துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

மலையாளத் திரைஉலகின் இளம் நடிகர், குறைந்த காலத்திலேயை திரையுலகில் தனக்கான இடத்தைப் பதித்தவர் என இவரைப் பற்றிக் கூறலாம், வேறு யாரும் அல்ல நம்ம துல்கர் சல்மான் தான்.

பிறப்பு மற்றும் இளமைக்காலம்:
        இவர் 1986ஆம் ஆண்டு ஜுலை மாதம் 28ஆம் நாள் கேரளாவிலுள்ள  கொச்சியில் பிறந்தார். இவரது தந்தை கேரளாவின் முன்னனி நடிகர்களுள் ஒருவரான மம்முட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சென்னையில் உள்ள சிஷ்யா பள்ளியில் தன் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் அமெரிகாவில் உள்ள பர்வியூ பல்கலைக்கழகத்தில் தன் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அமெரிக்காவிலேயே சில காலம் பணியாற்றியவர், பின்னர் துபாயில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சுயதொழிலும் செய்தார். பின்னர் நடிப்பில் ஆர்வம் ஏற்பட, மும்பையிலுள்ள பேரி ஜான் ஆக்டிங் ஸ்டூடியோவில் மூன்று மாத காலம் பயிற்சி பெற்றார்.

சினிமா பிரவேசம்:
          இவர் 2012ஆம் ஆண்டு ‘செகன்ட் ஷோ’ என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அதில் சல்மானின் நடிப்பு  பேசும்படியாக அமைந்தது. அதற்கு அடுத்தாக இவர் நடித்த ‘உஸ்தாத் ஹோட்டல்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அனைத்து தரப்பினருக்குமான படம் என நேஷனல் அவார்டுடன் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டும் அடித்தது. இப்படத்தின் பைசி கதாபத்திரத்திற்காக கொண்டாடப்பட்டார் துல்கர். தன் அப்பாவின் நிழலில் இருந்து தனித்துவமாக இவரின் பெயர் சொல்லும் படமாக இப்படம் அமைந்தது. மூன்றாவதாக இவர் நடித்த படம் தீவ்ரம், இப்படம் ரசிகர்களிடையை கலவையான விமர்சனங்களைப பெற்றது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபீஸிலும் தோல்வி கண்டது. பின்னர் இவர் நடித்த படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன.

கோலிவுட் என்டரி:
         2014 ஆம் ஆண்டு நஸ்ரியாவுடன் நடித்த ‘வாயை மூடி பேசவும்’ படம் துல்கருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது. இது மலையாளம் மற்றும் தமிழ் என இருமொழிப் படமாக வெளியிடப்பட்டது. மலையாளத்தில் இப்படம் பெரிதாக சோபிக்க வில்லை எனினும் தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சிறந்த அறிமுக நடிகர் விருதையும் பெற்றுத் தந்தது. பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த ‘ஓ காதல் கண்மணி’ படம் வெளியானது. இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

திரைக்கு பின்னால்:
      துல்கர் சல்மான், மலையாள நடிகர் மம்முட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் தாயார் சல்பாத். இவருடைய அக்கா சுரமி. 2011ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 22ஆம் நாள் அமல் சபியா என்ற பெண்ணை கரம் பிடித்தார். அமல் வட இந்தியாவில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தவர். இவருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மரியம் அமீரா சல்மான். இவர் பல சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.கேரள அரசின் பதுகாப்பான சாலைப் பயணம் தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்துள்ளார்.
 
Chup: Revenge of the Artist: `சைலன்ஸ்!'- இது திரை விமர்சகர்களின் வாயை மூடும் சீரியல் கில்லர் சினிமா!
ர.சீனிவாசன்

Chup: Revenge of the Artist: `சைலன்ஸ்!'- இது திரை விமர்சகர்களின் வாயை மூடும் சீரியல் கில்லர் சினிமா!

``தெற்கில் அந்தப் பழக்கமில்லை;  பாலிவுட்டில்தான்..." - துல்கர் சல்மான்
நந்தினி.ரா

``தெற்கில் அந்தப் பழக்கமில்லை; பாலிவுட்டில்தான்..." - துல்கர் சல்மான்

"எவ்ளோ நேரம் படத்துல வர்றேன்ங்கறது எனக்கு முக்கியமில்லை! ஆனா..."- ரிது வர்மா
மை.பாரதிராஜா

"எவ்ளோ நேரம் படத்துல வர்றேன்ங்கறது எனக்கு முக்கியமில்லை! ஆனா..."- ரிது வர்மா

`சீதா' மிருணாள் தாகூர் - கலர் கலர் காஸ்ட்யூமில் `சீதா ராமம்' பட நடிகை! | போட்டோ ஆல்பம்
மு.பூபாலன்

`சீதா' மிருணாள் தாகூர் - கலர் கலர் காஸ்ட்யூமில் `சீதா ராமம்' பட நடிகை! | போட்டோ ஆல்பம்

Sita Ramam:"நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்திருக்கிறேன்" -வெங்கையா நாயுடு புகழாரம்!
மு.பூபாலன்

Sita Ramam:"நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்திருக்கிறேன்" -வெங்கையா நாயுடு புகழாரம்!

ஹே! சினாமிகா - சினிமா விமர்சனம்
விகடன் விமர்சனக்குழு

ஹே! சினாமிகா - சினிமா விமர்சனம்

ஹே சினாமிகா விமர்சனம்: அர்ஜென்டினிய இறக்குமதி... ஆனால், செய்த மாற்றங்கள் கைகொடுக்கின்றனவா?
விகடன் டீம்

ஹே சினாமிகா விமர்சனம்: அர்ஜென்டினிய இறக்குமதி... ஆனால், செய்த மாற்றங்கள் கைகொடுக்கின்றனவா?

இன்பாக்ஸ்
விகடன் டீம்

இன்பாக்ஸ்

"பெண்களுக்கு இந்த துல்கரை அப்படிப் பிடிக்கும்!"
நா.கதிர்வேலன்

"பெண்களுக்கு இந்த துல்கரை அப்படிப் பிடிக்கும்!"

இன்பாக்ஸ்
விகடன் டீம்

இன்பாக்ஸ்

துல்கர் சல்மானின் `குரூப்': கேரளாவை உலுக்கிய இன்சூரன்ஸ் கொலையின் கதை!
சிந்து ஆர்

துல்கர் சல்மானின் `குரூப்': கேரளாவை உலுக்கிய இன்சூரன்ஸ் கொலையின் கதை!

வலைபாயுதே
சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே