இளையராஜா

இளையராஜா

இளையராஜா

தென்னிந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசைக்கலைஞர் என்றால் அது இசைஞானி இளையராஜா தான். 1970ல் தொடங்கிய இந்த இசைச் சூறாவளி பல நாடுகளில் பலதரப் பட்ட மனிதர்களை இதன் இசையால் ஈர்த்துள்ளது. இவருடைய இசையில் மனம் கரையாதோர் எவரும் இலர். 1000 படங்களுக்கு மேல், 6500 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

பிறப்பு மற்றும் இளமைப்பருவம்:
         இவர் 1943ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் நாள் தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய இயர்பெயர் ஞானதேசிகன். இவர் பள்ளியில் சேர்ந்த பொழுது இவருடைய தந்தை இவர் பெயரை ‘ராஜைய்யா’ என மாற்றினார். ஆனால் இவரை அனைவரும் ‘ராசைய்யா’ என்றே அழைத்தனர். இவர் தனராஜ் மாஸ்டர் அவர்களிடம் இசைக் கருவிகளைப் பற்றி கற்றுக் கொள்வதற்காக மாணவராக சேர்ந்தார். அவர் இளையராஜாவை ராஜா என்றே அழைத்தார். 1970களில் ஏ.எம்.ராஜா என்றொரு இசையமைப்பாளர் இருந்ததால் இவருடைய முதல் படமான ‘அன்னக்கிளி’யில் ‘இளையராஜா’ அறிமுகப்படுத்தினார் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.

குடும்பம்:
        இளையராஜாவுக்கு ஜீவா என்ற மனைவியும், கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என்ற இரு மகன்களும், பவதாரினி என்ற மகளும் உள்ளனர். இவருக்கு கங்கை அமரன் என்ற தம்பி உள்ளார். அவர் தமிழ் திரைப்பட உலகில் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் உள்ளார். இளையராஜாவின் மனைவி 2011 அகடோபர் 31 அன்று காலமானார்.

இசைப்பயனம்:
         இளையராஜா தன் இளமைக்காலத்தில் கிராமப்புறத்திலேயே வளர்நததால், நாட்டுப்புற சங்கீதத்தில் அவரால் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. தன்னுடைய 14வது வயதில் அவர் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களுடைய இசைக்குழுவில் இணைந்து பத்து ஆண்டுகள் அந்த குழுவோடேயே பயணித்தார். அந்த குழுவில் இருக்கும் போதே ஜவகர்லால் நேருவின் மறைவுக்கு கண்ணதாசன் அவர்கள் இயற்றிய இரங்கற்பாவுக்கான இசைத்தழுவலில் முதன்முதலில் இசையமைத்தார். 1968ல் தன் குருவான தன்ராஜ் அவர்களுடன் இணைந்து சென்னையில் இசைக்கான கூட்டுப்பயிற்சி ஒன்றைத் தொடங்கினார். அதில் மேற்கத்திய பாரம்பரிய இசைக்கான கண்ணோட்டமும், கசைக்கருவிகள் செயல்திறன் பற்றியும், இசையை எந்தெந்த வகையில் மாற்றியமைக்க முடியும் என்பதனை பற்றியும் பயிற்சி பெறும் வகையிலாக அது அமைக்கப்பட்டிருந்தது. இளையராஜா கிளாசிக்கல் கிட்டார் வாசிப்பில் சிறந்து விளங்கினார். எனவே லண்டன் ‘ட்ரினிடி காலேஜ் ஆஃப் மியூசிக்கில்’ சிலகாலம் வகுப்பெடுத்தார்.

        1970ல் சென்னையில் ஒரு இசைக்குழுவுக்கு சம்பளத்திற்காக கிட்டார் வாசித்தார். அதே நேரம் சலில் சவுத்ரி போன்ற இயக்குனர்களின் படங்களுக்கு கிட்டாரிஸ்ட்டாகவும், கீபோர்டரிஸ்டாகவும் இருந்து வந்தார். பின்னர் கன்னட திரைப்பட இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் இசை உதவியாளராக பணிபுரிந்தார், அந்த சமயங்களில் 200க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் பணிபுரிந்தார். வெங்கடேஷ் அவருக்கு உதவியாளராக இருக்கும் போதே தன்னுடைய சொந்த இசைக்கோர்வைகளையும் எழுதத் தொடங்கினார். அந்த இசைக்கோர்வைகளை இசையமைத்துப் பார்க்க வெங்கடேஷ் அவர்களின் இசைக்குழுவில் இருந்த இசைக்கலைஞர்களையே அவர்களுடைய இடைவேளை நேரங்களில் பயன்படுத்திக் கொண்டார்.

