Banner 1
இயக்குநர்

கௌதம் வாசுதேவ் மேனன்

மேனன் 1973 ல் பிப்ரவரி 25 ல் பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஒட்டப்பாலத்தில் பிறந்தார். இவர் தந்தை மலையாலி, தாய் தமிழ். பிறந்தது கேரளாவில் என்றாலும் வளர்ந்தது திருச்சிராப்பள்ளியில் தான். இவர் மெக்கானிக்கால் இன்ஜினியரிங் படிப்பை பட்டுக்கோட்டையில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் மேற்க்கொண்டார்.

தமிழ் திரையுலகில் மக்களின் எதிர்பார்ப்பை பெற்ற இயக்குநர்களில் கவுதம் வாசுதேவ் மேனனும் ஒருவர். காதல், ஆக்ட்ஷன் என இரண்டிலும் தனக்கான இடத்தை பதித்தவர். இவரது படங்களில் பிரமாதமான டெக்னிக்கல் ஒர்க், மற்றும் ஸ்கிரீன் பிளே என வித்தியாசமான படைப்பை காணலாம்.  முன்னனி நடிகர் பலருடன் சேர்ந்து இவர் கொடுத்தப்படைப்புகள், இன்று பலாரால் பேசப்பட்டு வருகிறது. இவர் ஒரு இயக்குநர் மட்டுமன்றி தாயாரிப்பு, வசனம் மற்றும் பின்னனி பாடல் என அனைத்திலும் தனது திறமையை வெளிபடுத்தியுள்ளர்.

       மேனன் 1973 ல் பிப்ரவரி 25 ல்  பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஒட்டப்பாலத்தில் பிறந்தார். இவர் தந்தை மலையாலி, தாய் தமிழ். பிறந்தது கேரளாவில் என்றாலும் வளர்ந்தது திருச்சிராப்பள்ளியில் தான். இவர் மெக்கானிக்கால் இன்ஜினியரிங் படிப்பை பட்டுக்கோட்டையில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் மேற்க்கொண்டார். கல்லூரிப்படிப்பின் போதே நல்ல கதைகளையும் எழுத ஆரம்பித்துவிட்டார். மேனனுக்கு தான் ஒரு இயக்குநராக ஆக வேண்டும் என்ற ஆசை  "டெப்த் ஆன்ட் அஸ்தெடிக்ஸ்" என்ற ஆங்கில படத்தை பார்த்த போது தோன்றியதாம். தனது ஆசைக்கு பெற்றோர்களும் கைக்கொடுக்க 1997ஆம் ஆண்டு மின்சாரக் கனவு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். இயக்குநராக உலாலா படத்தை 2000 ல் இயக்க ஆரம்பித்தார். மாதவன்,ரீமாசன் மற்றும் அப்பாஸ் நடித்த இப்படம் 2001 ஆம் ஆண்டு மின்னலே தலைப்பில் திரைக்கு வந்தது. இப்படத்தில் தான் ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைப்பாளராக அறிமுகமனார். தமிழ் ரொமான்டிக் படமான மின்னலே ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது.

          மேனனின் முதல் படமே அவரை திரையுலகில் அனைவரும் கவனிக்கும் படி செய்தது. பிறகு மின்னலே படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து தரும்படி  வந்த தாயாரிப்பாளர் வாசு பஹானியின் அழைப்பை ஏற்று படத்தில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டார். ஆனால் இது தமிழில் பெற்ற வெற்றியை ஹிந்தியில் அடைய தவறிவிட்டது. அதற்கு அடுத்த படமாக தமிழில் இரு விழி உனது கதையை தயார்படுத்தினார். ஆனால் ஆரம்பிக்க புரொடக்ஸன் இல்லாத காரணத்தால் நின்று போனது. பிறகு 2003 ல் காதலும் ஆக்டஷனும் கலந்த  காக்க காக்க படத்தை இயக்கினார். ஒரு என்கௌன்டர் பற்றிய கட்டுரையை படித்து எழுந்த எண்ணத்தால் என்கௌன்டர் செய்யும் ஒரு போலிஸ் அதிகாரியின் வாழ்க்கை , அவருக்கு வரும் இடையூறு என அனைத்தையும் பதிவு செய்யும் படி எடுக்க நினைத்தப் படமே காக்க காக்க. ஹீரோயினாக ஜோதிகா முடிவாக, அவரின் பரிந்துரையின் பெயரில் ஹீரோவாக சூரியாவை முடிவுசெய்தார். இதற்காக சூரியாவை கமாண்டோ டிரெய்னிங் பள்ளியில் சேர்த்து பயிற்சி பெற வைத்தார். 2003 ல் வெளிவந்த காக்க காக்க படம் பெறும் வெற்றி அடைந்தது. மணிரத்தினம் மற்றும் ராம் கோபால் வர்மா போன்ற பிரபலமான இயக்குநர்களின் பெயர் பட்டியலில் மேனன் பெயரும் சேர்ந்தது. இதே படைத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்து படத்தை வெளியிட்டார்.

