கபடி | Latest tamil news about Kabaddi | VikatanPedia
Banner 1
தமிழர் விளையாட்டு

கபடி

கபடி நம் தமிழகத்தின் முக்கிய விளையாட்டுக்களின் ஒன்றாக உள்ளது..ஜல்லிக்கட்டிற்கு (ஏறு தழுவுதல்)தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது.கபடி அதாவது கை+பிடி =கபடி.

கபடி நம் தமிழகத்தின் முக்கிய விளையாட்டுக்களின் ஒன்றாக உள்ளது..ஜல்லிக்கட்டிற்கு (ஏறு தழுவுதல்)தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது.கபடி அதாவது கை+பிடி =கபடி. இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி .ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர் .மொத்த விளையாட்டு நேரம் 40நிமிடங்கள் ..இந்தியாவில் தான் முதன் முதலில் உருவாகியது இந்த கபடி விளையாட்டு..

கபடி வரலாறு:
கபடி விளையாட்டு பண்டைய காலத்தில் தோன்றியது..இது இன்றும் தமிழ்நாடு மற்றும் பிற தென்னிந்திய மாநிலங்களும்,தெற்காசிய ஆசியாவில் இந்த விளையாட்டு பரவியது..1936 ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக்கில் இந்தியா ஆர்ப்பாட்டம் நடத்தியபோது கபடி சர்வதேச வெளிப்பாட்டைப் பெற்றது.1938 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் இந்தியா தேசிய விளையாட்டுகளில் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது..1950 ஆம் ஆண்டில் அனைத்து இந்தியா கபடி federation (AIKF) நடைமுறைக்கு வந்தது 1979 ஆம் ஆண்டில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் , .1979 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் மற்றும் இந்தியா முழுவதும் நடைபெற்றன.முதல் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 1980 நடைபெற்றது மற்றும்  இறுதிப் போட்டியில் மற்ற அணிகள் நேபாளம் ,மலேசியா மற்றும் ஜப்பான்.1990 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் ஏழு அணிகள் பங்கேற்ற ஆசிய விளையாட்டுகளில் முதல் முறையாக இந்த விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது..2004 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற கபடி போட்டியின் முதல் உலக்க கோப்பைபை இந்தியா வென்றது .முதல் ஆசிய மகளிர் சாம்பியன்ஷிப் 2005 இல்..ஹைதாரபாத்தில் நடைபெற்றது .இந்தியா தங்கம் பதக்கம் வென்றது .2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி  முதல் நவம்பர் மாதம் 3ஆம் தேதி வரை மக்காவில் நடைபெற்ற 2வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி விளையாடியது மீண்டும்  இந்தியா தங்க பதக்கம் வென்றது..

கபடி விதிகள் :
ஜல்லிக்கட்டை மையைப்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டு கபடி. விளையாட்டில் ஒரு குழுவிற்கு 7 பேர் இருப்பார்கள். உபரி வீரர்கள் என 5 பேர் இருப்பார்கள். இவர்கள் விளையாட்டின் போது வீரர்களுக்கு காயம், உடல்நலமின்மை ஏற்பட்டால் களம் இறங்குவர்.
ஒரு குழுவினர் களம் இறங்கியதும், எதிர் அணியில் ஒருவர் மூச்சை அடக்கி பாடிக் கொண்டே எல்லைக் கோட்டினைத் தொட வர வேண்டும். கோட்டினைத் தொட்டுவிட்ட பின் வெளியேற வேண்டும் முடிந்தால் வீரர்களையும் தொட்டுவிட்டு வெளியேறலாம்.
குழுவினர் தம்மைத் தொட வரும் எதிரணி நபரை தமது எல்லைக்குள் வரும் போது ‘லாவகமாக’ பிடிக்க வேண்டும். பாடிக் கொண்டே வருபவர் சில நகைச்சுவைத் ததும்பும் பாடல்களை மூச்சைப் பிடித்து பாடி “தொட்டு வெளியேற” முனைவர். கபடி, கபடி, கபடி” என்று மூச்சை அடக்கி பாடிக்கொண்டே வருபவரை இழுத்துப் பிடிக்க முனைவர் எதிர் அணியினர். ஒவ்வோர் அணியிலும் அதிகபட்சம் 12பேர் இருப்பார்கள் ஆனால் களத்தினுள் இருப்பவர்கள் 7பேர் மட்டுமே மீதி ஐவரும் மாற்று விளையாட்டு வீரா்கள்..


இந்தியாவில்  பின்பற்றப்படும் 3 முக்கிய கபடி  வகைகள்:

சர்ஜீவ்னி :
இந்த சர்ஜீவ்னி விளையாட்டு விதிகள் என்பது சர்வதேச அளவைப் போலவே ஆனால் இதில் சிறிய வேறுபாடு ஆகும்.பாடு வருபவரின் கை,கால் ,இடுப்புப்பகுதிகளை மட்டும்தான் பிடிக்கவேண்டும..அவர் வாயை பொத்தக்கூடாது.மீறிச் செய்தால் அது ஃபவுல் ஆக எடுத்துக்கொள்ளப்படும். ஒருவர் பல முறை ரைடு போகலாம்.ரைடு போகிறவர் ஏறு தொடாமல் வந்தாலும் அவுட் செய்தால் .

