் தேமுதிகவுக்குக் கிடைத்த வாக்குகள் சதவிகிதம் 8.4 ஆகும்.தனித்து போட்டியிட்டு 27 லட்சத்து 64 ஆயிரத்து 223 வாக்குகளை பெற்றது. அடுத்து நடந்த மதுரை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 17,000 வாக்குகளை பெற்றது.

10 சதவீத வாக்குகள்
   2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே களமிறங்கியது. அதில் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியடைந்தாலும், அக்கட்சி 10 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இது பிற கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்குவிகிதம் என்பதால், அனைவராலும் உற்று நோக்கப்பட்டது தேமுதிக. 30 லட்சத்து 73 ஆயிரத்து 479 வாக்குகளை பெற்றது. இத்தேர்தலில் தேர்தல் ஆணையம் தேமுதிக விற்கு பொது சின்னம் ஒதுக்க மறுத்து விட்டது. உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது தேமுதிக.,2006 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிட்ட முரசு சின்னத்தை ஒதுக்குமாறு இடைக்கால தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.தொடர்ந்து முரசு சின்னத்தை தேமுதிகவினர் பயன்படுத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சி
  ஆரம்பம் முதல் தனித்தே களம் கண்டு வந்த தேமுதிக, முதலில் கூட்டணி அமைத்தது 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்தான். அதிமுகவுடன் கைகோர்த்து களமிறங்கிய அக்கட்சி, போட்டியிட்ட 41 தொகுதிகளில் 29 இடங்களில் வெற்றி பெற்றது.
கட்சியின் தலைவர் விஜயகாந்த், ரிஷிவந்தியம் தொகுதியில் பாமக வேட்பாளரைத் தோற்கடித்து, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். அதன் மூலம் தமிழக அரசியலில் முக்கியமானதொரு கட்சியாக உருவெடுத்தது தேமுதிக. மொத்தம் பதிவான வாக்குகளில் 7.9 சதவிகித வாக்குகள் தேமுதிகவுக்குக் கிடைத்தன.பின்னர் அதிமுகவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிக.

வெற்றி வாய்ப்பு இழப்பு
  16 வது மக்களவை தேர்தலில்  பாஜக கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக.இதில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

உறுப்பினர்கள் சரிவு
   2011 ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த நேரத்தில் தேமுதிகவிலிருந்து விலகிய 7 எம்எல்ஏக்கள், அதிமுக அரசுக்கு ஆதரவளித்தனர். இதனால் சட்டமன்றத்தில் அக்கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை சரிவைச் சந்தித்தது.

பண்ருட்டி ராமச்சந்திரன் விலகல்
  2013 ஆம் ஆண்டு நடந்த மாநிலங்களவையின் ஒரு இடத்துக்கான தேர்தலில், திமுகவை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக தோல்வியடைந்தது. அதே ஆண்டு கட்சியின் முக்கிய நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட பலர் தேமுதிகவிலிருந்து வெளியேறினர். 

வாக்கு சதவீதம் குறைவு
  2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதோடு அதன் வாக்கு சதவிகிதமும் 6.1 அளவுக்கு குறைந்துபோனது.

உருவானது மக்கள் நல கூட்டணி
  மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்தது தேமுதிக.இவ்வணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக,போட்டியிட்ட அணைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. பின்னர் நடைபெற்ற திருச்செந்தூர், வந்தவாசி, திருமங்கலம், பென்னாகரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, அனைத்திலும் தோல்வியைச் சந்தித்தாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றது. தமிழத்தில் தேமுதிகவின் வாக்கு விகிதம் 2.4 சதவிகிதமாகவும் சரிந்தது. கடும் தோல்வியால் சட்டப்பேரவையில் தற்போது தேமுதிகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. அதிக வாக்கு வங்கியோடு திகழ்ந்த தேமுதிக தற்போது கடும் வாக்கு சரிவை சந்ததித்துள்ளது.பீனிக்ஸ் பறவையாக மீண்டு (ம்) தேமுதிக எழுந்து வரும் என்று காத்திருக்கின்றனர் விஜயகாந்தின் விசுவாசிகள்....