திரைப்பட இசையமைப்பாளராக:
          1975ல் பஞ்சு அருணாச்சலம் தயாரித்த அன்னக்கிளி படத்தில் முதன்முதலில் திரைப்பட இசையமைப்பாளராக அவதரித்தார். இந்த சமயத்தில் தன்னுடைய புதுமையை புகுத்த நினைத்த இசைஞானி மேற்கத்திய இசை இசைக்கும் இசைக்குழுவை வைத்து தமிழின் நாட்டுபுற மெல்லிசையையும், நாட்டுப்புற கவிதைகளையும் இசையமைத்தார். அது மேற்கத்திய இசையில் தமிழின் நாட்டுப்புறம் கலந்த ஒரு தனித்துவமான கலவையாக இருந்தது. இந்த இசை இந்தியாவின் அனைத்து இசைசூழல்களுக்கிடையேயும் ஒரு புதுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1980களில் திரைப்பட இசையமைப்பாளராகவும், இசை இயக்குனராகவும் புகழ் பெற தொடங்கினார் இசைஞானி இளையராஜா அவர்கள்.

இளையராஜா ஸ்பெஷல்:
     இந்திய இசை உலகில் முதன் முதலில் மேற்கத்திய பாரம்பரிய இசை இணக்கங்களையும், சரங்களையும் பயன்படுத்தியவர் இளையராஜா தான். இவர் இசையமைக்கும் படங்களின் பின்னனி இசையும் தனித்துவம் வாய்ந்தவையாக இருந்தன. இதனால் இந்திய ரசிகர்களிடம் தனிக் கவனம் பெற வைத்தன.

         இளையராஜாவின் இசையைப் பற்றி மியூசிக்காலஜிஸ்ட் கிரீனி கூறியிருப்பதாவது “வெவ்வேறு வகையான இசையை ஆழ்ந்து புரிந்து கொள்ளுவதால் அவரால் இசையின் ஒத்திசைவான துண்டுகளை கோர்த்து ஒன்றுபட்ட இசை புதினமாக மிகவும் மாறுபட்ட புதிய வடிவத்தில் கொடுக்க முடிகிறது.” என்கிறார்.

         அவர் வெவ்வேறு வகையான இசைகளை மாறுபட்ட கூறுகளுடன் இணைத்து பல்வேறு வகையாக இசையமைத்திருக்கிறார். ஆஃப்ரோ டிரைபல், போஸா நோவா, டேன்ஸ் மியூசிக், டூ-வாப், ப்ளமிங்கோ, வெஸ்டரன் போல்க், ஜாஸ், மார்ச், பேததோஸ், பாப், சிக்டெலியா மற்றும் ராக் அன்ட ரோல் போன்ற பல வகையான இசைகளை இந்திய இசை உலகில் பரினமித்திருக்கிறார்.

     ஒரு படத்தில் வரும் காட்சிகள் அதனுடைய தன்மையுடனேயே ரசிகர்களை சென்றடைவதில் இசைக்கு பெரும் பங்குண்டு. அந்த வகையில் இவர் கதையமைப்புக்கு ஏற்றவாறு இசையமைப்பதனால் ரசிகர்களுக்கு படத்தின் உணன்வுகளை சிறந்த முறையில் வெளிப்படுத்த முடிந்தது.

குறிப்பிடத்தக்க படைப்புகள்:
         இவர் இசையமைத்து வெளிவந்த பாடல்கள் அனைத்துமே குறிப்பிடத்தக்கவைதான். அதில் சிறந்தவை, தளபதி(1991) படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமனியம் மற்றும் சுவர்னலதா ஆகியோர் பாடிய ‘ராக்கம்மா கையத் தட்டு’ பாடல்.இந்தப் பாடல் 2003ல் பிபிசி நடத்திய ‘வேர்ல்ட் டாப் 10 பாப்புலர் மியூசிக்’ சர்வேயில் 165 நாடுகளைச் சேர்ந்த அரை பில்லியன் மக்கள் வாக்களிக்க நான்காம் இட்ம் பெற்றது.இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி படமான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்திற்கு ஒலிப்பதிவு செய்தார். இந்தியாவிலிருந்து ஆஸ்கார்க்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்வாதி முத்தயம்(1986), நாயகன்(1987), தேவர் மகன்(1992), அஞ்சலி(1991), குரு(1997) மற்றும் ஹே ராம்(2000) ஆகிய படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

