மகேந்திரன்

மகேந்திரன்

மகேந்திரன்

மகேந்திரனின் இயற்பெயர் தேவ.அலெக்சாண்டர்.  அப்பா, ஜோசப் செல்லையா. அம்மா, மனோன்மணி!. மகேந்திரனின் மனைவி ஜாஸ்மின். ஜான் ரோஷன், டிம்பிள் ப்ரிதம், அனுரிட்டா ப்ரிதம் என மூன்று குழந்தைகள். ஜான், விஜய்யின் 'சச்சின்’ படத்தை இயக்கியவர்.  

பள்ளி, கல்லூரி காலங்களில் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஸ்டேட் ரேங்க்கில் வந்தவர். கல்லூரியில் சீனியர் விளையாட்டு வீரராக ஜொலித்த எல்.ஜி.மகேந்திரனால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே சூடிக்கொண்டார்!.  மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர் மீடியட். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.ஏ., பொருளியல் படித்தவர். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஏழு மாதங்கள் பயின்றவர், பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து விலகினார்!அழகப்பா கல்லூரி விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆர். முன் மகேந்திரன் பேசிய பேச்சு மிகப் பிரபலம். மேடையிலேயே எம்.ஜி.ஆர் எழுதிக் கொடுத்த பாராட்டு வரிகள், மகேந்திரன் வீட்டின்முகப்பை இன்னும் அலங்கரிக்கின்றன! எம்.ஜி.ஆர் தந்த உற்சாகத்தினால்,'காஞ்சித் தலைவன்’ படத்தில் உதவி இயக்கு நராகப் பணிபுரிந்தார். எம்.ஜி.ஆருக்காக மகேந்திரன் எழுதிய 'அனாதைகள்’ என்ற நாடகம், பிற்பாடு 'வாழ்வே வா’ என எம்.ஜி.ஆர் - சாவித்திரி நடிக்க ஆரம்பிக்கப்பட்டு, பொருளா தார நெருக்கடியில் கைவிடப்பட்டது! ஏறத்தாழ 25 படங்களுக்குக் கதை- வசனம் எழுதியிருக்கிறார். அவரின் நாடகம் 'தங்கப் பதக்கம்’ நிறையத் தடவைகள் மேடை ஏற்றப்பட்டு, வெற்றிகரமாகத் திரை வடிவத்திலும் வந்தது! 

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, மெட்டி, கை கொடுக்கும் கை, நண்டு, அழகிய கண்ணே, ஊர்ப் பஞ்சாயத்து, கண்ணுக்கு மை எழுது, சாசனம் என்பவை மகேந்திரன் இயக்கிய சில முக்கிய படங்கள்!. மகேந்திரனின் எல்லாப் படங்களுமே அதிக பட்சம் 40 நாட்களில் எடுக்கப்பட்டவைதான். 'உதிரிப்பூக்கள்’ 35 ரோல் ஃபிலிம் சுருள்களில், 30 நாட்களில் படமாக்கப்பட்டது! 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் மூன்று தேசிய விருதுகள் வென்றன. விருது வாங்கப் போன மகேந்திரன், அங்கே வந்திருந்த எம்.ஜி.ஆரிடம் விருதுகளைச் சமர்ப்பித்து, 'எல்லாம் உங்களால் வந்தது’ என்றார்! 
சிவாஜி எப்போதும் 'மகேன்’ என்றுதான் செல்லமாகக் கூப்பிடுவார். எம்.ஜி.ஆர் 'என் னங்க, என்னங்க’ என்றுதான் சொல்வார். சினிமா வேண்டாம் என காரைக்குடிக்குத் திரும்பிய மூன்று தடவையும், மகேந்திரனை மீண்டும் அழைத்து வந்தது எம்.ஜி.ஆர்! 

``மறுபடியும் வந்து விடுங்கள் மகேந்திரன் சார்'' - 'உதிரிப்பூக்கள்' அஸ்வினி கண்ணீர் #Mahendran
ஆ.சாந்தி கணேஷ்

``மறுபடியும் வந்து விடுங்கள் மகேந்திரன் சார்'' - 'உதிரிப்பூக்கள்' அஸ்வினி கண்ணீர் #Mahendran

இப்பவும் என்னை குழந்தையாவே பார்த்தா எப்டிங்க? | Master Mahendran Interview
விகடன் விமர்சனக்குழு

இப்பவும் என்னை குழந்தையாவே பார்த்தா எப்டிங்க? | Master Mahendran Interview

Vijay Sethupathi's Last Unfulfilled Request to Director Mahendran
விகடன் விமர்சனக்குழு

Vijay Sethupathi's Last Unfulfilled Request to Director Mahendran

Shankar Shares Huge Secret on Mahendran | 2.0  | RIP Mahendran
விகடன் விமர்சனக்குழு

Shankar Shares Huge Secret on Mahendran | 2.0 | RIP Mahendran

EXCLUSIVE: Dir Mahendran Rare Photo Collections ft. Rajini,Kamal, Arvind Swamy
விகடன் விமர்சனக்குழு

EXCLUSIVE: Dir Mahendran Rare Photo Collections ft. Rajini,Kamal, Arvind Swamy

Video: Final Journey of Director Mahendran | Revathi Pays her Respect
விகடன் விமர்சனக்குழு

Video: Final Journey of Director Mahendran | Revathi Pays her Respect

Director Mahendran's Funeral Video | RIP Mahendran
விகடன் விமர்சனக்குழு

Director Mahendran's Funeral Video | RIP Mahendran

The Shocking Reason Behind Mahendran meeting Prabhakaran
விகடன் விமர்சனக்குழு

The Shocking Reason Behind Mahendran meeting Prabhakaran