இளவேனில் வளரிவான்
இளவேனில் வளரிவான்
2019, பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான். இளவேனில், உலகக் கோப்பை தொடரில் இந்தப் பிரிவில் தங்கப்பதக்கம் வெல்லும் 3 வது இந்தியர் ஆவார். முன்னதாக அபூர்வி சந்தேலா, அஞ்சலி பகவட் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். 20 வயதே ஆன வீராங்கனை இளவேனில், சீனியர் பிரிவில் தனது முதலாவது பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர் இளவேனில். முன்னதாக முனிச் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் 4 -வது இடம் பிடித்து பதக்கத்தைத் தவறவிட்டவர் இந்தமுறை அசத்திவிட்டார்.
குடும்பம்
கடலூர் மாவட்டம், காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் உருத்திராபதி (84). ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளர். இவரின் மனைவி கிருஷ்ணவேணி ( 74). இவர்களுக்கு வாலறிவன் என்கிற மகன் உள்ளார். இவரின் மனைவி சரோஜா. இவர்களுக்கு இறைவன் என்கிற மகனும் இளவேனில் என்கிற மகளும் உள்ளனர். இவர்கள் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இளவேனில் தற்போது பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

CWG 2022: துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ஏன் இல்லை? இந்தியாவின் பதக்க வாய்ப்புகளுக்கு முட்டுக்கட்டையா?

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் என்ன ஆனது? இந்தியா எப்படி சொதப்பியது?

இளவேனில் வாலறிவன், அபூர்வி சந்தேலா வெளியேறினர்... துப்பாக்கி சுடுதலில் இந்தியா ஏமாற்றம்!

ஒலிம்பிக்கில் பதக்க மேடையில் ஏறக்கூடிய இந்திய லெவன்!

Tokyo Olympics : முதல் நாளே இந்தியா பதக்கம் வெல்லுமா... யார் யார் ஆட்டத்தை மிஸ் செய்யக்கூடாது?

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லப்போகும் இந்தியாவின் டிரீம் 11... ஆரம்பிக்கலாங்களா?!

இளவேனில் வாலறிவன் - தமிழ்நாட்டின் முதல் தங்கம்?!

இளவேனில் வாலறிவன்: ஒலிம்பிக்கில் தமிழகத்தின் முதல் தங்கம் ரெடி!

டோக்கியோ ஒலிம்பிக்ஸுக்கு இந்தியா ரெடி! 117 வீரர்களில் 8 தமிழர்கள் - யார், யார் என்னென்ன போட்டிகள்?

Elavenil Valarivan Selected for Tokyo Olympics | ஒலிம்பிக் பதக்கம் வெல்ல இளவேனில் வாலறிவன் ரெடி!

உலகின் நம்பர் 1 வீராங்கனை இளவேனில்... ஆனால், 2021 ஒலிம்பிக்கிற்குள் நுழைய ஏன் இவ்வளவு தடைகள்?!
