மணிரத்னம்

மணிரத்னம்

மணிரத்னம்

மணிரத்னம்... இந்தப்பெயரை கேட்டவுடனே நம் நினைவுக்கு வருவது சுருக்கமான வசனமும்,புதுமையான காதல் களமும்... இவரது இயற்பெயர் கோபால ரத்னம் சுப்பிரமணியம்.வளர்ந்து வரும் அத்தனை இயக்குனரும் தவிர்க்க முடியாத சகாப்தம் மணி. காதல் படங்களின் திரைக்கதைக்கு இலக்கணம் வகுத்தவர். இவரின் மௌனராகம், நாயகன் போன்ற படங்கள் காலம் பேசும் காவியமாக போற்றப்படுகிறது.  இவர் தமிழ் நடிகை சுஹாசினியை மணந்துகொண்டார்.

பிறப்பு,இளமைக்காலம்:-
                 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி இவர் பிறந்தார். சிவாஜி கணேசன் மற்றும் நாகேஷ் அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இவரின் பதினைந்து வயதில் இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் ரசிகர் ஆனார்.பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்து முடித்தார். பின்னர் 1997 ஆம் ஆண்டு மும்பையில் முதுநிலை வணிக நிர்வாகம் படித்து பட்டம் பெற்றார்.இதன் பின்பு மேலாண்மை ஆலோசகராய் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார், அந்த வேலையின் மீதான அதிருப்தி இவரை சினிமாவின் பக்கம் திருப்பியது. 

சினிமா வாழ்க்கை:-
1980-1990:-
              மணிரத்தினத்தின் நண்பனும் பழம்பெரும் இயக்குனர்  பி.ஆர்.பந்தலுவின் புதல்வனுமான ரவி ஷங்கர் தன்னுடைய முதல் கன்னட திரைப்படத்தை எடுக்கவிருந்தார் அவருடன் மணிரத்தினமும் அவரின் நண்பனும் பழம்பெரும் இயக்குனர் எஸ்.பாலச்சந்தரின் மகனான ராமன் என்பவருடன் சேர்ந்து படத்தின் கதை, திரைக்கதை ,வசனம் ஆகியவற்றை எழுதி முடித்தார். படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தன் வேலையை  விட்டுவிட்டு கர்நாடகா சென்றார் .கன்னட திரை பிரபலம் விஷ்ணுவர்தன்,ரோஜா ரமணி, லக்ஷ்மி என்று நட்சத்திர பட்டாளம் அணிவகுக்க தொடங்கவிருந்த படம் நிறுத்தப்பட்டுவிட்டது.
                   என்ன ஆகினும் இயக்குனராக வேண்டும் என்பது அவர் எண்ணமாக இருந்தது. கையில் ஒரு கதையை வைத்துக்கொண்டு தயாரிப்பாளரிடம் கதை சொல்லலாம் இல்லையென்றால் கே.பாலச்சந்தர் , பாரதிராஜா , மகேந்திரன் போன்ற பெரிய இயக்குனர்களிடம் கதைகளைக் கூறி அவர்களுடன் இணைத்து பணியாற்றலாம் என்றிருந்தார். இயக்குனர் பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றும் முயற்சி நடைபெறாமல் போக, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுடன் சேர்ந்து ஏறக்குறைய  20 தயாரிப்பாளர்களை சந்தித்தார்கள் இந்த முயற்சியும் நீர்த்து போனது.   