    காக்க காக்க வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. கமல்ஹாசனின் கருத்திற்கினங்க உருவாக்கப்பட்ட கதை வேட்டையாடு விளையாடு. காதல் கொஞ்சம், ரொமான்ஸ் கொஞ்சம் சேர்த்து உருவாக்கப்பட்ட ஆக்ட்ஷன் திரில்லர் படம் தான் வேட்டையாடு விளையாடு. இப்படம் தாயாரிப்பின் போது பல பிரச்சனைகளை சந்தித்திருந்தாலும், 2006 ல் வெளியிட்ட போது பெறும் வெற்றியை பெற்றது. இது மேனனின்  மூன்றாவது வெற்றி. இம்மூன்று படங்களும் பாக்ஸ் ஆப்பிஸ் ஹிட்டும் அடித்தது. மேலும் இதே படத்தை ஹிந்தி ரீமேக்கில் ஷாருக்கான் கொண்டு இயக்கி வெளியிட்டார்.

     இரு திரில்லர் படங்களுக்கு அடுத்து அவர் இயக்கிய பச்சை கிளி முத்துச்சரம் 2007 ல் வெளியானது. இது நல்ல விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் பாக்ஸ் ஆப்பிஸ் ஹிட் கொடுக்கவில்லை. இப்படத்தின் இயக்கத்தின் போது தான் மேனனின் தந்தை காலமானார். அதன் தாக்கத்தால் தான் படத்தை சிறப்பாக வெளியிட முடியாததாக கூறினார். மேலும் தவறான ஹீரோ தேர்வாகவும் இருக்கலாம் எனவும் எண்ணுகிறார். இப்படத்தின் தோல்வியை அடுத்து சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை இயக்கினார். திரிஷா ஹீரோயினாக நடித்த இப்படம் 30 நாட்கள் மட்டுமே படம் பிடிக்கப்பட்டது. மேலும் காலம் தள்ளிப் போக போக படம் முற்றிலும் கைவிடப்பட்டது. 

        2006 ம் ஆண்டு மேனன் தனது தந்தையின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக தனது சுயக்கதையை அடிப்படையாகக் கொண்டு(70%) இயக்கிய படமே வாரணம் ஆயிரம். இரண்டு வருடமாக எடுத்த இப்படம் குடும்பம், ஆக்ட்ஷன், ரொமான்டிக் என அனைவரும் காணும் குடும்ப படமாக உருவானது. படத்தின் பாடல்கள் முதல், அதில் அறிமுகமான சமீராரெட்டி  வரை அனைத்து ரசிகர்களாலும் கவரப்பட்டனர். இப்படத்தின் கதாநாயகனான சூரியா மகன் ,தந்தை என இரு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். இப்படமே மேனனின் இயக்கத்தில் வெளிவந்து அதிக வசூலைப் பெற்றப்படம். இப்படத்திற்க்கு பிறகு தான் மேனனுக்கும், ஹாரிஷ் க்கும் இடையேயான நட்பு முறிந்தது. இருவரும் இனி சேர்ந்து பணிப்புரிய மாட்டோம் என்ற செய்தியையும் வெளியிட்டனர். இதற்கு அடுத்து தல அஜித் மற்றும் சமீராரெட்டி கொண்டு உருவாக இருந்த படம் சூராகனி, ஆனால் இப்படமும் இயக்கப்படாமல் நின்றுவிட்டது.

         பிறகு சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு பின் மேனன் வடிவமைத்த காதல் கதை தான் விண்ணை தாண்டி வருவாயா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் இயக்கப்பட்டது. தமிழில் சிம்பு மற்றும் திரிஷா ஜோடியிலும், தெலுங்கில் நாகசைதன்யா மற்றும் சமந்தா ஜோடியிலும்   2010ல்  வெளிவந்தது. மனதை தொடும் காதல் கதையும், அதற்கேற்ப மனதை வருடும் எ.ஆர். ஆரின் பாடல்களும் ரசிகர்களின் பெறும் வரவேற்ப்பை பெற்றது. இது மேனனின் புகழை நிலைநாட்டியது. இப்பட இயக்கத்தின் போதே இடையில் படமாக்கப்பட்ட கதை தான் நடுநசி நாய்கள். ஒரு உன்மை கதையையும், நாவல் கதையையும் சேர்த்து உருவாக்கப்பட்ட படமே நடுநசிநாய்கள். இப்படம் 2011 ல் திரைக்கு வந்தது. இப்படம்  மாறுப்பட்ட கருத்துகளையும், எதிர்ப்புகளையும் பெற்றது. ரசிகர்களின் கவனத்தை கவரத் தவறியதால் இப்படம் பெரிதும் பேசபடவில்லை. மாறாக மேனனின் கதைக்கு வந்த எதிர்ப்புகள், போராட்டங்கள் பற்றியே பேசப்பட்டது. 

