ஹிப்ஹாப் தமிழா ஆதி

ஹிப்ஹாப் தமிழா ஆதி

ஹிப்ஹாப் தமிழா ஆதி

இரண்டு இசை கலைஞர்களால் உருவான இசைக்குழு ஹிப்ஹாப் தமிழா. ஆதித்யா வேங்கடபதி என்கிற ஆதி மற்றும் ஜீவா Beatz. ராப் பாடலை எழுதி பாடுபவர் ஆதி. ஜீவா Beatz பாட்டுக்கு மெட்டு போடுவார். இந்த இரு இசைக்கலைஞர்கள் வளர்த்தெடுத்த பிள்ளை தான் ஹிப்ஹாப் தமிழா.இந்தியாவில் தமிழ் சொல்லிசையின் (Rap இசையை தமிழில் சொல்லிசை என ஆதி குறிப்பிடுவார்) முன்னோடி இவர்கள் தான்.

                கிளப்புல மப்புல என்கிற பாடல் இணையத்தில் வைரல்  ஆகும் வரை ஹிப்ஹாப் தமிழா பற்றி பெரும்பாலானோருக்கு தெரியாது. ரேடியோ மிர்ச்சியில் சாதாரணமாக கிளப்புல மப்புல பாட்டை பாட, அந்த  காணொளி ஒரே நாளில் லட்சம் பேரை சென்றடைந்து வைரல் ஆனது.அதன் பிறகே ஹிப்ஹாப் தமிழா பற்றி இளைஞர்களுக்கு தெரிய வந்தது. ஹிப்ஹாப் தமிழா, தற்சார்புள்ள இசைக்கலைஞர்களாக இருந்த இவர்கள் தற்பொழுது தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களாக திகழ்கிறார்கள்.

           ஹிப்ஹாப் தமிழா ஆதி பிப்ரவரி 20,1990 அன்று பிறந்தார். ஆதியின் குடும்பம் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தது. ஆனால் ஆதி பிறந்து வளர்ந்ததெல்லாம் கோயம்புத்தூரில்.இவரின் அப்பா பாரதியார் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர். சிறு வயதில், விடுமுறை காலங்களில் தன் பக்கத்து வீட்டுக்கு வரும் அமெரிக்க வாழ் நண்பனுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நண்பன் தான் முதன்முதலில் ஆதிக்கு மைக்கேல் ஜாக்சனின் “ஜாம்” என்ற ஆல்பத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதுவே ஆதியின் சொல்லிசை பயணத்திற்கு அச்சாணி போட்டது. (Rap ஐ தமிழில் ஆதி சொல்லிசை என்று குறிப்பிடுவார்). மேற்கத்திய இசையை அதிகம் விரும்பி கேட்க ஆரம்பித்த ஆதி, காலப்போக்கில் தான் எழுதிய சிறு சிறு கவிதைகளை மேற்கத்திய இசையுடன் கலந்து பாட ஆரம்பித்தார்.

          “குறிப்பிட்ட வயது வரை நானும் மற்ற பிள்ளைகள் போல ஆங்கிலம் பேசுவது தான் கெத்து என்று ஒரு மாயையினுள் இருந்தேன். என் அப்பா தமிழ் பேராசிரியர் என்பதால் அடிக்கடி கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே சிறந்து விளங்கிய மொழி நம் தமிழென அடிக்கடி கூறுவார். என்னதான் English பேசுனாலும் நம்மலாம் தமிழன்டா என்று சொல்லுவார். பத்தாம் வகுப்பு படிக்கும் காலங்களில் தமிழின் மீதும் பாரதியார் மீதும் பெரிய ஈடுபாடு வந்தது. நம் அடையாளம் தமிழ் அதில் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்பதை உணர ஆரம்பித்தேன்” என்று ஆதி பேட்டி ஒன்றினில் கூறியிருப்பார்.    