                   1983இல் மணி ரத்தினம் “பல்லவி அணு பல்லவி” என்றொரு கதையை எழுதினார் . இதை தயாரிக்க அவரது மாமா கிருஷ்ணமூர்த்தி முன்வந்தார். இந்த படம் அவருக்கு 1983ஆம் ஆண்டில் கர்நாடக அரசின் சிறந்த திரைக்கதாசிரியர் விருதை பெற்று தந்தது. இந்தப்படம் 1984இல் அவருக்கு “உணரு” என்ற மலையாள படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.1985இல் “பகல் நிலவு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இதன் பின்னர் அதே ஆண்டில் அவர் “இதய கோவில்” என்ற படத்தை இயக்கினார். உணரு,பகல் நிலவு, இதய கோவில் மூன்று படங்களும் வெற்றி பெறாத நிலையில், அடுத்து 1986ஆம் ஆண்டு மணி ரத்தினம் எழுதி இயக்கிய மௌனராகம் மக்களிடமும் விமர்சகர்களிடமும் பெரிய பெரிய வரவேற்பை பெற்று தந்தது.இந்த படம் தான் மணிரத்தினம் என்ற சகாப்தத்தின் அடித்தளம்.
                    மௌனராகம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை பெற்றது, அதோடு ,மணிரத்தினத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதை வாங்கித்தந்தது .1987 ஆம் ஆண்டு உலக நாயகனின் நடிப்பில் வெளிவந்த நாயகன் இவருக்கு தேசிய அளவில்  அங்கீகாரம் கொடுத்தது. மும்பையின் நிழல் உலக தாதா வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை தழுவியது. சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கலை இயக்குனர் என மூன்று தேசிய விருதுகளை தட்டி சென்றது. சிறந்த வேற்றுமொழி படத்துக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
            இதன் பின் 1988ஆம் ஆண்டு வெளிவந்த அக்னி நட்சத்திரம் 200 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.  1989ஆம் ஆண்டில் கீதாஞ்சலி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்தார் மணி ரத்னம். இந்த படமும் தேசிய விருதை தட்டி சென்றது. இதை தொடர்ந்து 1990ஆம் ஆண்டு ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையை வைத்து “அஞ்சலி” என்ற படத்தை இயக்கினார்.இந்தப் படமும் சிறந்த வேற்றுமொழி படத்துக்கான ஆஸ்கார் விருதுக்கு  பரிந்துரைக்கப்பட்டது.
1991-2000:-
             அஞ்சலியை தொடர்ந்து 1991ஆம் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி நடிப்பில் தளபதி என்ற படத்தை இயக்கினார்.மகாபாரதத்தில் கர்ணன் துரியோதனனுக்குள் உள்ள நட்பை தழுவி எடுக்கப்பட்டது. இவரின் முதல் படமான பல்லவி அணு பல்லவி முதல் தளபதி வரை இளையராஜா தான் இசையமைத்தார். 1992ஆம் ஆண்டு இவர் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை அறிமுகம் செய்து வைத்தார்.ரோஜா படம் 18 ஆவது மாஸ்கோ திரைப்பட திருவிழாக்கு பரிந்துரைக்கப்பட்டது.இந்த படத்திற்கு பிறகு மணிரத்தினத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்தது.  1993 ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மா எழுதிய திருடா திருடா கதையை இயக்கினார் மணி.இது டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.   1995ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த “பாம்பே” திரைப்படம் 1993 ஆம் ஆண்டு நடந்த பாம்பே கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கபட்டிருகிறது என பல்வேறு பிரச்னைகளை இந்த படம் சந்தித்தது. ஆனாலும் பல்வேறு தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை கொண்ட படமாக அமைந்தது.
                  1997 ஆம் ஆண்டு சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த “இருவர்” பற்றி படம் எடுக்க பெரும் எதிர்ப்புக்கு உள்ளானது இந்த படம்.இருப்பினும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்ப்பைப் பெற்றது . 1998ஆம் ஆண்டு ஷாருக்கான்,மனிஷா கொய்ராலா நடிப்பில் தன் முதல் ஹிந்தி படமான “தில் சே” (தமிழில் உயிரே) இயக்கினார் மணிரத்னம். ஏ.ஆர்.ரகுமானின் இசை இந்திய அளவில் பேசப்பட்டது இந்த படத்தின் பின்பு தான்.இதனைத் தொடர்ந்து 2000ஆம் ஆண்டு மாதவன் ஷாலினி வைத்து இயக்கிய “அலைபாயுதே” இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் காதல் அலை பாய்ந்த வண்ணம் இருக்கிறது.
2001- 2010:-
                    2002ஆம் ஸ்ரீலங்கா உள்நாட்டு போர் பின்னணியில் கொண்டு, எடுக்கப்பட்ட படம் பெற்ற தாயை பார்க்க நினைக்கும் ஒரு குழந்தை இது தான் படத்தின் கரு. கிட்டத்தட்ட ஆறு தேசிய விருதுகளை வென்றது. 2004ஆம் ஆண்டு சூர்யா,மாதவன்,சித்தார்த் ஆகியோரை வைத்து “ஆயுத எழுத்து” எண்ணும் படத்தை எடுத்தார். ஒரே நேரத்தில் தமிழில் ஆயுத எழுத்து எனவும் ஹிந்தியில் யுவா எனவும் உருவானது. இந்தியில் அஜய் தேவ்கன் ,அபிஷேக் பச்சன் ,விவேக் ஓபராய் ஆகியோர் நடித்தனர்.இந்தப் படமும் வித்தியாசமான திரைக்கதையினால் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  2007ஆம் ஆண்டு திருபாய் அம்பானியின் வாழ்க்கை கதையை தழுவி “குரு” என்ற படத்தை இயக்கினார். இதில் விமர்சகர்களிடமும் வசூல் ரீதியிலும் நல்ல வெற்றி பெற்றது. 2010ஆம் ஆண்டு இராமாயண இதிகாசத்தை அடிப்படையாக கொண்டு இராவணன் என்று தமிழிலும் இராவன் என்று இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. தமிழில் விக்ரமும் பிருத்விராஜுவும், ஹிந்தியில் அபிஷேக் பச்சனும் விக்ரமும் நடித்தார்கள்.இந்தப் படம் சொல்லிகொள்ளும்படி பெரிய வரவேற்பை பெறவில்லை.
2011 – தற்போது
                   2013ஆம் ஆண்டு நவரச நாயகனின் மகன் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை ராதாவின் மகள் துளசி ஆகியோரை அறிமுகம் செய்தார்.இந்த படமும் பெரிய வரவேற்பு பெறவில்லை,வசூல் ரீதியாகவும் தோல்வி படமாக அமைந்தது. 2015ஆம் ஆண்டு மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் Live in Relationship ஐ அடிப்படையாக கொண்டு “ஒ காதல் கண்மணி” என்ற படத்தை இயக்கினார். இந்த படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. 2017 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த “காற்று வெளியிடை” படத்தில் கார்கில் போரில் பாகிஸ்தானிடம் போர் கைதியான ராணுவ வீரனின் காதல் கதையை அடிப்படையாக கொண்டது.இந்த படமும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து இவரின் அடுத்த படம் அரவிந்த்சாமி, சிலம்பரசன், விஜய் சேதுபதி,பஹத் பாசில்,விஜய் சேதுபதி,ஜோதிகா மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் என்று பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டது,அடுத்த வருடம் திரைக்கு வரவிருக்கிறது.

