ஜோதிகா | Latest tamil news about jyothika | VikatanPedia
Banner 1
நடிகை

ஜோதிகா

36 வயத்தினிலே திரை படத்தில் ரி என்ட்ரி கொடுத்துள்ள ஜோ என செல்லமாக தமிழக மக்களால் அழைக்கப்படும் ஜோதிகா எக்ஸ்ப்ரேஷன் குயின் ஆகவே வலம் வந்தவர்.கோழி குண்டு கண்ணுக்கு அழகு சேர்த்து தந்தவர்.பப்ளி நடிகைகள் மிகவும் அழகு என்ற வரிசையில் நீங்கா இடம் பிடித்தவர் ஜோ.தன் தன் துறு துறு கதாபாத்திரங்களால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.

பிறப்பு:

           ஜோ என நம்மால் செல்லமாக அழைக்கப்படும் ஜோதிகாவின் இயற்பெயர்  சாதனா என்பதே.அக்டோபர் 18 ஆம் தேதி 1978 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.

குடும்பம் :

  இவரது அப்பா  திரைப்பட தயாரிப்பாளர் சந்தர் சடானா தாயார் சீமா சடானா.ஜோ தன் பள்ளி படிப்பை லேனர்ஸ் அகாடமியில் முடித்தார்.அதன் பின் மும்பையில் உள்ள மிதிபை கல்லூரியில் சைகாலஜி பயின்றவர்.செப்டம்பர் 11  ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு சிவகுமாரன் மகனான நடிகர் சூர்யாவை விரும்பி மணமுடித்தார்.சூர்யாவுடன்  ஜோடி சேர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார்,காக்க காக்க,ஜூன்ஆர்,பேரழகன்,ஜில்லுன்னு ஒரு காதல்,உயிரிலே கலந்து ,மாயாவி முதலிய ஏழு படங்களில் நடித்துள்ளார். நடிகர் சூர்யாவிற்கும் நடிகை ஜோதிகவிற்க்கும் தியா என்ற பெண்குழந்தை ஆகஸ்ட் 10 ஆம் தேதி 2007 ஆம் ஆண்டு பிறந்தது.அதன் பின்  2010 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி தேவ் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.

திரையுலக பயணம் :

        இவர் முதலில் ஹிந்தியில் டோலி ஸஜா கே ராகன என்ற படத்தின் மூலம் அறிமுகமானர்.இந்த படம் நினைத்த அளவிற்கு ஜோதிகவிற்கு புகழை தேடி தரவில்லை.இதன் இயக்குனர் பிரியதர்ஷன் கூட ஒரு இன்டெர்வியூ வில்  டோலி ஸஜா கே ராகன என்ற படம் தோல்வி அடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது என கூறினார்.அதன் பின் 1999 ஆம் ஆண்டு தமிழில் இவர் நடித்து வெளி வந்த முதல் படம் வாலி.இதில் தனது நடிப்பை அஜித்துடன் சேர்ந்து வெளிப்படுத்திய ஜோதிகவிற்கு பாராட்டு மழை குவிந்ததோடு மட்டுமல்லாமல் விருதுகளையும் அள்ளி தந்தது.பிலிம் ஃபேரின் அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது.மேலும் தினகரனின் அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார்.குஷி படத்தின் வெற்றி ஜோதிகாவின் திரையுலக வாழ்க்கையை திருப்பி போட்டது என்றே சொல்லலாம்.இப்படத்திற்காக பிலிம் ஃபேரின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.இருபதுகளில் இவர் நடித்த படங்களான காமெடியை காதலும் கலந்த இயக்குனர் மணி ரத்னம்  இயக்கிய டும் டும் டும் ,இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய தமிழ் திரில்லர் படமான ஸ்நேகிதியே, முகவரி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குஷி வெற்றிக்கு பிறகு பிரண்ட்ஸ் படத்தில் ஜோதிகவிற்கு ஹீரோயின் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தும் ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு தவறி போனது.தெனாலி திரை படத்தில் ஜோதிகா நடிகர் கமலஹாசனுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

