Banner 1
நடிகர்

கஞ்சா கருப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்,கருப்பு ராஜா எனும் இயற்பெயர் கொண்ட இவரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகபடுத்தியவர் இயக்குனர் பாலா, தன்னுடைய பிதாமகன் திரைப்படம் மூலம் கஞ்சா கருப்பு எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர்,தமிழ் சினிமாவின் மிகப் பரீட்சயமான காமெடியன் ஆனார்.

சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்,கருப்பு ராஜா எனும் இயற்பெயர் கொண்ட இவரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகபடுத்தியவர் இயக்குனர் பாலா, தன்னுடைய பிதாமகன் திரைப்படம் மூலம் கஞ்சா கருப்பு எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர்,தமிழ் சினிமாவின் மிகப் பரீட்சயமான காமெடியன் ஆனார். பேச்சில் மதுரை தொனி,தொடங்கி காமெடிக்கான மேனரிஸம் அனைத்தும் அழகாக வெளிக்கொண்டு வருபவர் கஞ்சா கருப்பு.
 

ராம்,பருத்தி வீரன், நாடோடிகள்,சண்டக் கோழி, சம்திங் சம்திங்,சிவப்பதிகாரம், தாமிரபரணி, அழகிய தமிழ் மகன், பிரிவோம் சந்திப்போம், களவாணி, அறை எண் 305-இல் கடவுள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் 2008-ஆம் ஆண்டு சங்கீதா எனும் பெண்னை திருமணம் செய்து கொண்டார்.
 
இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய இவர், இரண்டாவது வாரம் வெளியேற்றப்பட்டார்.

தொகுப்பு : GOMATHI S M