ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானி

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி கதாநாயகி,குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி “சின்ன குஷ்பு”என்று தமிழ் நாட்டில் தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா கொழுக் மொழுக் ஹீரோயின்களின் லிஸ்டில் எப்போதும் முதல் இட்த்தில் இருப்பவர்.

இளமை பருவம்:

1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.ஹன்சிகாவின் தாய் மொழி “சிந்தி”ஆகும்,புத்த மதத்தை சேர்ந்த இவர்,மும்பையில் உள்ள போடார் இன்டர்நேஷனல் பள்ளியிலும்,இன்டர்நேஷனல் கரிகுலம்-மும்பை-யிலும் தன் பள்ளி படிப்பை முடித்தார்.

சினிமா பயணம்:

குழந்தை நட்சத்திரமாக சில ஹிந்தி சேனல்களில் நடித்த ஹன்சிகா ஹிரோயினாக அறிமுகமானது தன்னுடைய 16-வது வயதில் இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக 2007-ஆம் ஆண்டு வெளிவந்த தேசமுருடு திரைப்படத்தில். தொடர்ந்து இரண்டு ஹிந்தி படங்களிலும் ஹீரோயினாக நடித்தார் ஹன்சிகா.

2008-ஆம் ஆண்டு பிந்தாஸ் எனும் கன்னட திரைப்படத்தில் புனீத் ராஜ்குமார் ஜோடியாக நடித்தார்.இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் 2011-ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த எங்கேயும் காதல் ஆனால் திரையில் முதலில் வெளியானது அதே வருடம் தனுஷ் ஜோடியாக நடித்த மாப்பிள்ளை திரைப்படம்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி நடிகையான ஹன்சிகா,ஒரு கல் ஒரு கண்ணாடி,சேட்டை,வேலாயுதம்,தீயா வேலை செய்யனும் குமாரு,சிங்கம் 2,பிரியாணி,மான் கராத்தே,அரண்மனை,அரண்மனை 2,ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு தவிற ஹன்சிகாவிடம் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது,ஆதரவற்ற குழந்தைகளுக்காக தன்னார்வல அமைப்பு மற்றும் ஒரு காப்பகத்தை நட்த்தி வருகிறார்.இதுவரையில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் படிப்பு செலவை ஹன்சிகா ஏற்றுக் கொண்டுள்ளார்.ஹன்சிகா-வின் இந்த குணம் பெரிதும் பாராட்டப்பட வேண்டியது.மேலும் ஹண்சிகா மிகவும் அழகாக ஓவியங்கள் வரைபவர்,தான் வரையும் ஓவியங்களை விற்று அதில் வரும் தொகையை தன்னுடைய குழந்தைகள் காப்பகத்திற்காக ஒதுக்குகிறார்.

இடையில் 2014-ஆம் ஆண்டில் நடிகர் சிம்புவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டவர்,வெகு நாட்களிலேயே தன் சிம்புவுடனான தன் காதலை முறித்துக் கொண்டார்.தற்போது தெலுங்கில் இரண்டு படம் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் மற்றும் பிரபு தேவா இயக்கத்தில் குளேபகாவலி எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

ஹன்சிகா லேட்டஸ்ட் ஆல்பம்!
சொ.பாலசுப்ரமணியன்

ஹன்சிகா லேட்டஸ்ட் ஆல்பம்!