          ஆங்கிலத்தில் Rap பாடுவதை தவிர்த்து தமிழில் Rap பாடி அதை சொல்லிசை என்று குறிப்பிட ஆரம்பித்தார். யூ டியூபில் ஹிப்ஹாப் தமிழா என்ற பெயரில் ஒரு சேனலை ஆரம்பித்தார், பாரதியாரின் முண்டாசு மீசை கொண்ட சின்னம் அது தான் ஹிப்ஹாப் தமிழாவின் அடையாளம். தன் பெற்றோரிடம் மாட்டாமல் இருக்க அதை சின்னமாக வைத்திருந்தார்.அடிக்கடி பாடல்கள் எழுதி பாடி யூ டியூபில் பதிவேற்றம் செய்வார். 2005வரை ஆதியுடன் ஹிப்ஹாப் தமிழாவில் இணைந்தவர்கள் காலபோக்கில் உதிரத்தொடங்கினர். அப்போது சமூக வலைத்தளமான ஆர்குட்டில் சென்னையில் உள்ள ஜீவா என்ற தன்னை போன்று இசை ஆர்வம் கொண்டவரை சந்திக்க 2005இலிருந்து அதிகாரப்பூர்வமாக செயல்பட தொடங்கியது ஹிப்ஹாப் தமிழா. ஆதி பன்னாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் தனது மின் பொறியியல் பட்டபடிப்பை படித்து முடித்தார்.அதன் பின்னர் மெட்ராஸ் பல்கலைகழகத்தில் முதுநிலை வணிக நிர்வாகம் படித்தார். மேலும் 2015 இல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

       ஜீவா  29 ஜூன் 1991 அன்று பிறந்தார்.இவர் சென்னை வாசி. சென்னையில் உள்ள லயோலா பொறியியல் கல்லூரியில் படித்து பாதியில் படிப்பை நிறுத்திக்கொண்டார்.  “ஜீவா எப்பொழுதும் வெளியே தலை காட்ட மாட்டார். ரொம்ப கூச்ச சுபாவம். ‘இந்த மீடியால நான் தல காட்டமாட்டேன் அதெல்லாம் நீயே பாத்துக்க’ என்பான் ஜீவா. ஆனால் ஹிப்ஹாப் தமிழாவின் தூணே ஜீவா தான். இந்திய சின்னத்தில் மறைந்திருக்கும் அந்த நான்காவது சிங்கம் போன்றவன் ஜீவா அவன் தான் ஹிப்ஹாப் தமிழாவின் முதுகெலும்பு”  என ஆதி ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.

           விஸ்வரூபம் ஆரம்பம் என்கிற இந்தியாவின் முதல் ஹிப்ஹாப் மிக்ஸ் டேப் பாடலை வெளியிட்டார்கள் .ஆனால் வரவேற்பில்லை. 2011ஆம் ஆண்டின் தமிழ்நாடு மாநிலத்தின் தேர்தல் கீதத்தை எழுதி இசையமைத்தது ஹிப்ஹாப் தமிழா தான். ஆனால் அந்த பாடல் பெரிய வரவேற்பு பெறவில்லை. ஆனாலும் ஆதியும் ஜீவாவும் தங்களுடைய ஆகச்சிறந்த பாடலாக அதை தான் கருதுகிறார்கள்.

          இதன் பின்னர் எதார்த்தமாக ரேடியோ மிர்ச்சியில் கிளப்புல மப்புல பாட, அது உலகம் முழுவதும் வைரல் ஆனது. அதன் பின்னர் அந்த பாட்டில் அவர் பெண்களை இழிவுபடுத்திவிட்டார் எனக்கூறி அவருக்கு எதிராக போராட்டங்கள் கூட எழுப்பப்பட்டன. இதன் பின்னரே இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது ஹிப்ஹாப் தமிழா. இந்த பாட்டை சுற்றியுள்ள சர்ச்சைகள் பற்றி கேட்டதற்கு ஆதி கூறிய பதில் “ ‘எல்லா பொண்ணுங்களையும் நான் குறை சொல்லவில்லைங்க என்ன பெத்த தெய்வம் கூட பொம்பள தானுங்க’ என அந்த பாட்டிலேயே பாடிவிட்டேன், இது மட்டுமின்றி அது பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல... நான் வளர்ந்த ஊரில் எனக்கு தெரிந்து பெண்கள் சிகரெட் பிடித்தோ, மது அருந்தியோ பார்த்ததில்லை... அதனால் வித்தியாசமாக ஒரு கலாச்சாரத்தை பார்த்த வியப்பில் சும்மா ஜாலியா எழுதுன பாட்டுங்க, இதே  நாங்க தான செந்தமிழ் பெண்ணே பாட்டும் பாடுனோம்”.

