Banner 1
முதல் பெண் மல்யுத்த வீரர்

கவிதா தேவி

WWE சாம்பியனான கிரேட் காளியின் பயிற்சியின் கீழ், நிறைய மல்யுத்த வீரர்கள் உருவாகிறார்கள். அந்த வரிசையில், இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீரராக ஹரியானாவின் கவிதா தேவியும் தற்போது இணைந்துள்ளார்.

பிறப்பு - கல்வி
கவிதா தலாலி 1983-ல் ஹரியானா ஜின்ட் மாவட்டம், மால்வியில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி. கவிதா தலால் ஜூனா சென் நடுநிலை பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார். கவிதா 2004 ஆம் ஆண்டு லா மார்டியீரே லக்னோ என்ற பல்கலைக்கழகத்தில் தனது பி.ஏ பட்டப்படிப்பை முடித்தார். இவரின் உயரம் 5 அடி 9 அங்குலம் ஆகும். இவருடைய உடல் எடை 63 கிலோ, அதாவது 139 எல்பி.


குடும்பம்
சசாஸ்திரா சீமா பால் (ச.ச.பி) பிரிவில் இந்திய காவல் துறை அலுவலரான கவுரவ் தலால் என்பவரை 2009 ஆம் ஆண்டு கவிதா மனம் புரிந்தார். கவுரவ் தலால் கைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டதனால் ஒரு சிறந்த கைப்பந்து வீரராக திகழ்கிறார்.  கவிதா கவுரவ் தம்பதிக்கு அபிஜீத் என்னும் மகன் உள்ளார். அவருடைய சகோதரர் சந்தீப் தலால் என்பவர் தான் கவிதாவிற்கு எடை தூக்கும் போட்டிக்காக பயிற்சி பெறவும் பங்குபெறவும் ஆர்வத்தை தூண்டி ஊக்கமளித்தார்.


எடை தூக்கும் பயிற்சியின் தொடக்கம்
கவிதா தனக்கு 20 வயதாகும் பொழுது தனது சகோதரர் அறிவுரைப்படி அவரின் ஊரிலுள்ள ஒரு பயிற்சி கல்விச்சாலையில் எடை தூக்கும் பயிற்சியில் சேர்ந்தார். சஷாஸ்ட் சீமா பாலில் விளையாட்டு பிரிவில் 2008-ஆம் ஆண்டு காவலர் பதவியை பெற்றார் கவிதா தலால். தனக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காததால் 2010-ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு எடை தூக்குவதில் முழுமையாக ஈடுபட முடிவெடுத்தார். தனது குழந்தையையும் தொழிலையும் ஒருசேர கவனித்துக்கொள்ளவும் ஒரு சிறந்த கலவையான தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெறவும் முடிவெடுத்தார். பிப்ரவரி 24, 2016 அன்று, கவிதா தலால்  கான்டினென்டல் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (CWE) என்றழைக்கப்படும் த கிரேட் காளீ பள்ளியில் தொழில்முறை மல்யுத்த வீராங்கனையாக பயிற்சியை தொடங்கினார்.


போட்டிகள்
ஜூன் 11, 2016 அன்று CWE வளையத்தில் ஒரு நேரடி நிகழ்வில் கவிதா தேவி முதன்முதலில் பொது மேடையில் தோன்றி பி.பி. புல் புல்லின்  திறந்த சவாலை ஒப்புக்கொண்டு போட்டியிட்டார். ஜூன் 18 ம் தேதி ஒரு புதிய நேரடி நிகழ்ச்சியில், பி.பி. புல் புல்லால் கவிதா போட்டியின்போது தாக்கப்பட்டார். ஜூன் 25 அன்று, ஒரு புதிய நேரடி நிகழ்வின் போது, ​​அவர் ஒரு புதிய தொழில்முறை மல்யுத்த வீராங்கனையாக அறிமுகமானார், அப்போது தான் அவருக்கு   ஹார்ட் கே.டி. என்ற வளையப்பெயரில் போட்டியிட்டார். இந்த போட்டியில் கவிதா மற்றும் சாகிள் சங்வான் இருவரும் சேர்ந்து  பி.பி புல் புல் மற்றும் சூப்பர் கல்காவுடன் மோதி தோல்வியுற்றனர். இந்த நிகழ்வில் தான் CWE இன் வரலாற்றில் கவிதா முதன்முதலாக கலப்பு முகவரி அணி போட்டியில் தோன்றினார். ஜூலை 9 ம் தேதி மீண்டும் ஒரு புதிய நேரடி நிகழ்வின் போது, பி.பி. புல் புல் மற்றும் சூப்பர் கல்பா ஆகியோருக்கு எதிராக ஹார்ட் கே.டி மற்றும் சஹில் சங்வான் ஆகியோர் சந்தித்தனர். எனினும் ஷாங்கி சிங்க் நுழைந்து சஹில் சங்வான் தாக்கியதால் போட்டி நிராகரிக்கப்பட்டது.


