இஸ்ரோ

இஸ்ரோ

இஸ்ரோ

  இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) இந்திய அரசாங்கத்தின் தலைமையில் இயங்கும் விண்வெளி ஆராய்ச்சி மையம். விண்வெளி ஆராய்ச்சியின் மேம்பாட்டிற்காகவும் விண்வெளி தொழில்நுட்பங்களை மெருகேற்றவும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வதுமே அதன் கொள்கைகளாக வரையறுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரோவின் தலைமையிடம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகரம்.

தொடக்கம்:
  இஸ்ரோ அமைப்பானது 15 ஆகஸ்ட் , 1969-இல் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் - விஞ்ஞானி விக்ரம் சாராபாய் ஆகியோரின் முயற்சிகளால் நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் அனைத்து தேவைகளும், செயல்களும், நடவடிக்கைகளும் இந்திய விண்வெளி துறையால் நிர்வகிக்கப்பட்டு இந்திய பிரதமருக்கு தெரிவிக்கப்படுகிறது.

குறிக்கோள்கள்:
  விண்வெளி தொழில்நுட்பத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லவும் அதன் பயன்பாட்டை பல்வேறு தேசிய பணிகளுக்காக பயன்படுத்த வழிவகை செய்வதும் இஸ்ரோவின் முதன்மை குறிக்கோளாக இருக்கிறது.
இந்திய விண்வெளி திட்டம் தொடங்க காரணமான விக்ரம் சாராபாயின் சிந்தனைகள் பெரிதும் உதவியதால் அவரை இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார். 
இந்தியாவின் பொருளாதார முன்னேற்றமானது விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தை இன்னும் வெளிப்படையாக மற்றும் தீவிரமாக செயல்பட உதவிகரமாக இருக்கிறது. இதனால் இந்தியா தனித்துவமான அடையாளத்தையும் தன்னம்பிக்கையுடனும் ஒரு வலுவான சக்தியாக விண்வெளி ஆராய்ச்சியில் மாறும் என்ற தெளிவான குறிக்கோளுடன் இயங்கிவருகிறது. 

ஆராய்ச்சி மைய அமைப்பு மற்றும் வசதிகள்:
  இந்திய அரசாங்கத்தின் விண்வெளி துறையால் இஸ்ரோ நிறுவனம் நிர்வகிக்கப்பட்டுகிறது. இந்திய விண்வெளி துறையானது  (Department of Space - DoS) பிரதம மந்திரி மற்றும் விண்வெளி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இதுபோலே மேலும் பல மையங்கள் இந்திய விண்வெளி துறையால் நிர்வகிக்கப்படுகின்றன. அவற்றுள் சில,

1.       இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO)

2.       விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC)

3.       சதீஷ் தவான் விண்வெளி மையம் (SDSC-SHAR)

4.       இஸ்ரோ செயற்கைகோள் மையம்  (ISAC)

5.       தேசிய தொலைநிலை மையம் (NRSC), ஹைதராபாத்

6.       விண்வெளி பயன்பாடுகள் மையம் (SAC), அகமதாபாத்

7.       இந்திய தொலைநிலை நிறுவனம் (IIRS), டெஹ்ராடூன்

8.       ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் - இஸ்ரோவின் மார்க்கெட்டிங் களம், பெங்களூர்.

9.       தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் (NARL), காடிங்கி, ஆந்திரப் பிரதேசம்.

10.   வட-கிழக்கு விண்வெளி பயன்பாடுகள் மையம் [23] (NE-SAC), உமியம்.

11.   இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IIST), திருவனந்தபுரம் - இந்தியாவின் விண்வெளி பல்கலைக்கழகம்.

12.   பாலசோர் ராக்கெட் லான்சிங் நிலையம் (BRLS) - ஒடிஷா

13.   இஸ்ரோ இநேர்ஸியல் சிஸ்டம்ஸ் யூனிட் (IISU) - திருவனந்தபுரம்

14.   இந்திய பிராந்திய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பு (IRNSS)

15.   ஏரோஸ்பேஸ் கமாண்ட் ஆஃப் இந்தியா (ACI)

16.   விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழு (INCOSPAR)

17.   வானியல் மற்றும் வானியற்பியல் பன்னாட்டு பல்கலைக்கழக மையம் (IUCAA)

18.   இந்திய விண்வெளி அறிவியல் தரவு மையம் (ISSDC)

19.   விண்கலக் கட்டுப்பாடு மையம் (SCC)

20.   மண்டல தொலைநிலை உணர்திறன் சேவை மையங்கள் (RRSSC)

21.   அபிவிருத்தி மற்றும் கல்வி தொடர்பாடல் அலகு (DECU)

 
வேற்று கிரக ஆய்வு பணிகள்:
  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இதுவரை 84 விண்கல பணிகள், 59 வெளியீட்டு பணிகள் மற்றும் திட்டமிட்ட பணிகளான சந்திராயன் -2, ஆதித்யா உள்ளிட்ட பல திட்டங்களை வெற்றிகரமாக நடத்தியது.

