காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்
கண்ணுக்கு மை அழகெல்லாம் பழைய கதை. கண்ணுக்கு காஜல் அழகுதா இப்போ ட்ரெண்ட். அப்படி அழகுப்பதுமையா தமிழ் , தெலுங்கு, ஹிந்தினு வலம் வர இவங்களும் மராட்டியம் கொடுத்த கொடை. 19 ஜூன் 1985 வினய்-சுமன் அகர்வாலுக்கு மகளாகவும் நிஷா அகர்வாலுக்கு அக்கவாகவும் இருந்தவங்க 2004 ல சினிமா துறைக்கு வந்தாங்க.
க்யூன் ! ஜோ கயா நா படத்தில் உலக அழகிற்கு தோழியாய் நடித்த இவர் 2007 இல் தெலுங்கு பட உலகிற்கு லட்சுமி கல்யாணம் மூலமும் 2008இல் பேரரசின் பழனி வழியும் ஹீரோயினாக அறிமுகமான இவர் நடித்த கிருஷ்ணவம்சியின் “சந்தமாமா” வெங்கட்டின் “சரோஜா” பாரதிராஜாவின் “பொம்மலாட்டம்” என எல்லாம் ஆடிப்பார்த்தும் செல்லுப்படி ஆகவில்லை.
ஆனால் எஸ்.எஸ்.ராஜமவுலியின் உதயகிரி இளவரசி மித்ராதேவியாய் “கண்மூடும் வேளையிலும் எங்காதல் கனவா பார்த்திபா?” என்று மலையிலிருந்து விழுந்த இவர் புகழின் உச்சத்தையே அடைந்தார். அதே கூட்டணியில் நாயக், கோவிந்துடு அண்டறிவாடித்தே, எவடு எல்லாம் பாக்ஸ் ஆஃபீஸ் பிடிக்க அடுத்தடுத்து பிரபாசுடன் டார்லிங், mr. பெர்பக்ட் ஜூனியர் என்.டி.ஆருடன் பிருந்தாவனம், பாட்ஷா, டெம்பர் மகேஷ்பாபுவுடன் பிசினஸ் மேன் என ஆந்திராவை கலக்கிய கையோடு மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மாரி, பாயும்புலி, கவலை வேண்டாம் என கவலையே இல்லாமல் கலக்கி வருகிறார்.
4 முறை பிலிம்பேர்க்கு நோமினேட் ஆன இவர் சைமா, யூத் ஐகான் ஆப் சவுத் இந்தியா, கோட்ஜியஸ் பெல்லி ஆப் இயர், பாஷன் ஐகான் பெமினா அவார்ட் என விருதுகளை அள்ளிவிட்டார் அழகி.

"யோகி பாபு எதைத் தொட்டாலும் அது தங்கமா மாறும்!" - Kajal Agarwal | Ghosty | Indian 2

வலைபாயுதே

ஹே! சினாமிகா - சினிமா விமர்சனம்

ஹே சினாமிகா விமர்சனம்: அர்ஜென்டினிய இறக்குமதி... ஆனால், செய்த மாற்றங்கள் கைகொடுக்கின்றனவா?

பிங்க் பனராஸ் சேலையில் ஜொலிக்கும் காஜல் அகர்வால்; வைரல் நிகழ்வு இதுதான்!

"கொஞ்சம் கஷ்டம்தான் வாழ்வதும் வாழ விடுவதும்..." - உடல் குறித்த கேலிக்கு காஜல் அகர்வாலின் பதிவு!

வலைபாயுதே
இந்தியன்- 2 அப்டேட்: காஜல் அகர்வாலுக்குப் பதில் த்ரிஷாவா?! பின்னணி என்ன...

“நடிகைகள் கல்யாணமானா நடிக்கக்கூடாதா?”

Exclusive: என் கால்ஷீட்டுக்காக ஹீரோயின் காத்திருப்பாங்க! - Indias No.1 Saree Drapist Saraswathi

இன்பாக்ஸ்
