மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசை

ஒவ்வொரு ஆண்டும் அமாவாசை திதியின் போது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்து மதத்திதனரின் பாரம்பரியமாகும். இந்த திதி கொடுக்க ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை  சிறப்பானது. அதிலும் மஹாளய அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

 "மறந்து போனவனுக்கு மஹாளய அமாவாசை " என்பார்கள்.அதாவது மூதாதையர்களின் இறந்த தேதி தெரியாதவர்கள் அல்லது மறந்து போனவர்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால் 21 தலைமுறைகளை சேர்ந்த முன்னோர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் என சொல்லப்படுகிறது. இது பற்றிய குறிப்புகள் திருவெண்காடு கோயில் தல வரலாற்றில் இடம்பெற்றுள்ளன.

வருடத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை "பெரிய அமாவாசை" என்றும் "மஹாளய அமாவாசை" என்றும் கூறப்படுகிறது.இந்த மஹாளய பட்சம் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி புரட்டாசி மாத அமாவாசை வரை நீடிக்கும்.இந்நாளில் மறைந்த முன்னோர்களை நினைத்து தர்ப்பணம்,அன்னதானம் போன்றவற்றை செய்யும் போது அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வருவதாக நம்பப்படுகிறது. எனவே அவர்களை நினைத்து நாம் செய்யும் தர்மசெயல்கள் அவர்களுக்கு மகிழ்வளிக்க கூடியதாகும். இதனால்
அவர்களின் பரிபூரண ஆசி நமக்கு கிடைக்கும்.

நிறைவேறாத ஆசைகளுடன் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய மஹாளய அமாவாசையின் போது அவர்களுக்கு சிறப்பு ஹோமங்கள்,யாகங்களை செய்யலாம். அனைவரும் தேவர்கள், பித்ருக்களின் கடன்களில் இருந்து விடுபட தகுந்த பூஜைகளை செய்ய வேண்டும். அதிலும் பித்ருக்களின் அனுக்கிரகத்தை பெற தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றை செய்ய வேண்டும். தர்ப்பணம் புரிவோர் நதி அல்லது குளத்தில் நீராட வேண்டும். காசி, பத்ரிநாத், திருக்கோகர்ணம், திலதர்பணபுரி,காவிரி சங்கமம், கயா,திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், கும்பகோணம் மகாமக குளம், இராமேஸ்வரம் முதலிய இடங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடினால் மிகவும் விசேஷமானது.

பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் பொருட்களில் மிகவும் முக்கியமானது எள். எள் அனைத்து வகையான பாவங்களையும், தோஷங்களையும் போக்கக்கூடியது. எனவே நீத்தார் கடனில் எள் பயன்படுத்தப்படுகிறது. நீர்,எள்,அட்சதை மூன்றையும் சேர்த்து தருவதே தர்ப்பணம் எனப்படும். இவற்றில் கருப்பு எள் பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு தர்ப்பணம் செய்வதன் மூலம் பித்ருக்கள் மகிழ்வார்கள்சபாந்தவஹா
சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மஹாளய அமாவாசையின் போது சொல்லப்பட வேண்டிய மந்திரம்:-

   " ஏ ஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந  சபாந்தவஹா தே சர்வே த்ருப்திம் ஆயாந்து மயா உஸ்ரீஷ்டைஹி குஸௌதஹைஹி   த்ருப்யத் த்ருப்யத் த்ருப்யத்"

முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய இந்த தர்ப்பை கலந்த நீரை அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் என்பதே இதன் பொருளாகும்.  

மஹாளய அமாவாசையின் போது ஏழை எளியோர் ஆதரவற்றோர்க்கு உணவு,உடை போன்றவற்றை தானமாக வழங்கலாம்.நவ கிரகங்களில் ஒன்றான சனிபகவானுக்கு எள் விளக்கேற்றி வழிபடலாம். பித்ரு சுமங்கலியாக இறந்திருந்தால் ஏழை. சுமங்கலி பெண்களுக்கு புடவை,தாம்பூலம் போன்றவற்றை வழங்கி ஆசி பெறலாம்.பசுமாட்டுக்கு அகத்துக்கீரை, பழங்களை தானமாக அளிப்பதன் மூலம் நம் பாவங்கள் அகலும்.