1.       சந்திராயன் - 1
  இந்தியாவின் முதல் நிலவுக்குரிய சோதனை தான் சந்திராயன். இது அக்டோபர் 2008 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி குழுவினால் தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 2009 வரை இயக்கப்பட்டது. ஒரு சந்திர சுற்றுப்பாதை மற்றும் தாக்கம் அடங்கிய இந்த பணியின் முக்கிய நோக்கம் சந்திரனை முழுவதுமாக ஆராய்ந்து அதன் குறிப்புகளை இந்திய விண்வெளி திட்டத்தின் மூலம் தனது சொந்த செலவில் மற்றும் திறனில் உருவான தொழில்நுட்பங்களை கொண்டு இயக்குதல் ஆகும். அவ்வாறு திட்டமிட்டபடி 2008, நவம்பர் 8 ஆம் தேதி சந்திர சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

2.       செவ்வாய் சுற்றுப்பாதை பணி (மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்)
  மார்ஸ் மிஷன் (Mars Orbiter Mission - MOM) என்னும் இந்த பணியை மங்கல்யான் என்றும் அழைப்பர். இந்த பணி நவம்பர் 5, 2013 அன்று விண்ணில் ஏவப்பட்டு, 24 செப்டம்பர் 2014 முதல் செவ்வாய் சுற்றுப்பாதையில் வலம்வந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் தொடங்கப்பட்ட இந்த பணி இந்தியாவின் முதல் விண் கோள்களுக்கு இடையேயான பணியாகும். சோவியத் விண்வெளித் திட்டம், NASA, மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றிற்கு பிறகு இஸ்ரோ நான்காவதாக செவ்வாய்யை சென்றடைந்தது.

விண்கல வெளியீட்டு வாகனம்:
  1960 -1970-களில் இந்தியா தனது சொந்த ஏவுகணைத் திட்டத்தை புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார கருத்தாக்கங்களுக்கிடையில் தொடங்கியது. 1960 – 1970-களில் இந்தியா வெற்றிகரமாக விண்வெளிக்கலன் திட்டம் ஒன்றை உருவாக்கியது, 1980-களின் ஆராய்ச்சி படி, செயற்கைகோள் வெளியீடு வாகனம் -3 மற்றும் மேம்பட்ட செயற்கைகோள் வெளியீடு வாகனம் (ASLV) ஆகியவற்றிற்கு செயல்பாட்டுகள் மற்றும் அதன் உள்கட்டமைப்புகள் முடிந்தது. இஸ்ரோ தனது தொழில்நுட்பங்களை மேலும் அதிகரித்து பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி தொழில்நுட்பங்களை கொண்டுவந்தது. இஸ்ரோ பெற்றுக்கொள்ளும் செயற்கைகோள் விண்கல வாகன பணிகளில் சில செயற்கைகோள் வெளியீட்டு வாகனம் (SLV), போலார் சாட்டிலைட் வெளியீட்டு வாகனம் (PSLV), ஜியோசைன்ரோனானஸ் சேட்டிலைட் வெளியீட்டு வாகனம் (GSLV), ஜியோசைன்ரோனானஸ் சாட்டிலைட் வெளியீட்டு வாகனம் மார்க்- III (GSLV III). இஸ்ரோ பெற்றுக்கொள்ளும் செயற்கைகோள் பணிகளில் சில INSAT கோவை, ஐ.ஆர்.எஸ் கோவை, ராடார் இமேஜிங் செயற்கைக்கோள்கள், தெற்கு ஆசியா செயற்கைக்கோள், GAGAN செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பு, IRNSS செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பு.

எதிர்கால பணிகள்:
  இஸ்ரோ அடுத்த டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.எல்.வி எம்.கே 2 மற்றும் பி.எஸ்.எல்.வி  ஏவுகணைகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் ஜி.சாட் 11, ஜி.ஐ.சாட் 1, என்.ஐ.எஸ்,எ.ஆர் போன்ற செயற்கைகோள்களை செலுத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சாதனைகள்
1.    2008 ஆம் ஆண்டில் இந்தியா மொத்தமாக 11 செயற்கைகோள்களை ஒரே ஏவுகணையில் எய்தது. 10 செயற்கைகோள்களை ஒரே கட்டமைப்பில் விண்ணில் ஏவிய முதல் நாடு என்னும் பெருமையை பெற்றது.