        நடுநசிநாய்கள் படத்தின் தோல்வியை தொடர்ந்து 2012 ல் விண்ணை தாண்டி வருவாயாவின் ஹிந்தி ரீமேக்கை வெளியிட்டார். ஆனால் அப்படமும் பாக்ஸ் ஆப்பிஸ் ஹிட் கொடுக்கவில்லை. இதனை அடுத்து ரொமான்டிக் படமான நீதானே என் பொன் வசந்தம் படத்தை வெளியிட்டார். இப்படம் தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு வெளியானது. எதிர்பார்த்த அளவு இன்றியும் இப்படம் ஓரளவு  நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதனை அடுத்து 2013 சூரியா, திரிஷா மற்றும் அருண்விஜய் நடிப்பில் துருவநட்சத்திரம் படம் துவங்கப்பட்டது. அதன் அறிமுகப் போஸ்டர் வெளியிட்ட நிலையில் சூரியா படத்தை விட்டு வெளியேறிய காரணத்தால் படம் நின்று போனது. பின் அதே வருடம் சிலம்பரசன் மற்றும் பல்லவி சுபாஷ் இணைப்பால் சட்டென்று மாறுது வானிலை படத்தை துவங்கி 30 நாட்கள் படம் பிடிக்கப்பட்டது. 

         அப்படத்தின் இயக்கத்தின் போது  இயக்குநர் மணிரத்தினம் கொடுத்த வாய்ப்பின் பெயரில் 2014 ஆம் ஆண்டு தல அஜித் கதாநாயகனாக நடிக்க  மணிரத்தினம் தாயரிக்கும் என்னை அறிந்தால் படம் இயக்க கையெழுத்திட்டார். இதனால் சட்டென்று மாறும் வானிலை படம் நிறுத்திவைக்கப்பட்டது.  2015 வெளியான இப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் மக்கள் வரவேற்றனர். இந்த படத்தில் ஹாரிஷ் ஜெயராஜக்கும், மேனனுக்கும் இடையே இருந்த நெருடல் முடிவுபெற்று இணைந்து பணிபுரிந்தனர். என்னை அறிந்தால் படம் அனைத்து மக்களையும் கவரும் படி அமைந்தது. சுமார் ஐந்து வருடங்களுக்கு பிறகு பாக்ஸ் ஆப்பிஸ் ஹிட் கொடுத்தது இப்படத்தில் தான்.  

      என்னை அறிந்தால் வெற்றியை தொடர்ந்து மேனன் தான் பாதியில் விட்ட சட்டென்று மாறுது வானிலை படத்தை மீண்டும் இயக்க ஆரம்பித்தார். இப்படத்தில் இருந்து பல்லவி விலக அவர் இடத்தை நிரப்புகிறார் மஞ்சுமா மோகன். பின் இப்படம் 2016  ல் அச்சம் என்பது மடமையடா தலைப்பில் திரைக்கு வந்தது. ஆனால் பெறும் கால தாமதத்தினால் படம் எதிர்பார்ப்பை இழந்தது. ஆனாலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 2016 ல் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்க ஆரம்பித்துள்ளார். தனுஷ் மற்றும் மேகா ஆஷா நடிக்கும் இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெறும் எதிர்பார்புகளுக்கு இடையே வலம் வரும் இப்படம் மேனனின் மற்றொறு பெயர் சொல்லும் படமாக அமையும் என்றே நம்பப்படுகிறது. 

       எனை நோக்கி பாயும் தோட்ட படத்தின் வெளியீட்டிற்கு பிறகு, விஷ்னு விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் படத்தை இயக்கவிருக்கிறார். மேலும் தனக்கு விக்ரம்,நயன்தாரா நடிப்பில் துருவ நட்சத்திரமும், விண்ணை தாண்டி வருவாயா கதையின் மற்றொறு பகுதியான ஒன்றா படமும் இயக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரது படம் வாரணம் ஆயிரத்திற்காக ஐந்து ப்பிலிம் ப்பார் , ஒன்பது விஜய் மற்றும் ஒரு நாட்ஸ்னல் ப்பிலிம் அவார்ட்களைப் பெற்றுள்ளது.

தொகுப்பு : கௌ.உமா