மகாளய அமாவாசை: கடைப்பிடிப்பது எப்படி? 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன?
சைலபதி

மகாளய அமாவாசை: கடைப்பிடிப்பது எப்படி? 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன?

மஹாளய அமாவாசை: `இறந்துபோன நண்பனுக்கும் பித்ரு கடன் செய்யலாமா?' -  சில கேள்விகளும் விளக்கங்களும்!
மு.ஹரி காமராஜ்

மஹாளய அமாவாசை: `இறந்துபோன நண்பனுக்கும் பித்ரு கடன் செய்யலாமா?' - சில கேள்விகளும் விளக்கங்களும்!

ஓபிஎஸ், அமைச்சர் அன்பில் மகேஸ்... பிரபலங்கள் பங்கேற்கும் ராமேஸ்வர ஹோமம்... என்ன விசேஷம் தெரியுமா?
தி.தெய்வநாயகம்

ஓபிஎஸ், அமைச்சர் அன்பில் மகேஸ்... பிரபலங்கள் பங்கேற்கும் ராமேஸ்வர ஹோமம்... என்ன விசேஷம் தெரியுமா?

மத்யாஷ்டமி, மகாளய அமாவாசை, சரஸ்வதி பூஜை - புண்ணியம் தரும் புரட்டாசி மாத விழாக்கள் விசேஷங்கள்!
சைலபதி

மத்யாஷ்டமி, மகாளய அமாவாசை, சரஸ்வதி பூஜை - புண்ணியம் தரும் புரட்டாசி மாத விழாக்கள் விசேஷங்கள்!

மகாளய பட்சம் : முக்கிய தினங்கள்... செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன?
சைலபதி

மகாளய பட்சம் : முக்கிய தினங்கள்... செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன?

நீர் நிலைகளில் பித்ரு காரியங்கள் செய்வது ஏன்? மகாளய அமாவாசை கடைப்பிடிப்பது எப்படி?
மு.ஹரி காமராஜ்

நீர் நிலைகளில் பித்ரு காரியங்கள் செய்வது ஏன்? மகாளய அமாவாசை கடைப்பிடிப்பது எப்படி?

மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி... மத்யாஷ்டமி நாளில் நாம் செய்யவேண்டியது என்ன?!
மு.ஹரி காமராஜ்

மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி... மத்யாஷ்டமி நாளில் நாம் செய்யவேண்டியது என்ன?!

வழி காட்டும் கருட புராணம்... மகாளய பட்ச நாள்களில் செய்ய வேண்டிய 30 நன்மைகள் என்னென்ன?!
மு.ஹரி காமராஜ்

வழி காட்டும் கருட புராணம்... மகாளய பட்ச நாள்களில் செய்ய வேண்டிய 30 நன்மைகள் என்னென்ன?!

பரணி, மகம், சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய மகாபரணி நாள்... செய்ய வேண்டியவை என்னென்ன?
மு.ஹரி காமராஜ்

பரணி, மகம், சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய மகாபரணி நாள்... செய்ய வேண்டியவை என்னென்ன?

மகாளய பட்சம்: இந்த நாள்களில் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன தெரியுமா?
மு.ஹரி காமராஜ்

மகாளய பட்சம்: இந்த நாள்களில் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன தெரியுமா?

2021 மகாளய பட்சம் ஆரம்பம்... முன்னோர் ஆராதனை - ஏன், எதற்கு, எப்படி? முழுமையான வழிகாட்டல்!
வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்

2021 மகாளய பட்சம் ஆரம்பம்... முன்னோர் ஆராதனை - ஏன், எதற்கு, எப்படி? முழுமையான வழிகாட்டல்!

தர்ப்பணம், திவசம்... முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மஹாளய அமாவாசையில் எது சிறந்தது?
மு.ஹரி காமராஜ்

தர்ப்பணம், திவசம்... முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மஹாளய அமாவாசையில் எது சிறந்தது?