          2003 ல் விக்ரமுடன் சேர்ந்து நடித்த தூள், சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த காக்க காக்க,இளைய தளபதியுடன் திருமலை ஆகிய படங்களின் மூலம் பாக்ஸ் ஆபிசை  தன் வச படுத்தினார் ஜோ.இன்டெர்னஷன்ல தமிழ் பிலிம் அவர்ட்ஸில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.தூள் மற்றும் காக்க காக்க அந்த ஆண்டின் சிறந்த பத்து படங்கள் வரிசையில் இடம்பிடித்தன.நடிகர் விக்ரம் அவர்கள் ஜோ வை லேடி கமலஹாசன் என அழைப்பதுண்டு.2004 ஆம் ஆந் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த ஜோ பேரழகன் படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடம் ஏற்று நடித்தார்.இப்படத்தில் கண் தெரியாத பெண்ணாக தத்ரூபமாக நடித்திருந்தார்.இது பலராலும் பரட்டப்படும் வகையில் அமைந்திருந்தது.இப்படத்திற்காக தமிழ்நாடின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். சிம்புடன் இணைந்து நடித்த மன்மதன் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது.அதே ஆண்டு தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்த தாகூர் திரைபடம் இன்டெர்னஷன்ல இந்தியன்  பிலிம் அகாடமி அவர்ட்ஸில் திரையிடப்பட்டது. இப்படமானது வசூல் வேட்டையில் சாதனை படைத்தது.2005 ஆம் ஆண்டின் திருப்பு முனையாக சந்திரமுகி திரைப்படம் அமைந்தது.இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.இவர் ஏற்று நடித்த கதாபாத்திரமே அப்படத்தின் பெயரும்.தமிழ்நாட்டின் சிறந்த நபிகைக்கான அவார்ட் பெற்றார்.2006 ஆம் ஆண்டு இவர் நடித்து வெளியான முதல் படம் சரவணா என்பதே.இதில் சிலம்பரசனுடன் இணைந்து தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.கௌதம் மேனன் இயக்கிய த்ரில்லர் லவ் படமான வேட்டையாடு விளையாடு மற்றும் சூர்யாவுடன் நடித்த சில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்கள் எதிர்பாரத்த வெற்றியை ஜோவிற்கு அளித்தன.திருமணத்திற்கு முன்  அதாவது 2007 ஆம் ஆண்டில் ஜோ வின் கடைசி படம் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த பச்சை கிளி முத்துச்சரம்.அதே ஆண்டு பிருதிவி உடன் நடித்த மொழி திரைப்படத்தில் வாய் பேச முடியாத காது கேட்காத ஒரு பெண்ணின் கதா பாத்திரத்தில் அனைவரையும் அசர வைக்கும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.இதுவே ஜோ வை நேஷனல் அவார்டின்  அருகில் கொண்டு சென்றது.ஆனால் நூலிலையில் ஒரு  சில காரணங்களால் அவ்விருது தட்டி போனது.

            மலையாள படமான ஹௌ ஓல்ட் ஆர் யு ? என்ற படத்தின் ரீ மேக்கானா 36 வயத்தினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.இப்படத்தில் தன் சொந்த காலில் நிற்கும் பெண்ணாக நடுத்தர வர்க்கத்துக்கு குடும்ப பெண்ணாக பலராலும் பாரட்டப்படும் வகையில் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.தமிழ் திரையுலகின் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் அவர்ட்ஸ்  மற்றும் பிலிம் பேர் கிரிட்டிக்ஸ் அவார்ட் என்ற இரண்டு விருதுகளையும் பெற்ற நடிகை என்ற பெயரையும் பெற்றார்.மேலும் இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான  பெஹைண்ட் வுட் கோல்ட் மெடல் மற்றும் சிறந்த படம் ஆகியவை மட்டுமல்லாமல் சிறந்த நடிகைக்கான் பல  விருதுகளுக்கு பரிந்துறைக்கப்பட்டார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜோ நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் மகளிர் மட்டும் திரை படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.பிரம்மா இயக்கத்தில்  சூர்யா தயாரிப்பில் ஊர்வசி,சரண்யா,பானுமதி,நாசர் மற்றும் லிவிங்ஸ்டன் நடிப்பில் வெளிவந்துள்ள மகளிர் மட்டும் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

           தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிறந்த படங்களில் நடித்துள்ளார் ஜோ. ஒன் டூ த்ரி என்பதே ஜோவின் முதல் தெலுங்கு படம் இதில் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ளார்.மீண்டும் சந்திரஞ்சீவியுடன் காய் கோர்த்து நடித்த தாகூர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.அதை தொடர்ந்து ராகவ லாரன்ஸ் இயக்கிய மாஸ் படத்தில் நாகர்ஜுனவுடன் இணைந்து நடித்தார்.அதே படம் தமிழில் வீரன் என்ற பெயரில் வெளியானது.ரவி வர்மா தயாரித்த ஷாக் திரைப்படத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்தார். ஜோ நடித்த மொழி படமானது தெலுங்கில் மாட்டாரணி மௌனமிடி என்ற பெயரில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

ஜோ வாங்கிய விருதுகள் :

தமிழ்நாட்டின் மாநில விருதுகள்

2004 – தமிழ்நாட்டின் சிறந்த நடிகைக்கான விருது: பேரலகன்
2005 –  தமிழ்நாட்டின் சிறந்த நடிகைக்கான விருது : சந்திரமுகி
2007 – தமிழ்நாட்டின் சிறந்த நடிகைக்கான விருது:  மொழி

இன்டெர்னஷல் தமிழ் பிலிம் விருதுகள் :

2004 — இன்டெர்னஷல் தமிழ் பிலிம் விருதுகள் : (Special Jury For Best Actress): காக்க காக்க

கலைமாமணி விருது :

2005 – சிறந்த நடிகைக்கான கலைமாமணி விருது: ஆர்ட் - பிலிம் இண்ட்ஸ்ட்ரி
2005 - தமிழக சிறந்த நடிகைக்கான விருது- சந்திரமுகி
  
பிலிம் பேர் அவர்ட்ஸ்

1999 – சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான விருது : வாலி 
2000 – தமிழின் சிறந்த நடிகைக்கான விருது: குஷி
2015 – தென்னிந்திய சிறந்த நடிகைக்கான க்ரிட்டிக்ஸ் பிலிம் ஃபேர் விருது: 36 வயதினிலே

தென்னிந்திய இன்டெர்னஷனால் திரைப்பட விருது :

2015 பரிந்துரைக்கப்பட்டது- சிறந்த நடிகைக்கான விருது - தமிழ் - 36 வயதினிலே

ஐ ஐ எப் எ விருதுகள்

2015 பரிந்துரைக்கப்பட்டது- சிறந்த நடிகைக்கான விருது - தமிழ் - 36 வயதினிலே

விஜய் விருதுகள்

2007 பரித்துறைக்கப்பட்டர் -பிடித்தமான நடிகை - மொழி
2007 பரித்துறைக்கப்பட்டார்- சிறந்த நடிகை- மொழி

பரிந்துரைக்கப்பட்ட விருதுகள்

தமிழ்

2001 – சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருது-தமிழ்  : பூவெல்லாம் உன் வாசம்
2003 –சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருது -தமிழ் : தூள்
2003 –சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருது-தமிழ்: காக்க காக்க 
2007 –சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருது-தமிழ்: மொழி
2015 – சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருது -தமிழ்:36 வயதினிலே

ஜோ மீண்டும் திரையுலகில் கால்பதிக்க காரணமானவர்கள்:

    "நண்பர்கள்தான் நம்பிக்கை கொடுத்தனர். காயத்ரி ஸ்ரீநாத், தேவி இவங்க இல்லாத வீட்டை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தேவி, என் குழந்தைகளுக்கு இன்னொரு அம்மா. காலை 7 மணிக்கு புறப்பட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டால், நான் வரும்வரை கண்ணும் கருத்துமாகக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வார். குழந்தைகளை என் அப்பா (மாமனார் சிவகுமார்) பள்ளிக்கு அழைத்துச் செல்வார். பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவது அம்மா (மாமியார் லட்சுமி). ஏதாவது அவசரம் என்றால் என் நண்பர்கள் உடனடியாக உதவிக்கரம் நீட்டி விடுவார்கள். நான் மீண்டும் நடிக்க வந்ததுக்கு பக்கத்து வீட்டு சாராவும் ஒரு காரணம்" என ஜோ அவர்கள் ஒரு நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். 36 வயத்தினிலே படத்தில் தற்செயலாக நடித்ததாக கூறிய ஜோ நல்ல கதை கதாபாத்திரம் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன் என கூறி தன் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சிச்சியை அளித்துள்ளார்.

தொகுப்பு : ர.செகனாஸ் பேகம்