தயாரிப்பாளர் படலம்:-
           இவரின் பாம்பே படம் முதல் காற்று வெளியிடை வரை இவரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் கொண்டு இவரே தயாரித்தவை.இவர் இயக்கிய படங்கள் அல்லாமல் பிற இயக்குனர்களின் படங்கள் சிலவற்றையும் தயாரித்துள்ளார். சத்ரியன், தசரதன், ஆசை, நேருக்குநேர், டும் டும் டும் ,5 ஸ்டார்,சாத்தியா,ஓகே ஜானு ஆகியவை இவர் தயாரித்த பிற இயக்குனரின் படங்கள்.  

Letter to Modi: FIR Against Mani Ratnam | The Imperfect Show 4/10/2019
Gopinath Rajasekar

Letter to Modi: FIR Against Mani Ratnam | The Imperfect Show 4/10/2019

BREAKING:The Truth Behind Mani Ratnam's Ponniyan Selvan Cast | Full Details
Vikatan Correspondent

BREAKING:The Truth Behind Mani Ratnam's Ponniyan Selvan Cast | Full Details

13 வருடங்கள் மிஸ் ஆனது ஏன்? நான் மீண்டுவர Mani Ratnam செய்த மேஜிக் | Arvind Swamy Vikatan Press Meet
Vikatan Correspondent

13 வருடங்கள் மிஸ் ஆனது ஏன்? நான் மீண்டுவர Mani Ratnam செய்த மேஜிக் | Arvind Swamy Vikatan Press Meet

Kolathur Mani about the controversial speech of Seeman!
வீ கே.ரமேஷ்

Kolathur Mani about the controversial speech of Seeman!

BREAKING: A BIG Legend Joins Mani Rathnam's Ponniyin Selvan | inbox
Gopinath Rajasekar

BREAKING: A BIG Legend Joins Mani Rathnam's Ponniyin Selvan | inbox

HUGE: Arjun Reveals his BIG Character in Mani Rathnam's Ponniyin Selvan  | Nerkonda Paarvai
Gopinath Rajasekar

HUGE: Arjun Reveals his BIG Character in Mani Rathnam's Ponniyin Selvan | Nerkonda Paarvai

What Happened to Mani Rathnam Is Happening to Selvaraghavan! - Ilavarasu | NGK | SURYA
Gopinath Rajasekar

What Happened to Mani Rathnam Is Happening to Selvaraghavan! - Ilavarasu | NGK | SURYA

Why many Serial Actors Suicide ? - Ravivarma Explains
Vikatan Correspondent

Why many Serial Actors Suicide ? - Ravivarma Explains