ஜல்லிக்கட்டு | Latest tamil news about Jallikattu | VikatanPedia
Banner 1
பாரம்பரிய விளையாட்டு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய தமிழ் விளையாட்டாகும். இதற்கு ஏறு தழுவல் என்ற பெயரும் உண்டு. புளிகுளம், காங்கேயம் ரக காளைகளை இதற்கு பயன்படுத்துவர். இந்த காளையை ஓடவிட்டு அதனை அடக்க வேண்டும். யார் அதை அடக்குகிறார்களோ அவர் வீரன் என கொண்டாடப்படுவர்.

ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய தமிழ் விளையாட்டாகும். இதற்கு ஏறு தழுவல் என்ற பெயரும் உண்டு. புளிகுளம், காங்கேயம் ரக காளைகளை இதற்கு பயன்படுத்துவர். இந்த காளையை ஓடவிட்டு அதனை அடக்க வேண்டும். யார் அதை அடக்குகிறார்களோ அவர் வீரன் என கொண்டாடப்படுவர். 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் இது புகழ்பெற்றது. குறிப்பக, மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு சிறப்பு வாய்ந்தது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறுதழுவல் விலங்குகளைத் துன்புறுத்துவதாகக் கருதியும் தேவையற்ற உயிரிழப்பும் காயங்களும் ஏற்படுவதாகக் கருதியும் இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகள் அண்மைய ஆண்டுகளில் சல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகின்றனர். இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960 இனை சல்லிக்கட்டு நிகழ்வுகள் மீறுகின்றன என்பது இவர்களது கருத்து. 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் ஆதரவாளர்களும் எதிர்ர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் சல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன. 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் பல நாட்களாக போராட்டங்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.