காயத்ரி ரகுராம் | Latest tamil news about Gayathri Raguram | VikatanPedia
Banner 1
நடன இயக்குனர், நடிகை

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இன்று பிஸியான நடன இயக்குனர்களில் ஒருவர். இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி உள்ளார்.

நடன இயக்குனர் ரகுராம்-இன் இளைய மகளான காயத்ரி ரகுராம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இன்று பிஸியான நடன இயக்குனர்களில் ஒருவர்.

1983-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி பிறந்தார்,2002 ஆம் ஆண்டு பிரபுதேவா ஜோடியாக “சார்லி சாப்லின்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர்.

2003-ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து அமெரிக்கா சென்றார்,2006-ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து மீண்டும் சென்னை வந்தார் காயத்ரி.தீபக்கின் தாய் மற்றும் தங்கையிடம் இருந்த கருத்து வேறுபாடுகளால் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று மீண்டும் சென்னை திரும்பினார் காயத்ரி.

2008-ஆம் ஆண்டு ஜெயங்கொண்டான்  மற்றும் பொய் சொல்ல போரோம் திரைப்படங்களில் நடன இயக்குனராக ரீ-என்ட்ரி கொடுத்தார்.தொடர்ந்து ஒஸ்தி,அலெக்ஸ் பாண்டியன்,அஞ்சான்,தமிழ் படம் போன்ற திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். “கோ” திரைபடத்தில் “வெண்பனியே” ரெமோ திரைபடத்தில் “சிரிக்காதே” உள்ளிட்ட பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு தொடங்கி “யாதுமாகி நின்றாய்” என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.,இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி உள்ளார்.      

தொகுப்பு : GOMATHI S M