ஹிப்ஹாப் தமிழன்

 ஹிப்ஹாப் தமிழன்

ஹிப்ஹாப் தமிழன்

இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் ஹிப்ஹாப் தமிழன். ஹிப்ஹாப் தமிழா என்ற குழுவினால் உருவாக்கப்பட்டது. ஆதித்யா வேங்கடபதி என்கிற ஆதி மற்றும் ஜீவா Beatz என்கிற இரண்டு இசை கலைஞர்கள் கொண்ட குழு ஹிப்ஹாப் தமிழா,இவர்களால் உருவாக்கப்பட்டது தான் ஹிப்ஹாப் தமிழன் ஆல்பம்.  ஆல்பத்திற்கு அறிமுகம் கொடுக்கும் மனிதன் தமிழன் என்ற பாடல் மற்றும் ஆல்பத்தின் கடைசி பாடல் Stop Piracy(இந்த ஆல்பத்திற்கு உதவியோருக்கு நன்றி சொல்லும் பாட்டு) ஆகியவை சேர்த்து மொத்தம் பதினோரு பாடல்களை கொண்டது இந்த ஆல்பம். முப்பத்தி ஏழு நிமிடங்கள் நீளம் கொண்டது இந்த ஆல்பம்.இந்த ஆல்பத்தில் உள்ள எல்லா பாடல்களையும் எழுதி, பாடியது ஹிப்ஹாப் தமிழா ஆதி. ஜீவாவும் ஆதியும் இணைந்து இதற்கு இசையமைத்துள்ளனர்.

        ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விஷயத்தை பற்றி அலசும். அறிமுக பாடலான 'மனிதன் தமிழன்' ,'தமிழன்டா','கொஞ்சம் கொஞ்சம் தான் தமிழ் தெரியும்' ஆகிய மூன்று பாடல்கள் தமிழை பற்றியவை...

        “மனிதன் தமிழன்” தமிழன் எவ்வளவு தொன்மை வாய்ந்தவன் என்பதையும் தமிழில் பேச தமிழர்கள் வெட்கப்படக்கூடாது என்பதையும் அடிப்படையாக கொண்டது...

    தமிழன்டா பாடல் தமிழின் தொன்மை மற்றும் இலக்கண இலக்கியங்களின் பெருமைகளையும் தமிழின் தொன்மையை உலகம் மறுத்தது பற்றியும் எடுத்து சொல்லும் பாடல்,இந்த பாடலை கேட்கும் ஒவ்வொருவருக்கும் தமிழன்டா என்று சொன்னாலே திமிரேறும்.

   தமிழில் பேச வெட்கிக்கொண்டு ஆங்கிலம் தான் கெத்து என நினைக்கும் மாடர்ன் மாடசாமிகளையும்,வெட்டி சீன போடும் கீதாக்களையும் வெளுத்து வாங்கி கலாய்க்கும் பாடல் “கொஞ்சம் கொஞ்சம் தான் தமிழ் தெரியும்”.ஆதியுடன் அனுஷா என்கிற பாடகியும் இதில் பாடியிருப்பார்.

     பட்டியலில் நான்காவது பாடல் “கிளப்புல மப்புல” , இந்த பாடல் தான் ஹிப்ஹாப் தமிழா ஆதியை யாரென்று உலகுக்கு தெரியவைத்த பாடல். எதார்த்தமாக இந்த பாடலை ரேடியோ மிர்ச்சி எஃப்.எம். மில் பாட ஒரே நாளில் உலகம் முழுவதும் விரல் ஹிட் அடித்தது அந்த வீடியோ. இதற்கிடையே நிறைய சர்ச்சைகளும் கிளம்பியது,பெண்களை மிகவும் இழிவுபடுத்துகிறார் என மாதர் சங்கம் முதற்கொண்டு பல சங்கங்கள் எழ, செய்திதாளின் முகப்பிலேயே இவரை பற்றிய செய்திகள் வந்தது. பயங்கர பிரபலம் ஆகிவிட்டார் ஆதி.

   கிளப் பப்புகள் இல்லாத கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த ஆதி பள்ளிப்படிப்பை முடித்து விடுமுறைக்கு சென்னை வந்த போது, நண்பர்களுடன் சேர்ந்து கிளப்பிற்கு போகும் போது , அதுவரை பெண்கள் மது அருந்தியும் புகை பிடிப்பதையும் பார்த்திராத ஆதி ,பெண்கள் பலர் புகைபிடிப்பதும்,மது அருந்துவதும் வித்தியாசமாக இருந்தது. அதை பற்றி விளையாட்டாக எழுத,பிறந்ததே “கிளப்புல மப்புல” மற்றபடி பெண்கள் மீது வெறுப்பொன்றும் இல்லை என ஆதி விளக்கம் கொடுத்தார்.

      உலகில் எத்தனை பெண்கள் இருந்தாலும் “Y I love செந்தமிழ் பெண்?” என்பதே “செந்தமிழ் பெண்ணே” பாடல்... தமிழ் பெண்ணின் சேலை அழகையும் , நடை , இடை அழகையும் பேசும் பாடலாக இது உள்ளது.கிளப்புல மப்புல பாடலுக்கு நேர்-எதிர் இந்த பாடல் ... ஆதியுடன் இணைந்து ஜோஷ் விவியன் என்பவரும் இந்த பாடலை பாடியிருப்பார்.

