கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். குழந்தை நட்சத்திரம், நடனக் கலைஞர், உதவி இயக்குநர் என வளர்ந்து நடிகராக தனனை நிலைநிறுத்தி பிறகு இயக்குநராகவும் தடம் பதித்தவர். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை அதிகம்பேர் பார்க்கும் மிகப்பெரிய நிகழ்ச்சியாகவும் தன்னால் மாற்ற முடியும் என்று சமீபத்தில் நிருபித்தவர்.  அந்த  நிகழ்ச்சியை தன் பாணியில் தொகுத்து வழங்கியதன் மூலம் தமிழ் மக்களின்   ஒவ்வொரு வீட்டிலும்    தன் பேர் சொல்லும் பிள்ளையாக  இருப்பவர், தமிழ் சினிமாவை இந்தியாவுக்கும்  இந்திய சினிமாவை உலகுக்கும் வெளிச்சம் போட்டு காட்டியவர் நம் ‘பிக் பாஸ்’ கமல்ஹாசன்.

பிறப்பு
பரமக்குடிக்காரன் என்று தன்னை பல மேடைகளில்  கமல்ஹாசன் சொல்லிக்கொண்டாலும் பிறந்தது இராமநாதபுரத்தில்தான். வளர்ந்ததுதான் பரமக்குடி. மூத்த அண்ணன் சாருஹாசன் (வழக்கறிஞராக இருந்து நடிகரானவர்)1930ல் பிறந்தார். இரண்டாவது அண்ணன் சந்திரஹாசன் (இவரும் வழக்கறிஞர் டு நடிகர்தான்) 1936ல் பிறந்தார். அக்கா நளினி (நடனக்கலைஞர்)1946ல் பிறந்தார்.  பின்னர் வழக்கறிஞர் ஸ்ரீனிவாச ஐயங்காருக்கும் ராஜலக்‌ஷ்மிஅம்மையாருக்கும் 1954 நவம்பர் 7ஆம் தேதி கடைசி மகனாகப்  பிறந்தவர் கமல்ஹாசன். அவரது இயற்பெயர் ‘பார்த்தசாரதி’. தன் அம்மா இறக்கும்வரைகமலை, பார்த்தசாரதி என்றே அழைப்பாராம். 

பெயர்க்காரணம்: 
சுதந்திரப்போராட்ட காலத்தில் அவருடைய அப்பாவுடன் சிறைசென்ற இஸ்லாமிய நண்பர், ‘யாக்கோப் ஹாசன்’. அந்த விடுதலை வீரருடைய பெயர்தான்‘கமல் ஹாசன்’ என்று இவரது அப்பாவால் சூட்டப்பட்டது. 

இளமைப் பருவம்:
தன் சிறு வயதில் தாயின் தோழி ஒருவரால் ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு மெய்யப்பச்செட்டியாரின் கண்பட்டு பீம்சிங்இயக்கும் ‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பரமக்குடி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் தொடக்க கல்வி. பிறகு சென்னை வந்ததும் திருவல்லிக்கேணி இந்து ஹை-ஸ்கூலில் படித்தார். அதன்பிறகு பட வாய்ப்புகள் நிறையவர பள்ளி சென்று படிக்க நேரமில்லாமல் வீட்டுக்கே ஆசிரியர் வந்து பாடம் நடத்தினார். இளமைப் பருவத்திலேயே சம்ஸ்க்ருதம்,பார்ப்பனியம் மீது ஆர்வமில்லாத கமல்ஹாசன் தன்  வீட்டருகே இருந்த சலூன் கடையில்கூட வேலை செய்து இருக்கிறார். 

திரைப்பயணம்:
குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மா’, ‘ஆனந்த ஜோதி’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘பாதகாணிக்கை’, ‘வானம்பாடி’ ஆகிய ஐந்து படங்களில்நடித்திருந்த நிலையில் கமலுக்கு நடனம் மீது அதீத காதல். இப்படி நடிப்பு, நடனம் என்று இருந்ததால் அவரின் அப்பா சீனிவாசன் கமலை அழைத்துக்கொண்டு, அவ்வை டி.கே.சண்முகம் அவர்களை சந்தித்தார். ‘சாருஹாசன், சந்திரஹாசன் இரண்டு பேரும் நல்லா படிக்கிறாங்க. இவனைத்தான் என்ன பண்றதுன்னு தெரியலை. படிப்பைவிட கலைத் துறையில ஆர்வமா இருக்கான். அதனால உங்கக்கிட்டே கொண்டு வந்துட்டேன்’ என்று கூறி விட்டுச்சென்றார்.