       இசையில் தொடங்குதம்மா, சங்கத்தில் பாடாத கவிதை, சுந்தரி கண்ணாலு ஒரு சேதி, தென்றல் வந்து தீண்டும் போது , என்னுள்ளே என்னுள்ளே ஆகிய பாடல்களின் அழகியலையும், அந்த இசையுடன் இயைந்த சொற்கள் தரும் மயக்கத்தையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

அந்த காலம் தொடங்கி இந்தக் காலம் வரை:
          1970களில் தொடங்கி இப்போது வரை இசையின் மூலம் அனைவரையும் கட்டுப்படுத்த முடியுமென்றால் அது இளையராஜாவால் மட்டுமை சாத்தியம். சன் மியூசிக்கிலோ, பேருந்து பயணத்திலோ, டீ கடை ரேடியோவிலோ அவருடைய பாடல் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும். இசை ஞானி என அவரை அழைப்பதை விட இசைக்கடவுள் என அழைப்பதே மிகச் சரியாக இருக்கும்.

ராஜாவின் டாப் 10:
       இரவு நேரம் பாடல் கேட்டு கொண்டே தூங்குபவர்கள் தான் இன்று அதிகம். அந்த சமயத்தில் எந்த மியூசிக் சேனலை மாற்றினாலும் அங்கு ராஜா மயம் தான். அப்படியான இளையராஜாவின் டாப் 10 ராகங்கள் இங்கே.
1.    இளைய நிலா பொழிகிறதே (பயணங்கள் முடிவதில்லை)
2.    பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா (நீங்கள் கேட்டவை)
3.    ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே (இளமைக் காலங்கள்)
4.    நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் (மறுபடியும்)
5.    ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா (நீங்கள் கேட்டவை)
6.    வா வெண்ணிலா உன்னைத்தானே (மெல்லத் திறந்தது கதவு)
7.    செந்தாழம் பூவில் வந்தாடுப் தென்றல் (முள்ளும் மலரும்)
8.    பூவே செம்பூவே உன் வாசம் வரும் (சொல்லத் துடிக்குது மனசு)
9.    ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு (தர்ம யுத்தம்)
10.    நிலா காயும் நேரம் சரணம் (செம்பருத்தி)

உலகம் போற்றும் கலைஞன்:
      ராஜாவின் இசை உலகையே ஆளும் என்பதற்கு ஓர் உதாரணம். ஃபிரான்ஸின் பிரிட்டனி நகரத்தில் 2005ல் ‘LE FESTIVAL DUBOUT DU MONDE’ என்றொரு இசைநிகழ்ச்சி. பிரெஞ்சு நடிகரும், பாடகருமான ‘பேஸ்கல் ஆஃப் பாலிவுட்’ என்றழைக்கப்படும் ‘பேஸ்கல் ஹெனி’தான் அந்தப் பாடலைப் பாடியவர். ‘உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி’ பாடலை அவர் ஸ்டைலில் பாட இசை ராஜாவினுடையது.

திரைப்படம் அல்லாத இசை ஆல்பங்கள்:
           இவர் திரைப்படம் அல்லாத இரண்டு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். முதலாவது ‘How to name it?’ என 1986ல் அவருடைய கர்னாடிக் குருவான தியாகராஜருக்கு சமர்பிப்பதற்காக வெளியிடப்பட்ட இசை ஆல்பம். இரண்டாவது ‘Nothing but wind’ என்ற ஆல்பத்தை 1988ஆம் ஆண்டு வெளியிட்டார். இதை தவிர இரண்டு பக்திப் பாடல்களுக்கும் இசையமைத்துளளார்.


விருதுகள்: 
      இந்திய அரசாங்கத்தால் திரைத்துறை கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘Nationwl film awards’ஐ ஐந்து முறை பெற்றுள்ளார். சிறந்து இசை இயக்குனராக மூன்று முறையும், சிறந்த பின்னனி இசைக்காக இரண்டு முறையும் விருது பெற்றுள்ளார். 2010ல் இந்திய அரசாங்கத்தால் பத்ம பூஷன் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார். 2012ம் ஆண்டு இசையில் இவருடைய சோதனை முயற்சிகளையும், படைப்புகளையும்  கவுரவிக்கும் விதமாக SANGEET NATAK AKADEMIயால் ‘SANGEET NATSK AKADEMI AWARD’ம் வழங்கப்பட்டது. இசைத்துறையில் இவருடைய சிறந்த பங்களிப்பை பாராட்டும் விதமாக 2014 ல் ‘ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி நேஷனல் எமினென்ஸ் அவார்டு’ வழங்கப்பட்டது. 2015ல் கோவாவில் நடைபெற்ற 46வது சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனைக்காக ‘CENTRARY AWARD’ வழங்கி கவுரவிக்கப்பட்டார். 2015ஆம் ஆண்டே கேரளாவின் உயரிய விருதான ‘நிஷாகாந்தி புரஸ்காரம்’ விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.