அமர் :
நம்ம  ஊரில்  விளையாடப்படும்  'சர்ஜீவினி'  முறை கபடிக்கு எல்லா  வீரர்களும் பலசாலியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.  ஏனென்றல் இதில் பாடி வருபவரை எல்லோரும் பிடிக்கலாம். ஆனால் 'அமர்' முறை ஆட்டத்தில் பாடி வருபவரை ஒருவர்  மட்டுமே பிடிக்கவேண்டும். மற்றவர்கள் எல்லோரும் 'தேமே' ன்னு நின்னு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். 
மேலும், இதன் ஆடுகளம் வட்ட வடிவில் இருக்கும். இந்த விளையாட்டு முறை அதிகமாக பஞ்சாப்பில் தான் விளையாடப்படுகிறது. இதற்கு 'வட்டக்கபடி'  என்ற பெயரும் உண்டு.

ஹுட்டுட்டு :
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் விளையாடப்படும் விளையாட்டு. பிரிட்டிஷ் ராணுவத்தில் பொழுதுபோக்குக்காக விளையாடுகிறார்கள். ஸ்காட்லாந்து கிராமங்களில், வேறு மாதிரியான நெறிமுறைகளை வைத்து விளையாடபடும் விளையாட்டு ஹுட்டுட்டு.  அமர், ஹுட்டுட்டு போன்ற கபடி விளையாட்டுகளில் விதிமுறைகள் குறைவு. ஆனால் தமிழ்நாட்டு கபடி போட்டியில் நிறைய ரூல்ஸ் இருக்கிறதாம்.


புரோ கபடி லீக்:
கிரிக்கெட் ஹாக்கி பீரிமியர் லீக் வரிசையில் கபடியும் நுழைந்துள்ளது..
கபடு 2014-லில் ஆராம்பிக்கப்கட்டது ஒரு மாபெரும் திருவிழாவாக வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.கபடி என்பது உலக அளவில் சில நாடுகளே விளையாடினாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்ற விளையாட்டு ,மேலும் கபடி கென்று தனியாக உலக கோப்பையும் இருக்கிறது ..இந்த உலக கோப்பையும் 2004லிருந்து 2013 வரை நடந்த ஆறு உலக கோப்பையும் இந்தியா கைப்பற்றியுள்ளது...

ஒலிம்பிக் கபடி என்ற கனவு:
கபடிப் போட்டி ,ஏன் ஒலிம்பிகில் இடம் பெறவில்லை?.
மத்திய மற்றும் மேற்கு ஆசியப் பகுதியில் கபடி பரவலாக விளையாடப்படுகிறது நோபாளம்,இரான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளின் தேசிய விளையாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளன ஸ்பெயின்,கென்யா ,ஜப்பான் ,கனாட போன்ற ஆசியப் பகுதியில் அல்லாத நாடுகளும் கபடி உலகக் கோப்பையில் பங்கு கொள்கின்றன...என்பது ஒலிம்பிக்ஸ் சங்கத்துக்கு கணக்கில்லை. எத்தனை தொழில்முறை சங்கங்கள் இருக்கிறது, அவை எத்தனை போட்டிகள் நடத்துகின்றன என்பதுதான் ஒலிம்பிக்ஸ் சங்கம் கணக்கெடுத்துக் கொள்கிறது. தற்போது, 4 கண்டங்களில் 75 நாடுகளில் கபடி விளையாடப்பட்டாலும் 26 நாடுகளில்தான் தேசிய அளவிலான அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்கள் உள்ளன. பல நாடுகளில் விளையாடப்பட்டாலும், தொழில்முறை சங்கங்கள் இல்லாததால் அதை சர்வதேச விளையாட்டில் ஒன்றாக அங்கீகரிக்க ஒலிம்பிக்ஸ் சங்கம் மறுத்துள்ளது. கபடியை தங்கள் நாடுகளில் விளையாடும் நாடுகள், அதற்குத் தொழில்முறை விளையாட்டாக அங்கீகாரம் அளிக்க முன்வரவேண்டும் என்பது, கபடி விளையாட்டு வீரர்களின் கோரிக்கையாக உள்ளது.

இவர்தான் இந்தியாவின் கபடி கில்லி-- ராகுல் சவுதாரி 
இந்தியாவில் எக்கச்சக்க பெண் ரசிகைகள் ராகுல் சவுதாரிக்கு உண்டு. உத்தர பிரதேசத்தில் உள்ள பிஜினார் என்ற கிராமத்தில் இருந்து வந்தவர் ராகுல். கிராமத்தில் உள்ள படங்களுடன் அடிக்கடி கபடி விளையாடச் சென்றுவிடுவார் . கபடி ஆடிக் கொண்டிருக்கும்போதே பெற்றோர்களிடம் இருந்து அடி விழும். ஒழுங்காக படிக்கிற வழியை பாரு, கபடி ஆடி வாழ்க்கையைத் தொலைத்து விடாதே என பெற்றோர்கள் அறிவுறுத்த, நான் கபடி தான் ஆடுவேன் என பிடிவாதம் பிடித்தார் ராகுல். நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்க, சோத்தை போடுவது மட்டும் எங்களோட கடமை என சொல்லிவிட்டு  தண்ணி தெளித்துவிட்டார்கள் பெற்றோர்கள். பிடிவாதம் பிடித்த ராகுல் பெற்றோர்களிடம் சரியாக பேசுவதையே நிறுத்தி விட்டார். முழு கவனத்தையும் கபடியில் குவித்தார். வருடங்கள் உருண்டோட, மாவட்ட அணி, மாநில அணி என ராகுல் முன்னேறினார்.  கபடியை பொறுத்தவரை  தோனியின்  ஆட்டிடியூட் கொண்டவர் ராகுல். 
 

தொகுப்பு : கு.மோகனலட்சுமி