          2012இல் ரெமி மார்ட்டின் ஹிப்ஹாப் ஆதியுடன் கைகோர்த்தது. அப்போது வெளியான ‘ஹிப்ஹாப் தமிழன்’ ஆல்பம் தான் ஹிப்ஹாப் தமிழர்களின் முதல் தற்சார்புள்ள ஆல்பம். மொத்தம் பதினோரு பாடல்கள் கொண்டது. இதன் பின்னர் ‘எதிர்நீச்சல்’ படத்தில் எட்டு வரிகள் எழுதி பாடினார். இதனைத் தொடர்ந்து ‘வணக்கம் சென்னை’ படத்தில் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டா’ மற்றும் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தில் ‘பக்கம் வந்து’ பாடல் ஆகியவற்றை எழுதி பாட சினிமாவில் மெல்ல மெல்ல நுழைய ஆரம்பித்தார். 2014இல் ‘வாடி புள்ள வாடி’ எண்ணும் ஒற்றைப் பாடலை வெளியிட்டார். இதுவும் அதிபயங்கர ஹிட்டடித்தது.

       “புகழ் , ரசிகர்கள் ஆகியவை குவிந்தாலும், அடுத்த வேலை சோறுக்கு என்ன செய்வது என்று யோசிக்கும் நிலைமையில் தான் இருந்தேன். அதனால் ஒரு நிலையான இடத்தை பிடிக்க சினிமாவில் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்தேன்” என ஆதி ஒரு நேர்காணலில் கூறியிருப்பார். முதலில் ‘இன்று நேற்று நாளை’ என்ற படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் 2015ஆம் ஆண்டு ‘ஆம்பள’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அதிரடியாக அறிமுகமாகினார். இதன் பின்னர் ‘இன்று நேற்று நாளை’ மற்றும் ‘தனி ஒருவன்’ என கலக்கல் ஹிட் கொடுத்து இசையமைப்பாளராக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். தனி ஒருவனின் தெலுங்கு ரீமேக்கான ‘துருவ்’ படத்தின் மூலம் தெலுங்கிலும் இசையமைப்பாளராக அறிமுகமானார். அரண்மனை-2,கதகளி, கவண் என இசையமைக்கும் படங்கள் எல்லாம் ஹிட் லிஸ்டாக நீண்டு கொண்டே போனது.

        தமிழர் பண்டைய பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டு பீட்டா அமைப்பால் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘டக்கரு டக்கரு’ என்ற அவருடைய பாட்டின் மூலம் எதிர்ப்பை தெரிவித்து ஜல்லிக்கட்டு தடைக்கான காரணம் என்ன என்பதை எல்லோருக்கும் புரிய வைத்து, இளைஞர்களுடன் போராட்ட களத்தில் இறங்கி கடைசி வரை போராடினார்.      

      பிறகு , சுந்தர்.சி தயாரிப்பில் தன் வாழ்க்கை கதையை மையப்படுத்தி ‘மீசைய முறுக்கு’ என்னும் படத்தை இயக்கி நடித்தார். இந்த படத்தின் மூலம் கதாசிரியராகவும் ,இயக்குனராகவும் , நடிகராகவும் அறிமுகமானார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதி இசையமைத்தவரும் இவரே. இப்போது ‘இமைக்கா நொடிகள்’ , கலகலப்பு -2 ஆகிய படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா ஆதி நவம்பர் 30 ,2017 அன்று லட்சயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.       