செப்டம்பர் 3, 2016 அன்று, ஒரு நேரடி நிகழ்வின் போது, ஹார்ட் கேடி ஸ்பீயரைப் பயன்படுத்தியபின், புதிதாக அறிமுகமான ரீடாவை தோற்கடித்தார். இந்தியாவில் பானிபட் நிகழ்ச்சியில் நவம்பர் 15 ம் தேதி ஹார்ட் கேடி கேட்டி ஃபோர்ப்ஸுடன் இனைந்து ஜேம் லீ மற்றும் சந்தனா கரேட் ஆகியோரை தோற்கடித்தனர். ஏப்ரல் 22, 2017 அன்று மற்றொரு நேரடி நிகழ்வின் போது, ​​ஹார்ட் கே.டி நீராஜ் என்றவரை எதிர்த்து போட்டியிட்டு அவரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.


WWE பிரவேசம்
2017-ஆம் ஆண்டு WWE ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் 25 ஏப்ரல் முதல் 29 ஏப்ரல் 2017 வரை முதல் சோதனை போட்டியை துபாய், அரபி எமிரேட்சில் நடத்தவிருப்பதாகவும் அதில் ஹார்ட் கேடியுடன் மேலும் ஏழு உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என குறிப்பிடப்பட்டது.


மே யங் கிளாசிக் - ஹார்ட் கேடி-யிலிருந்து கவிதா தேவி
ஜூன் 22, 2017 அன்று ESPN ட்விட்டர் மூலம் ஹார்ட் கேடி மே யங் கிளாசிக் என்ற WWE போட்டியில் பங்கேற்ப்பார் என்று அறிவித்தது. இரண்டு நாள்கள் கழித்து, ஜூன் 24 ஆம் தேதியன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்திரிகையின் வலைத்தளம் ஹார்ட் கேடி இந்த போட்டியில்பங்குபெறுவதை உறுதிசெய்து. இந்த போட்டியில் பங்கு பெறும் முதல் இந்திய வீராங்கனை கவிதா தலால் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கவிதா தலால் என்ற பெயரை மாற்றியமைத்து ‘கவிதா தேவி’ என்ற வளையப் பெயருடன் கவிதா தலால் தோன்றுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஜூலை 13, 2017 அன்று, மே யங் கிளாசிக்: பரேட் ஆஃப் சாம்பியன்ஸில் கவிதா தேவி பங்குபெற்ற நிகழ்ச்சி யூ டியூப் மற்றும் பேஸ்புக்கில் நேரடி நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது.


"WWE இன் முதல் மகளிர் போட்டியில் போட்டியிடும் முதல் இந்திய பெண்மணியாக நான் இருக்கிறேன், என்னைப்போன்ற மற்ற இந்திய பெண்களை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவை பெருமைப்படுத்தவும் இந்த தளத்தை பயன்படுத்த விரும்புகிறேன்" என்று கவிதா குறிப்பிட்டுள்ளார்.


சாதனைகள்
ஒரு விளையாட்டு வீராங்கனையாக எப்போதும் இருப்பதே தனது வாழ்நாளின் முதன்மையான உரிமை என கவிதா கருதினார். அவர் எடை தூக்குதல், உஷு மற்றும் கலப்பு தற்காப்பு கலை என்னும் மிக்செட் மார்சியல் ஆர்ட்ஸ் (MMA) ஆகியவற்றில் தேசிய அளவிலான சாம்பியன் ஆவார்.


கவியாவின் முதன்மை கவனம் எப்பொழுதும் எடை தூக்குவது ஆகும். 2002 ஆம் ஆண்டு ஹரியானாவிலுள்ள ஃபரிதாபாத்தில் பயிற்சி பெற்றார். இறுதியில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் பயிற்சி பெற்றார். 2007 ஆம் ஆண்டு முதல் அவர் பலமுறை தேசிய மூத்த பளு தூக்கும் சாம்பியன் பட்டம் பெற்றார்.


2016 ஆம் ஆண்டு தென் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அசாம் மாநிலத்தில் உள்ள கவுஹாட்டி நகரில் நடந்தது. அதில் 75 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் கவிதா. கவிதா போட்டியில் கலந்துகொண்டு பெற்ற மொத்த மதிப்பெண்ணானது எந்தவொரு பிரிவிலும் (தன் எடைக்கு மேல் அதிகமான எடைப் பிரிவினருடன் மோதியது உட்பட) ஒரு பெண்ணின் மிகவும் உயர்ந்தே இருந்தது. மேலும் கவிதா 50 கிலொ வித்தியாசத்தில்  வெள்ளி பதக்கம் வென்ற இலங்கையின் விக்கரமாசிங்க்கே  செலேலை பின்னுக்கு தள்ளி முன்னேறினார்.

தொகுப்பு : இரா.கீதா