ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை, அமெரிக்காவைச் சார்ந்த சக்கர்பெர்க் என்பவர் 2004-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். அதில், போட்டோ, வீடியோ மற்றும் கருத்துகளைப் பதிவிடும் வசதிகளும், எளிதாக உலகின் அனைத்துப் பகுதிகளில் உள்ளவர்களை இணைக்கும் வசதிகளும் இதில் உள்ளன. எனவே, ஃபேஸ்புக் அனைவரையும் எளிதில் ஈர்த்தது. இளைஞர்கள் மட்டுமல்லாது, அனைத்துத் தரப்பினரும் இதை விரும்பிப் பயன்படுத்திவரும் சூழல் உள்ளது.ஃபேஸ்புக்கின் ஆரம்பக் காலக்கட்டத்தில், அதாவது 2004ல் அது thefacebook.com தான். பின்னர், Theக்கு கல்தா கொடுத்துவிட்டு, facebook.com ஆனது. இதன் கோடிங்கை எழுதி முடிக்க இரண்டே வாரங்கள்தான் ஆனது என ஒருமுறை  சக்கர்பெர்க் ஃபேஸ்புக லைவ் மூலம் பகிர்ந்துள்ளார். 

ஆரம்பத்தில் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு, லைக் பட்டன் மட்டும்தான் இருந்தது. இதனால், பிடிக்காத பதிவுகளுக்கு ரியாக்ட் பண்ண முடியாது. எனவே, 2016 ஆம் ஆண்டு, பதிவுகள் தொடர்பான நம் உணர்வை வெளிபடுத்த கோபம், காதல், நகைச்சுவை உள்ளிட்ட ஆறு குறியீட்டு 'லைக்'குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக், கமென்ட்டுகளுக்கும் இந்த ஆறு உணர்வுகளின் குறியீட்டு 'லைக்'குகள் வந்துவிட்டன. மேலும் இதே ஆண்டில் ஃபேஸ்புக் லைவ் வீடியோ சேவையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஒரு தனி நபரோ அல்லது ஃபேஸ்புக் பக்கமோ லைவ்வாக வீடியோவை தனது பக்கத்தில் ஒளிபரப்பு செய்ய முடியும் என்பது இதன் ப்ளஸ்.

நாளுக்கு நாள் புதிய புதிய வசதிகளை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்திவருகிறது. 2017 ஆம் ஆண்டின் கணக்கின்படி ஃபேஸ்புக் 200 கோடி பயனாளர்களை எட்டியுள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அதன் உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க், 'ஃபேஸ்புக் தற்போது 2 பில்லியன் பயனாளர்களை எட்டியுள்ளது. நாங்கள் உலகத்தை இணைக்கும் பணியில் முன்னேறிவருகிறோம். உங்களுடன் பயணிப்பது பெருமையாக இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக், மட்டுமின்றி இன்ஸ்டாகிராம், மெஸ்ஸெஞ்சர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் ஃபேஸ்புக் நிர்வகித்து வருகிறது.
 
``என்னால் அவள் கஷ்டப்படக்கூடாது" - ஃபேஸ்புக் லைவ்-வில் தற்கொலை செய்துகொண்ட இளைஞன்
சி. அர்ச்சுணன்

``என்னால் அவள் கஷ்டப்படக்கூடாது" - ஃபேஸ்புக் லைவ்-வில் தற்கொலை செய்துகொண்ட இளைஞன்

சென்னை: கண்ணீர் அஞ்சலி போஸ்டர் விவகாரம்... எடப்பாடி, போலீஸுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு!
எஸ்.மகேஷ்

சென்னை: கண்ணீர் அஞ்சலி போஸ்டர் விவகாரம்... எடப்பாடி, போலீஸுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு!

"சமூக வலைதளங்களில் இடம்பெறும் செய்திகளுக்கு உரியத் தொகை கொடுக்க வேண்டும்!"- நியூசிலாந்து அரசு அதிரடி
Guest Contributor

"சமூக வலைதளங்களில் இடம்பெறும் செய்திகளுக்கு உரியத் தொகை கொடுக்க வேண்டும்!"- நியூசிலாந்து அரசு அதிரடி

``மர்ம பவுடர் கடத்தல் விவகாரம்; எம்எல்ஏ குறித்து அவதூறு பரப்புவதா?" - பாஜக நிர்வாகிமீது திமுக புகார்
கு.விவேக்ராஜ்

``மர்ம பவுடர் கடத்தல் விவகாரம்; எம்எல்ஏ குறித்து அவதூறு பரப்புவதா?" - பாஜக நிர்வாகிமீது திமுக புகார்

ஃபேஸ்புக் டிபியில் `கீர்த்தி சுரேஷ்’ படம்... ரொமான்ஸ் சாட் செய்து 40 லட்சம் இழந்த இளைஞர்!
அ.பாலாஜி

ஃபேஸ்புக் டிபியில் `கீர்த்தி சுரேஷ்’ படம்... ரொமான்ஸ் சாட் செய்து 40 லட்சம் இழந்த இளைஞர்!

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
அவள் விகடன் டீம்

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

நிலவுக்குப் பாய்ந்த நாசாவின் ஓரியன் | இந்தியா மெட்டாவுக்கு தலைமை ஏற்கும் சந்தியா - உலகச் செய்திகள்
க.ஶ்ரீநிதி

நிலவுக்குப் பாய்ந்த நாசாவின் ஓரியன் | இந்தியா மெட்டாவுக்கு தலைமை ஏற்கும் சந்தியா - உலகச் செய்திகள்

திருமணம் மீறிய உறவு: பெண்ணைக் கொன்றுவிட்டு ஃபேஸ்புக் லைவில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!
VM மன்சூர் கைரி

திருமணம் மீறிய உறவு: பெண்ணைக் கொன்றுவிட்டு ஃபேஸ்புக் லைவில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

முதல்வர், பிரதமர் கான்வாய் வரும்போது வேகத்தடைகளை அகற்றக் காரணம் என்ன?! | The Imperfect Show
நா.சிபிச்சக்கரவர்த்தி

முதல்வர், பிரதமர் கான்வாய் வரும்போது வேகத்தடைகளை அகற்றக் காரணம் என்ன?! | The Imperfect Show

`சகாவே வயிற்றைக் கொஞ்சம் குறையுங்கள்'
ஃபேஸ்புக்கில் அமைச்சரிடம் வம்பிழுத்த நபர்!
சிந்து ஆர்

`சகாவே வயிற்றைக் கொஞ்சம் குறையுங்கள்' ஃபேஸ்புக்கில் அமைச்சரிடம் வம்பிழுத்த நபர்!

`11,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த மெட்டா' - இந்தியர்களுக்கு அதிக பாதிப்பா?!
கோபாலகிருஷ்ணன்.வே

`11,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த மெட்டா' - இந்தியர்களுக்கு அதிக பாதிப்பா?!

``எலான் மஸ்க்குக்கு உதவும் ஸ்ரீராம் கிருஷ்ணன்...'' யார் இவர்?
இ.நிவேதா

``எலான் மஸ்க்குக்கு உதவும் ஸ்ரீராம் கிருஷ்ணன்...'' யார் இவர்?