2.    இரண்டு பெரிய செயற்கைகோள்களான இந்திய தேசிய செயற்கைகோள் (INSAT) மற்றும் இந்திய தொடர்பு சேவைகள் (IRS) செயற்கைகோள்களை வெற்றிகரமாக செயல்பட செய்தது.

3.    செவ்வாய் சுற்றுப்பாதையை முதல் முயற்சியிலேயே அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையை இஸ்ரோ இந்தியாவிற்கு கொடுத்தது.

தற்போதைய ISRO- வின் விண்வெளி ஆராய்ச்சியில திருப்திபட முடியல! - Part 1
Gopinath Rajasekar

தற்போதைய ISRO- வின் விண்வெளி ஆராய்ச்சியில திருப்திபட முடியல! - Part 1

`எப்படி அவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சுமத்தினாங்க?’ -பதிலளிக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணன் #Video
விகடன் டீம்

`எப்படி அவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சுமத்தினாங்க?’ -பதிலளிக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணன் #Video

உணர்ச்சிக் கடிதமும் நெகிழ்ச்சி பதிலும்! #Myvikatan
விகடன் வாசகர்

உணர்ச்சிக் கடிதமும் நெகிழ்ச்சி பதிலும்! #Myvikatan

`சி.ஐ.எஸ்.எஃப் தேர்விலும் முறைகேடு!' -நெல்லைக்கு அதிர்ச்சி கொடுத்த பாதுகாப்புப் படை காவலர்
பி.ஆண்டனிராஜ்

`சி.ஐ.எஸ்.எஃப் தேர்விலும் முறைகேடு!' -நெல்லைக்கு அதிர்ச்சி கொடுத்த பாதுகாப்புப் படை காவலர்

ராக்கெட்டுகளைக் கட்டுப்படுத்தும் `சித்தாரா’.. இஸ்ரோ மெச்சிய சிவனின் முதல் கண்டுபிடிப்பு| இஸ்ரோ ஹீரோ சிவன் – 3
நா.சிபிச்சக்கரவர்த்தி

ராக்கெட்டுகளைக் கட்டுப்படுத்தும் `சித்தாரா’.. இஸ்ரோ மெச்சிய சிவனின் முதல் கண்டுபிடிப்பு| இஸ்ரோ ஹீரோ சிவன் – 3

`விண்வெளித் துறையில் சாதிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு!' - இஸ்ரோவின் சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாம்
க.ர.பிரசன்ன அரவிந்த்

`விண்வெளித் துறையில் சாதிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு!' - இஸ்ரோவின் சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாம்

`முதல் மனித உருகொண்ட ரோபோ!' - இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் கலக்கவிருக்கும் `வியோமித்ரா!'
பா.கவின்

`முதல் மனித உருகொண்ட ரோபோ!' - இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் கலக்கவிருக்கும் `வியோமித்ரா!'

`இஸ்ரோவின் `NavIC' சேவைக்கான சிப்கள் ரெடி..!’- உங்கள் வாகனம் ரெடியா?
பிரசன்னா ஆதித்யா

`இஸ்ரோவின் `NavIC' சேவைக்கான சிப்கள் ரெடி..!’- உங்கள் வாகனம் ரெடியா?

`ககன்யான்’ திட்டத்துக்கு ரஷ்யாவில் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் இஸ்ரோ!
பிரசன்னா ஆதித்யா

`ககன்யான்’ திட்டத்துக்கு ரஷ்யாவில் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் இஸ்ரோ!

`இட்லி முதல் வெஜ் புலாவ்வரை..!' - இஸ்ரோ வெளியிட்ட விண்வெளி வீரர்களின் உணவுப்பட்டியல்
சே. பாலாஜி

`இட்லி முதல் வெஜ் புலாவ்வரை..!' - இஸ்ரோ வெளியிட்ட விண்வெளி வீரர்களின் உணவுப்பட்டியல்

`இனி அமெரிக்க GPS வேண்டாம்... இந்தியாவின் NavIC ரெடி!' இஸ்ரோ அதிரடி
பிரசன்னா ஆதித்யா

`இனி அமெரிக்க GPS வேண்டாம்... இந்தியாவின் NavIC ரெடி!' இஸ்ரோ அதிரடி

கன்னியாகுமரி சிவன் இஸ்ரோ சிவனான கதை ஆடியோ வடிவில்...!
நா.சிபிச்சக்கரவர்த்தி

கன்னியாகுமரி சிவன் இஸ்ரோ சிவனான கதை ஆடியோ வடிவில்...!