கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்திசுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமா உலகத்தில் முன்னனி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர்.கொஞ்சும் கண்களுக்கு சொந்தகாரான கீர்த்திசுரேஷின் அறிமுகம் இதோ.கீர்த்திசுரேஷின் பெற்றோர் மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா ஆவர்.இவர்களுக்கு 17அக்டோபர் 1992ம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை சுரேஷ்குமார் மலையாள திரையுலகத்தில் பல திரைபடங்களை தயாரிக்கும் முக்கிய தயாரிப்பாளர் ஆவார்,தாய் மேனகாவோ தமிழ்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ள நடிகையாவார்.இதை தவிர கீர்த்திசுரேஷிற்கு ரேவதி என்கிற சகோதரியும் உண்டு.
தனது சிறுவயதிலயே தந்தையின் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் கீர்த்திசுரேஷ் இதில் பைளட்,குபேரன் போன்ற படங்கள் குறிப்பிட்டு சொல்படுபவை .தனது பள்ளிபடிப்பை சென்னை மற்றும் கேரளாவில் முடித்தவர் கல்லூரியில் பேஷன் டிசைனிங் துறையில் பட்டம் பெற்றார்.படிப்பை முடித்தபிறகு தனது தந்தையின் பிஸினஸை கவனித்தார்,"நான் சினிமாவிற்குள் நுழைந்தது தற்செயலானது" என கீர்த்திசுரேஷ் கூறுவார்.சினிமாவில் நல்ல அறிமுகமும்,அடித்தளமும் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த 'கீதாஞ்சலி' படம் பெற்று தந்தது.அதன்பிறகு மலையாளத்தில் தொடர்சியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.தமிழில் முதல் படமாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' திரைப்படம் கோலிவுட்டில் நல்ல இடத்தை பெற்றுதந்தது.அதற்கடுத்து ஒன்றிரண்டு படங்கள் வெளியானலும் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்த ரஜினிமுருகன் படம் மாபெரும் வெற்றிபெற்று கீர்த்திசுரேஷின் அந்தஸ்தை தூக்கி நிறுத்தியது.அதற்கடுத்தாக வெளிவந்த 'ரெமோ' படமும் மாபெரும் வெற்றிபெற தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவரானார் கீர்த்திசுரேஷ்.இக்காலகட்டத்தில் தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் வர அங்கும் சென்று தனது ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார்.தமிழில் தனுசுடன் 'தொடரி',விஜய்யுடன் 'பைரவா' மற்றும் சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்'  என படங்களில் நடித்து கோலிவுட்டில் தற்போது ஒரு ரவுண்டு வருகிறார் கீர்த்திசுரேஷ்.மேலும் சாமி ஸ்கொயர்,சண்டக்கோழி 2,மகாநதி போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
 

இன்பாக்ஸ்
விகடன் டீம்

இன்பாக்ஸ்

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
அவள் விகடன் டீம்

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

Keerthy Suresh:  நடிகை கீர்த்தி சுரேஷின் கிளாஸிக் க்ளிக்ஸ்!|Photo Album
நந்தினி.ரா

Keerthy Suresh: நடிகை கீர்த்தி சுரேஷின் கிளாஸிக் க்ளிக்ஸ்!|Photo Album

வலைபாயுதே!
சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே!

Onam: நடிகைகளின் ஓணம் ஸ்பெஷல் க்ளிக்ஸ்!
நமது நிருபர்

Onam: நடிகைகளின் ஓணம் ஸ்பெஷல் க்ளிக்ஸ்!

கருணாநிதி அரசியல்: ஸ்டாலின் தயங்குவது ஏன்?-  ஜெ.தீபா வேதனை ஏன்?- சாவர்க்கர் சர்ச்சை|விகடன் ஹைலைட்ஸ்
பா. முகிலன்

கருணாநிதி அரசியல்: ஸ்டாலின் தயங்குவது ஏன்?- ஜெ.தீபா வேதனை ஏன்?- சாவர்க்கர் சர்ச்சை|விகடன் ஹைலைட்ஸ்

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

“தேசிய விருது வாங்கிட்டேன்... அடுத்த டார்கெட் ஆஸ்கர்!”
உ. சுதர்சன் காந்தி

“தேசிய விருது வாங்கிட்டேன்... அடுத்த டார்கெட் ஆஸ்கர்!”

Sarkaru Vaari Paata விமர்சனம்: மாஸ் படம்னாலும் இப்படியான காட்சிகள் வைக்கலாமா?
கார்த்தி

Sarkaru Vaari Paata விமர்சனம்: மாஸ் படம்னாலும் இப்படியான காட்சிகள் வைக்கலாமா?

சாணிக் காயிதம் - சினிமா விமர்சனம்
விகடன் விமர்சனக்குழு

சாணிக் காயிதம் - சினிமா விமர்சனம்

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

சாணிக் காயிதம்: இது கீர்த்தி சுரேஷின் `ரத்தம், ரணம், ரௌத்திரம்'... ஆனா, பிரச்னை என்னன்னா?
விகடன் டீம்

சாணிக் காயிதம்: இது கீர்த்தி சுரேஷின் `ரத்தம், ரணம், ரௌத்திரம்'... ஆனா, பிரச்னை என்னன்னா?