           CNN-IBN நடத்திய கருத்துக்கணிப்பில் உலகின் 25 சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களில் 9வது இடத்தைப் பிடித்தார். அதோடு இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே இசையமைப்பாளர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவியத்தில் உறைந்த இளையராஜா!
விகடன் டீம்

ஓவியத்தில் உறைந்த இளையராஜா!

இளையராஜா: காதலைத் தோற்றுவிப்பதும் இவரின் இசைதான், காதல் தோல்விக்கும் இவரின் இசைதான்!
அதியமான் ப

இளையராஜா: காதலைத் தோற்றுவிப்பதும் இவரின் இசைதான், காதல் தோல்விக்கும் இவரின் இசைதான்!

"இசை அல்லது இளையராஜா: நீங்கள் எப்படி நினைவுகொள்ளப்பட வேண்டுமென விரும்புகிறீர்கள்?"- இளையராஜா பதில்!
விகடன் டீம்

"இசை அல்லது இளையராஜா: நீங்கள் எப்படி நினைவுகொள்ளப்பட வேண்டுமென விரும்புகிறீர்கள்?"- இளையராஜா பதில்!

`அன்பான குணம், மறக்கமுடியாத விருந்தோம்பல்!' - கங்கை அமரன் மனைவி குறித்து மனோபாலா
கு.ஆனந்தராஜ்

`அன்பான குணம், மறக்கமுடியாத விருந்தோம்பல்!' - கங்கை அமரன் மனைவி குறித்து மனோபாலா

வாசகர் மேடை: ராஜா பாதி... ரஹ்மான் மீதி!
விகடன் டீம்

வாசகர் மேடை: ராஜா பாதி... ரஹ்மான் மீதி!

கமல்ஹாசன் நடிக்க மீண்டும் `சிகப்பு ரோஜாக்கள்'... இசை இளையராஜா... இயக்குநர் யார்?!
தளபதி

கமல்ஹாசன் நடிக்க மீண்டும் `சிகப்பு ரோஜாக்கள்'... இசை இளையராஜா... இயக்குநர் யார்?!

“சசிகலா ஏன் வீரத்தமிழச்சி?” - காரணம் சொல்லும் பாரதிராஜா!
நா.கதிர்வேலன்

“சசிகலா ஏன் வீரத்தமிழச்சி?” - காரணம் சொல்லும் பாரதிராஜா!

"இங்கே நிம்மதி கிடைக்குது சாமி'' - இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவில் ரஜினி!
நா.கதிர்வேலன்

"இங்கே நிம்மதி கிடைக்குது சாமி'' - இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவில் ரஜினி!

"எஸ்.பி.பி-யும், ஜானகியும் என்னைப் புரிந்துவைத்திருந்தார்கள்!"- ஆனந்த விகடனில் இளையராஜா!
நா.கதிர்வேலன்

"எஸ்.பி.பி-யும், ஜானகியும் என்னைப் புரிந்துவைத்திருந்தார்கள்!"- ஆனந்த விகடனில் இளையராஜா!

“என் இசைக்கு என் மனசுல இருக்கிற சுத்தம்தான் காரணம்!” - இளையராஜா
நா.கதிர்வேலன்

“என் இசைக்கு என் மனசுல இருக்கிற சுத்தம்தான் காரணம்!” - இளையராஜா

"ஸ்டூடியோக்கள் இல்லைன்னா இளையராஜாவே இல்லை!" - சாரதா ஸ்டூடியோ ஜெயந்தி கண்ணப்பன்
அய்யனார் ராஜன்

"ஸ்டூடியோக்கள் இல்லைன்னா இளையராஜாவே இல்லை!" - சாரதா ஸ்டூடியோ ஜெயந்தி கண்ணப்பன்

மதுர மக்கள் 3: "கட்அவுட் ஆர்டிஸ்ட்ஸ் என்ன ஆனாங்க... எங்கே போனாங்க?!" - பரணி ராஜன்
ந.புஹாரி ராஜா

மதுர மக்கள் 3: "கட்அவுட் ஆர்டிஸ்ட்ஸ் என்ன ஆனாங்க... எங்கே போனாங்க?!" - பரணி ராஜன்