அன்பறிவு விமர்சனம்: மதுரைக்காரர்களுக்கே அந்நியமாய் இருக்கிறதே இந்த மதுரைக்கார சினிமா!
விகடன் டீம்

அன்பறிவு விமர்சனம்: மதுரைக்காரர்களுக்கே அந்நியமாய் இருக்கிறதே இந்த மதுரைக்கார சினிமா!

"என் மியூசிக்ல யுவன் பாடினது, கமல் சாரை சந்திச்சது ரெண்டுமே பெரிய சந்தோஷம்!"- `அன்பறிவு' ஹிப்ஹாப் ஆதி
சனா

"என் மியூசிக்ல யுவன் பாடினது, கமல் சாரை சந்திச்சது ரெண்டுமே பெரிய சந்தோஷம்!"- `அன்பறிவு' ஹிப்ஹாப் ஆதி

பிக் பாஸ் - 78: `எங்கிருந்தாலும் வாழ்க' மோடில் வெளியேறிய அபிநய்... இருந்தாலும் அந்த பல்பை ஏன் பாஸ் உடைச்சீங்க?
சுரேஷ் கண்ணன்

பிக் பாஸ் - 78: `எங்கிருந்தாலும் வாழ்க' மோடில் வெளியேறிய அபிநய்... இருந்தாலும் அந்த பல்பை ஏன் பாஸ் உடைச்சீங்க?

'கிளப்புல மப்புல' தப்பும், காஞ்சிபுரம் பட்டும்... ஹிப்ஹாப் ஆதியின் 'சிவகுமாரின் சபதம்' வென்றதா?
விகடன் டீம்

'கிளப்புல மப்புல' தப்பும், காஞ்சிபுரம் பட்டும்... ஹிப்ஹாப் ஆதியின் 'சிவகுமாரின் சபதம்' வென்றதா?

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

நியூஸ் காக்டெயில்
ஆர்.சரவணன்

நியூஸ் காக்டெயில்

“ஹிப்ஹாப் ஆதி எங்களை மென்ஷன் பண்ணலை!”
மா.பாண்டியராஜன்

“ஹிப்ஹாப் ஆதி எங்களை மென்ஷன் பண்ணலை!”

``ஹிப் ஹாப் ஆதியோட அந்த ட்வீட்டுக்கும் எனக்கும்..!'' - ஓவராய் கலாய்த்தாரா ஜெகன்?
மா.பாண்டியராஜன்

``ஹிப் ஹாப் ஆதியோட அந்த ட்வீட்டுக்கும் எனக்கும்..!'' - ஓவராய் கலாய்த்தாரா ஜெகன்?

``விஷ்ணுவின் தயக்கம்... சிவகார்த்திகேயனின் நம்பிக்கை... ஆயுஷ்மான் ஆசை!'' - ரவிக்குமார்
சனா

``விஷ்ணுவின் தயக்கம்... சிவகார்த்திகேயனின் நம்பிக்கை... ஆயுஷ்மான் ஆசை!'' - ரவிக்குமார்

`விடிவி' குறும்படம் பார்த்தாச்சு... ஆனால், இந்த சினிமாக்களின் குறும்படங்களைப் பார்த்திருக்கீங்களா?
ப.சூரியராஜ்

`விடிவி' குறும்படம் பார்த்தாச்சு... ஆனால், இந்த சினிமாக்களின் குறும்படங்களைப் பார்த்திருக்கீங்களா?

சினிமா விமர்சனம்: நான் சிரித்தால்..!
விகடன் விமர்சனக்குழு

சினிமா விமர்சனம்: நான் சிரித்தால்..!

கொஞ்சமா சிரிச்சு... நிறையவே முறைச்சா... `நான் சிரித்தால்'  ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்!
விகடன் டீம்

கொஞ்சமா சிரிச்சு... நிறையவே முறைச்சா... `நான் சிரித்தால்' ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்!