டி.கே.எஸ். நாடகக் குழுவில் கிடைத்த பயிற்சியால்தான், உச்சஸ்தாயில் பாட வேண்டிய பாடல்களைக் கூட சர்வ அலட்சியமாக பாட அவரால்முடிந்தது. நடிகர்கள் பெண் வேடமிட்டு திரையில் தோன்றுவது அவ்வப்போது நிகழக்கூடியதுதான். அவையெல்லாம் ஒரு சில காட்சிகள்தான் இருக்கும். ஆனால், கமல்ஹாசன், படம் முழுவதும் பெண் வேடமிட்டு நடித்தார். சிறுவயதில், தான் குருகுலவாசம் செய்த அவ்வை டி.கே.எஸ்.சகோதரர்களின்நாடகக் குழுவின் மேல்கொண்ட பற்றினாலும், குருவின் மேல்கொண்ட பக்தியினாலும், அந்தப் படத்துக்கு ‘அவ்வை சண்முகி’ என்றே பெயர் வைத்தார். 

நடனம்
சிறு வயதில் ‘குச்சிப்புடி' மேல் ஆர்வம் கொண்ட கமலுக்கு எம்.எஸ்.நடராஜன் அவர்களை மாஸ்டராக்கினார் அவரின் அம்மா. நடன வகுப்பு வீட்டைவிட்டிலிருந்து அதிக தூரத்தில் இருந்ததால் மாஸ்டரை வீட்டுக்கு வரவழைததார் அவரது அம்மா. மாஸ்டரோ “இவன் ரொம்ப வேகமா கத்துக்கிறான். உங்க வீட்ல எனக்கும் என் மனைவிக்கும் தங்க இடம் கொடுங்கள். தவறாமல் நான் வகுப்புக்கு வருகிறேன்" என்று சொல்லியிருக்கிறார். அப்படியே நடக்க, பிறகு பள்ளி ஆசையே விட்டுவிட்டு நடன வகுப்பிலேயே கிடந்திருக்கிறார் பதின் பருவ கமல். 

ஒரு அரங்கேற்றத்தில் ஏற்ப்பட்ட விபத்து, ‘கமல் இனி நடனமே ஆட முடியாது' என்று ஆகியது. வீட்டில் வேலையின்றி இருந்தபோது வீட்டருகே இருந்தபார்பர் ஷாப்பில் வேலை செய்து இருக்கிறார் இதுவே பின் நாட்களில் ‘வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் கமலின் கதாப்பாத்திரமாக வெளிப்பட்டது. கிறிஸ்துவ நிகழ்வு ஒன்றை பரதநாட்டியம் கலந்து நிகழ்த்தியதை பார்த்த தங்கப்பன் மாஸ்டர் கமலை தன் உதவியாளராக்கிக்கொண்டார்.  தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக சேர்ந்த கமல் ‘பரதத்தில்’ கில்லி ஆனார். பல திரைப்படங்களில் பணியாற்றி தன் முதல் திரை தோற்றம்‘மாணவன்’(1970) என்கிற படத்தில் ஒரு நடன சீக்குவென்ஸில் அரங்கேறியது. எம்.ஜி.ஆருக்கு ‘நான் ஏன் பிறந்தேன்’ திரைப்படத்திலும் ஜெயலலிதாவுக்கு‘அன்பு தங்கை’ படத்திலும் சிவாஜிக்கு ‘சவாலே சமாளி’ படத்திலும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார். அப்போது ஒரு பாடலுக்கான டான்ஸை எம்.ஜி.ஆருக்காக கம்போஸ் செய்யும்போது அவருக்கு சிவாஜிக்குரிய நடன அசைவுகளை கற்றுக்கொடுத்து இருக்கிறார்.  ‘குறும்புக்காரா...’ என்று செல்லமாக எம்.ஜி.ஆர். அப்போது கோபித்துக்கொண்டாராம். 

கே.பியும் கமலும்
கே.பாலசந்தரின் படங்களில் ஏராளமாக கமல் நடித்தார். அவரது பட்டறையில் நடித்த படங்கள் எல்லாம் வித்தியாசமான பரிமாணங்களை கொண்டவை. ‘மை டியர் ராஸ்கல்’ என்று விளித்துத்தான் கே.பி.இவருக்கு கடிதம் எழுதுவார். இவர் நாயகன் ஆகும் முன்பே கே.பியின் பல படங்களில் உதவிஇயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். சிறிதும் பெரிதுமான ரோல்களில் அவர் படங்களில் நடித்து இருக்கிறார். “அரங்கேற்றம்" படத்தில் முழு நீளகதாப்பாத்திரம் கொடுத்தார் கே.பாலச்சந்தர். ‘ரஜினியும் நானும் கிளாஸ்மெட் மாதிரி. இன்னும் சொல்லப் போனால், ஒரே பெஞ்ச்மெட். கே.பாலசந்தர்என்கிற பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் அந்த பாசம் எங்களிடையே எப்பவும் உண்டு. ஆனால், கபில்தேவ், இம்ரான்கான் மாதிரி ஆரோக்கியமானபோட்டியும் உண்டு’ என்று கூறுவார் கமல். ஆனால் பாலச்சந்தர், கமலை அவர் இல்லாதபோது மற்றவர்கள் முன்னிலையில் புகழ்வதும் அவர்முன்னிலையில் “உதவாக்கர டேய்” என்று திட்டுவதும் வழக்கம்.  