   காதல் தோல்வியை மேற்கத்திய ட்ராப் இசையுடன் அதிவேகமாக சொல்லும் கவிதை “இனி இல்லே ஹம்”. இந்த ஆல்பத்தில் உள்ள மற்ற பாடல்களுக்கு கிடைத்த அங்கீகாரமோ வரவேற்போ இதற்கு கிடைக்கவில்லை என்றாலும் ஆதிக்கு மிகவும் நெருக்கமான கவிதை இதுவென அடிக்கடி சொல்வார். எந்த இசை நிகழ்ச்சியில் பாட சொன்னாலும் இதை தான் ஆதி பாடுவார். “இனி இல்லே ஹம்” என்கிற  பாட்டின் தலைப்பை இஷா என்ற பாடகி பாடியிருப்பார்.  

   முறையாக வளர்க்கப்படாததால்,சரியான சேர்க்கை இல்லாததால்,ஒழுங்கான வழிகாட்டுதல் இல்லாததால் வழி தவறி போகும் பிள்ளைகள், பதினான்கு, பதினாறு வயதில் அவர்கள் வாழ்க்கை வாழ்கை முடிகிறதே என கடைசி நொடியில் தவறை உணர்ந்து “இறைவா” என இறைவனிடம் வரம் கேட்கும் பாடல் தான் இறைவா.ஆதியுடன் சித்ரா, ஹரிணி என இரு பாடகிகள் பாடியிருப்பார்கள்.

  ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது கல்வி. கல்வியின் சிறப்பை ஒளவையார் ,திருவள்ளுவர் அனைவரும் கூற, மாடர்ன் பாரதி ஆதியின் கல்வியின் அவசியம் குறித்த பாடலே “கற்போம் கற்பிப்போம்’’. இந்த பாடலை ஆதியுடன் இணைந்து சுசன், மெஃபி,ஹம்சினி,கமலா ஆகியோர் பாடியிருப்பார்கள்.     

    கடைசி பாடல் Hey Do What I Say இந்த பாடல் ஹிப்ஹாப் தமிழா பற்றியது. கேப்டன் விஜயகாந்தின் வசனங்களை பாட்டின் நடுவே நடுவே ரேடியோ ஒலி போன்று கோர்த்து இசையமைக்கப்பட்ட பாடல்.இந்தியாவின் முதல் ஹிப்ஹாப் மிக்ஸ்-டேப் இந்த பாடல் தான்.                     

அனிருத், யுவன் டு தர்புகா சிவா... இவர்களில் விகடனின் `சிறந்த இசையமைப்பாளர்-2019' அவார்டு வின்னர் யார்?
விகடன் டீம்

அனிருத், யுவன் டு தர்புகா சிவா... இவர்களில் விகடனின் `சிறந்த இசையமைப்பாளர்-2019' அவார்டு வின்னர் யார்?

`மறுவார்த்தை’, `வெறித்தனம்... நெஞ்சுக்குள்ள குடியிருந்த’ டாப் 10 பாடல்கள்! #2019SongRewind
ச. ஆனந்தப்பிரியா

`மறுவார்த்தை’, `வெறித்தனம்... நெஞ்சுக்குள்ள குடியிருந்த’ டாப் 10 பாடல்கள்! #2019SongRewind

`` `அன்பே சிவம்’ மாதிரி இன்னொரு படம் ஏன் எடுக்கலை தெரியுமா?!’’ - இயக்குநர் சுந்தர்.சி
சனா

`` `அன்பே சிவம்’ மாதிரி இன்னொரு படம் ஏன் எடுக்கலை தெரியுமா?!’’ - இயக்குநர் சுந்தர்.சி

"ஜல்லிக்கட்டுக்குப் பிறகு சமுதாயம் பற்றி பேசுறது குறைஞ்சிடுச்சா?" - `ஹிப்ஹாப்  தமிழா’ ஆதி
Gopinath Rajasekar

"ஜல்லிக்கட்டுக்குப் பிறகு சமுதாயம் பற்றி பேசுறது குறைஞ்சிடுச்சா?" - `ஹிப்ஹாப் தமிழா’ ஆதி

`` `சாப்பாடுக்கு என்ன பண்ணுவ'னு கேட்டாங்க; சினிமாவுக்கு ஓகே சொல்லிட்டேன்..!'' - `ஹிப்ஹாப்’ ஆதி
தார்மிக் லீ

`` `சாப்பாடுக்கு என்ன பண்ணுவ'னு கேட்டாங்க; சினிமாவுக்கு ஓகே சொல்லிட்டேன்..!'' - `ஹிப்ஹாப்’ ஆதி

```சேது'வுக்குப் பிறகு`சிட்டிசன்' வாய்ப்பை மிஸ் பண்ணேன்; வெள்ளத்தால் `நட்பே துணை' வாய்ப்பை இழந்தேன்!'' - அபிதா
தாட்சாயணி

```சேது'வுக்குப் பிறகு`சிட்டிசன்' வாய்ப்பை மிஸ் பண்ணேன்; வெள்ளத்தால் `நட்பே துணை' வாய்ப்பை இழந்தேன்!'' - அபிதா