கணேஷ் வெங்கட்ராமன்

கணேஷ் வெங்கட்ராமன்

கணேஷ் வெங்கட்ராமன்

தமிழகத்தில் சற்றே பரீட்சயமான பெயர் கனேஷ் வெங்கட்ராமன்,மாடலிங் மற்றும் நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கனேஷ்,ஹைதராபாத் உருது, தெலுங்கு,மலையாளம்,தமிழ்,கன்னடம்,ஹிந்தி போன்ற ஆறு இந்திய மொழிகளில் நடித்தவர் ஆவார்.ஆரம்பத்தில் அன்தாரிக்‌ஷ்,மாயவி போன்ற இந்தி சீரியகளில் நடித்துள்ளார்,2006-ஆம் ஆண்டு “த அங்கரீஸ்” எனும் ஹைதராபாதி உருது மொழியில் பெரிய திரையில் அறிமுகமானார்.


தமிழில் ராதா மோகன் இயக்கத்தில் 2008-ஆம் ஆண்டு வெளியான அபியும் நானும் திரைப்படத்தில் அறிமுகமானார்,தொடர்ந்து கமல்ஹாசனின் திரைப்படமான “உன்னைப்போல் ஒருவன்” திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார்,கன்தாகர் எனும் மலையாளத் திரைப்படத்தில் மோகன்லால் மற்றும் அமிதாப் பச்சன்-உடன் சேர்ந்து நடித்தார்,தொடர்ந்து தமிழில் பனித்துளி, பள்ளிக்கூடம் போகலாமே,அச்சாரம் போன்ற திரைப்படங்களில் நடித்தார், 2016-ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி ப்ளாக் பஸ்டரான “தனி ஒருவன்” திரைப்படத்தில் மீண்டும் காப் வேடத்தில் நடித்தார்.


2003-ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா போட்டிக்கும்,2004 ஆம் ஆண்டு மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்கும் இந்தியாவை ரெப்ரசெண்ட் செய்துள்ளார்.இவர்,நிகழ்ச்சி தொகுப்பாளினி மற்றும் நடிகையான “நிஷா கிருஷ்ணனை” திருமணம் செய்துள்ளார்,தீயா வேலை செய்யனும் குமாரு,இவன் வேற மாதிரி,தொடரி,ஏழு நாட்கள்,தும் ஹோ யரா உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.


இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி உள்ளார்.      

 

``புருஷன்-பொண்டாட்டினா இப்படித்தான்கிற சோஷியல் ப்ரஷர் எங்களுக்கு இல்லை!" - கணேஷ் வெங்கட்ராம்
அஸ்வினி.சி

``புருஷன்-பொண்டாட்டினா இப்படித்தான்கிற சோஷியல் ப்ரஷர் எங்களுக்கு இல்லை!" - கணேஷ் வெங்கட்ராம்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!
அஸ்வினி.சி

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!

27 வருடங்களுக்குப் பிறகு இயக்குநராகும் `ரமணா' யூகி!
உ. சுதர்சன் காந்தி

27 வருடங்களுக்குப் பிறகு இயக்குநராகும் `ரமணா' யூகி!