ஆஸ்கர் நாயகன்:
‘பிற மொழி படங்கள்' பட்டியலில்‘நாயகன்’ ஆஸ்கருக்கு இந்திய சினிமாவின் சார்பாக அனுப்பப்பட்டது.  அதில் தொடங்கி ஆஸ்கருக்கு சென்றஇந்தியப்படங்களில் பெரும்பாலும் கமல் படங்களே. கமலுக்கு சினிமா சென்டிமென்டுகளில் எப்போதுமே நம்பிக்கை கிடையாது. ‘ஹே ராம்’ படத்தின்தொடக்கக் காட்சியின் முதல் வசனமே, ‘சாகேத்ராம், திஸ் ஈஸ் பேக்-அப் டைம்’ இப்படித்தான் இருக்கும். கமலுக்கு திரைப்படங்களைவிட புத்தகங்கள்மீதே அதிக ப்ரியம். இதிகாசங்களில் இருந்து, நவீன இலக்கியங்கள் வரை எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டு வருவார். அதேபோல்திரைப்படத்துறையின் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார். 

கமலுக்கு, தான் ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படிக்கவில்லையே என்ற ஏக்கம் உண்டு. அந்த ஏக்கமே அவரை சினிமாவின் அத்தனைதொழில்நுட்பங்களிலும் கைதேர்ந்தவராக உருவாக்கியது. நடிகனாக வேண்டும் என்ற ஆவலில் சினிமாத்துறைக்கு கமல் வரவில்லை, இயக்குநராகவேண்டும் என்ற ஆவலுடன்தான் திரைப்படத்துறைக்கு வந்தார். ஆனால், அவர் இயக்குநாரகி இருந்தால், நல்ல திரைப்படங்கள் கிடைத்திருக்கும். ஆனால், சிவாஜிக்கு பிறகு சிறந்த நடிகர் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே கிடைக்காமல் போயிருக்கும். 

பேசும் சினிமா வந்து ஐம்பத்தைந்து ஆண்டுகளான பிறகு, பேசாத படத்தில் நடித்து சாதனை படைத்தார். அந்தப் படம், ‘பேசும்படம்’. படம்பேசியது. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், பாலுமகேந்திரா என்று திரைத்துறை ஜாம்பவான்களுடன் பணியாற்றிய கமல், ஏனோமகேந்திரனுடன் படம் பண்ணவேயில்லை. 

நட்பு
எழுத்தாளர் சுஜாதா, சந்தானபாரதி, அனந்து, ஆர்.சி.சக்தி, ரமேஷ் அர்விந்த்... உள்பட கமலுக்கு மிகவும் நெருக்கமான நட்பு வட்டம் உண்டு. இவர்களிடம்கதை குறித்த விவாதங்கள், நவீன சினிமாவைப் பற்றிய விமர்சனங்களை காரசாரமாக எடுத்து வைப்பார். கிரேசி மோகனுடன் பல காமெடி படங்களில்பணியாற்றியிருந்தாலும் அந்த சினிமா பயணத்தை தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள். மெட்ராஸ் பாஷை பேசி நடிக்கும் வெகு சில நடிகர்களில்இவர்கள் இருவரும் அடங்குவர். நாகேஷ், மனோரமா, வி.கே.ஆர். ஆகிய மூவரிடமும் மாறாத பாசம் கொண்டவர் கமல். தன்னுடைய தயாரிப்புகளில், தான் நடிக்கும் படங்களில் இவர்கள் இருப்பதை பெரிதும் விரும்புவார். 

மன வாழ்வு
சாதி மதம் மேல் நம்பிக்கையில்லாத கமல் திருமணம் மீதும் நம்பிக்கையில்லாதவர். 1978ல் வாணி கணபதியை மணந்தார். கருத்து வேறுபாட்டுக்குப்பிறகு பிரிந்தனர்.  பிறகு சரிகாவுடன் சேர்ந்து வாழ்ந்தார். இவர்களுக்கு 1986ல் ஸ்ருதி பிறந்தபின் 1988ல் சரிகாவை முறை திருமணம்செய்து கொண்டனர். 1991ல் அக்ஷரா பிறந்தார். பிறகு சரிகாவுடனான மணவாழ்க்கை முறிவானது. பிறகு 2005 - 2016 கௌதமியுடன் சேர்ந்து வாழ்ந்துவந்தார்.