`மது பாட்டில்களில், தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் புகைப்படத்தை ஒட்டுங்கள்..!' - விஜயகாந்த்
VM மன்சூர் கைரி

`மது பாட்டில்களில், தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் புகைப்படத்தை ஒட்டுங்கள்..!' - விஜயகாந்த்

கழுகார் பதில்கள்
கழுகார்

கழுகார் பதில்கள்

``அமைச்சர்கள், மக்கள் முகம் சுளிக்கக்கூடிய வகையில் நடந்துகொள்கின்றனர்'' - பிரேமலதா விமர்சனம்
மணிமாறன்.இரா

``அமைச்சர்கள், மக்கள் முகம் சுளிக்கக்கூடிய வகையில் நடந்துகொள்கின்றனர்'' - பிரேமலதா விமர்சனம்

``சுரங்க விரிவாக்கப் பணிக்காக நிலம்‌ கையகப்படுத்தும்‌ பணியை என்.எல்.சி கைவிட வேண்டும்" - விஜயகாந்த்
சி. அர்ச்சுணன்

``சுரங்க விரிவாக்கப் பணிக்காக நிலம்‌ கையகப்படுத்தும்‌ பணியை என்.எல்.சி கைவிட வேண்டும்" - விஜயகாந்த்

கூடா கூட்டணி... குடும்ப அரசியல்... தொடர் தோல்வி... தேவையில்லாத ஆறாவது விரலா தே.மு.தி.க?
ரா.அரவிந்தராஜ்

கூடா கூட்டணி... குடும்ப அரசியல்... தொடர் தோல்வி... தேவையில்லாத ஆறாவது விரலா தே.மு.தி.க?

அண்ணாமலைக்கு எதிராக போர்க் கொடி..! - Mr. கழுகு - தேமுதிக மீண்டெழுமா? - வேலை இழப்பு: மீள்வது எப்படி?
Mukilan P

அண்ணாமலைக்கு எதிராக போர்க் கொடி..! - Mr. கழுகு - தேமுதிக மீண்டெழுமா? - வேலை இழப்பு: மீள்வது எப்படி?

ஈரோடு கிழக்கில் படுதோல்வி: தே.மு.தி.க மீண்டெழுமா?!
ரா.அரவிந்தராஜ்

ஈரோடு கிழக்கில் படுதோல்வி: தே.மு.தி.க மீண்டெழுமா?!

ஈரோடு தேர்தல்: ``தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்பட்டது!" - விஜயகாந்த் காட்டம்
சி. அர்ச்சுணன்

ஈரோடு தேர்தல்: ``தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்பட்டது!" - விஜயகாந்த் காட்டம்

எடப்பாடிக்குச் சாதகமாகப் பொதுக்குழு தீர்ப்பு - அதிமுக சாராதவர்களின் மகிழ்ச்சிக்குப் பின்னால்..!
கோபாலகிருஷ்ணன்.வே

எடப்பாடிக்குச் சாதகமாகப் பொதுக்குழு தீர்ப்பு - அதிமுக சாராதவர்களின் மகிழ்ச்சிக்குப் பின்னால்..!

ஈரோடு: ``ஜனநாயக முறையில்‌ தேர்தலை நடத்த முடியவில்லையென்றால்‌ தேர்தல்‌ எதற்கு?" - விஜயகாந்த் கேள்வி!
சி. அர்ச்சுணன்

ஈரோடு: ``ஜனநாயக முறையில்‌ தேர்தலை நடத்த முடியவில்லையென்றால்‌ தேர்தல்‌ எதற்கு?" - விஜயகாந்த் கேள்வி!

அந்த எண்ணத்தில்தான் போட்டியிடுகிறோம்! - நா.த.க., அ.ம.மு.க., தே.மு.தி.க-வின் நம்பிக்கை!
ச.அழகுசுப்பையா

அந்த எண்ணத்தில்தான் போட்டியிடுகிறோம்! - நா.த.க., அ.ம.மு.க., தே.மு.தி.க-வின் நம்பிக்கை!

தனித்துக் களம் காணும் தேமுதிக... ஈரோடு கிழக்குக் கணக்குதான் என்ன?!
அய்யனார்.வி

தனித்துக் களம் காணும் தேமுதிக... ஈரோடு கிழக்குக் கணக்குதான் என்ன?!