காமராஜர்

காமராஜர்

காமராஜர்

காமராஜர் வாழ்க்கை வரலாறு:

பிறப்பு:

குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாளுக்கு 1903 ஆம் ஆண்டு ஜீலை 15 ஆம் தேதி விருதுநகரில் பிறந்தார். ”காமாட்சி” எனும் குலதெய்வத்தின் பெயரே ஆரம்பித்தில் இவருக்கு சூட்டப்பட்டது...அவரின் தாய் செல்லமாக “ராசா” என அழைப்பதுண்டு. பிற்காலத்தில் இவ்விரு பெயர்களும் சேர்ந்தே “காமராசர்” என்று வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த பெயராக மாறியது.

எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் !

‘‘அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்போது அது மக்களுக்குக் கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது. ஆகவே, வீண் சண்டைகளை, சர்ச்சைகளை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும்’’ என்றார் காமராஜர். ஆனால், எந்த அரசியல்வாதிகள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் அவர். 1953-54-ம் ஆண்டில் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்த நேரத்தில் முதல்வர் பதவிக்கு சி.சுப்பிரமணியமும் போட்டியிட்டார். முதல்வர் பதவிக்கு சுப்பிரமணியம் பெயரை பக்தவத்சலமே முன்மொழிந்தார். தேர்தலில் காமராஜர் வெற்றிபெற்றார். இதனால் சுப்பிரமணியமும், பக்தவத்சலமும் திகைத்துப்போனார்கள். தனது செயலுக்காக காமராஜரிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டார் பக்தவத்சலம். இந்த நிலையில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுப்பிரமணியத்தையும், அவரை ஆதரித்த பக்தவத்சலத்தையும் மந்திரி சபையில் சேர்த்துக்கொண்டார். இதுபற்றி சிலர் காமராஜரிடம் கேட்டபோது, ‘‘என்னை எதிர்த்தவர்கள் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஏற்கெனவே மந்திரிகளாய் பதவி வகித்து அனுபவம் பெற்றிருக்கும் அவர்கள் சேவை, நாட்டுக்குப் பயன்பட வேண்டாமா’’ என்று பதிலளித்தார்.

அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு !

காமராஜர் பயின்ற பள்ளியில் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். பிரசாதம் விநியோகிக்கப்படும்போது மாணவர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்று, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் பிரசாதத்தைக் கைநிறையப் பெற்றுக்கொள்வார்கள். பிரசாதத்துக்காக அந்த மாதிரி முண்டியடித்துக்கொண்டு செல்வது காமராஜருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, ஒரு மூலையில் ஒதுங்கி நின்றார். கடைசியாக மிச்சமிருந்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார். ‘‘எல்லோரும் நிறைய பிரசாதம் வாங்கிக்கொண்டு செல்லும்போது, நீ மட்டும் குறைவாக வாங்கிவந்தது ஏன்’’ என வீட்டில் உள்ளவர்கள் கேட்டனர். ‘‘மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சென்று பிரசாதம் வாங்க எனக்கு விருப்பமில்லை. பள்ளியில் எல்லா மாணவர்களிடமும் ஐந்து காசு வசூலித்தவர்கள், ஒரே மாதிரியாகப் பிரசாதம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு’’ என்றார் காமராஜர். அரசியல் தவிர அனைத்து சிக்கலான பிரச்னைகளையும் எளிதாகச் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர் காமராஜர்.

`காமராஜர் நினைவிடத்தை சுத்தம்செய்த மாணவர்கள்’ - `குடி’யால் கிடைத்த தண்டனை!
இரா.கோசிமின்

`காமராஜர் நினைவிடத்தை சுத்தம்செய்த மாணவர்கள்’ - `குடி’யால் கிடைத்த தண்டனை!

தோல்பாவைக் கூத்தின் மூலம் கொண்டாடப்பட்ட காமராஜர் பிறந்தநாள் விழா! - மதுரை மாணவர்கள் உற்சாகம்
அருண் சின்னதுரை

தோல்பாவைக் கூத்தின் மூலம் கொண்டாடப்பட்ட காமராஜர் பிறந்தநாள் விழா! - மதுரை மாணவர்கள் உற்சாகம்

`நான் இந்தப் பொறுப்புக்கு வர காமராஜர்தான் காரணம்!'- தமிழிசை
இரா.கோசிமின்

`நான் இந்தப் பொறுப்புக்கு வர காமராஜர்தான் காரணம்!'- தமிழிசை

`2000 வார்த்தைகள் தேர்வு!'- அரசுப் பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச செங்கோட்டையன் புது முயற்சி
இரா.கோசிமின்

`2000 வார்த்தைகள் தேர்வு!'- அரசுப் பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச செங்கோட்டையன் புது முயற்சி

``உயிரைக் கொடுத்து உழைப்பேன்” - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்
செ.சல்மான் பாரிஸ்

``உயிரைக் கொடுத்து உழைப்பேன்” - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்

வேலூரில் ஆட்டோ டிரைவரால் மாற்றுத்திறனாளி மாணவிக்கு நேர்ந்த சோகம்!
லோகேஸ்வரன்.கோ

வேலூரில் ஆட்டோ டிரைவரால் மாற்றுத்திறனாளி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

`சொத்தை அபகரிச்சுக்கிட்டாங்க மீட்டுக்கொடுங்க!’ - மகன்கள் மீது புகாரளித்த வயதான தம்பதி
ஜி.சதாசிவம்

`சொத்தை அபகரிச்சுக்கிட்டாங்க மீட்டுக்கொடுங்க!’ - மகன்கள் மீது புகாரளித்த வயதான தம்பதி

ஓர் அரசுப் பள்ளி, இரண்டு மாணவர்கள். அவர்களும் லீவ்! - தனியொருவராகத் தலைமை ஆசிரியர்...
அருண் சின்னதுரை

ஓர் அரசுப் பள்ளி, இரண்டு மாணவர்கள். அவர்களும் லீவ்! - தனியொருவராகத் தலைமை ஆசிரியர்...