படைப்புகள்
கமலும் இவரைவைத்து மற்றவர்களும் தமிழ் சினிமாவிற்கு தந்த மிக முக்கியமான படங்கள்: ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம், அன்பே சிவம், இந்தியன், ஆளவந்தான், சத்யா, தசாவதாரம், மகாநதி, குருதிப்புனல், குணா, தேவர் மகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், நாயகன், பேசும் படம், புன்னகை மன்னன், விக்ரம், சாகர சங்கமம் (சலங்கை ஒலி), மூன்றாம் பிறை, வறுமையின் நிறம் சிவப்பு, நினைத்தாலே இனிக்கும், சிகப்பு ரோஜாக்கள், அவள் அப்படித்தான், இளமை ஊஞ்சலாடுகிறது, பதினாறு வயதினிலே, அவர்கள், மூன்று முடிச்சு, மன்மத லீலை, அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், களத்தூர் கண்ணம்மா. 

படம் நல்லா இருக்கு, ஹிட் என்பதைத் தாண்டி Bunny-க்குத் தேவைப்பட்டதெல்லாம் ஒன்றுதான்! #HBDAlluArjun
உ. சுதர்சன் காந்தி

படம் நல்லா இருக்கு, ஹிட் என்பதைத் தாண்டி Bunny-க்குத் தேவைப்பட்டதெல்லாம் ஒன்றுதான்! #HBDAlluArjun

`உணவுக்கே எண்ணெய் இல்லாதவன் எங்கே விளக்கேற்றுவது?’-பிரதமருக்கு கமல் கடிதம்
ராம் பிரசாத்

`உணவுக்கே எண்ணெய் இல்லாதவன் எங்கே விளக்கேற்றுவது?’-பிரதமருக்கு கமல் கடிதம்

டியர் விஜய், அஜித்... உதவித்தொகை வேண்டாம்; ஒரு விழிப்புணர்வு வீடியோகூட இல்லையே ஏன்? ஒரு ரசிகனின் கடிதம்!
நமது நிருபர்

டியர் விஜய், அஜித்... உதவித்தொகை வேண்டாம்; ஒரு விழிப்புணர்வு வீடியோகூட இல்லையே ஏன்? ஒரு ரசிகனின் கடிதம்!

``மருத்துவம் முடியாது; ஆனா, தூய்மை பணியாளர்கள்கூட வேலை செய்யத் தயார்!" - சினேகன்
சனா

``மருத்துவம் முடியாது; ஆனா, தூய்மை பணியாளர்கள்கூட வேலை செய்யத் தயார்!" - சினேகன்

``எனக்கு காய்ச்சலோ, கொரோனாவோ இல்லை... ஆனால், அலட்சியமாக இல்லை!'' - கெளதமி
எம்.குணா

``எனக்கு காய்ச்சலோ, கொரோனாவோ இல்லை... ஆனால், அலட்சியமாக இல்லை!'' - கெளதமி

` அம்பு எய்தது யார்...?’ - கமல் இல்லத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் கொதிக்கும் ம.நீ.ம
செ.சல்மான் பாரிஸ்

` அம்பு எய்தது யார்...?’ - கமல் இல்லத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் கொதிக்கும் ம.நீ.ம

நடிகையின் பாஸ்போர்ட்டில் இருந்த முகவரி.. குழப்பம்.. கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது ஏன்?
மலையரசு

நடிகையின் பாஸ்போர்ட்டில் இருந்த முகவரி.. குழப்பம்.. கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது ஏன்?

கழுகார் பதில்கள்
கழுகார்

கழுகார் பதில்கள்

ஜனதா கர்ஃபியூ... இந்த மூன்று காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது! #JanataCurfew
கானப்ரியா

ஜனதா கர்ஃபியூ... இந்த மூன்று காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது! #JanataCurfew

ஒரே ஒரு பேட்டி... டோட்டல் க்ளோஸ்! ரஜினி உடைத்த ஃபர்னிச்சர்கள் என்னென்ன?
ந.பொன்குமரகுருபரன்

ஒரே ஒரு பேட்டி... டோட்டல் க்ளோஸ்! ரஜினி உடைத்த ஃபர்னிச்சர்கள் என்னென்ன?

``ரஜினி சார் அரசியல் பக்கம் போறதுக்குள்ள இதைப் பண்ணிடுங்க ப்ளீஸ்!" - வெங்கடேஷ்
உ. சுதர்சன் காந்தி

``ரஜினி சார் அரசியல் பக்கம் போறதுக்குள்ள இதைப் பண்ணிடுங்க ப்ளீஸ்!" - வெங்கடேஷ்

ஏப்ரல் பிளான்... ரஜினி அரசியல் ‘அண்ணாத்த’!
விகடன் டீம்

ஏப்ரல் பிளான்... ரஜினி அரசியல் ‘அண்ணாத்த’!