மனோரம்மா (ஆச்சி)

மனோரம்மா (ஆச்சி)

மனோரம்மா (ஆச்சி)

பிரபல நடிகர்களாலும் ஈடுகட்ட முடியாத நடிகை என்றால் அது மனோரம்மா தான்.  தனக்கென ஒரு தனித்துவத்தையும், யாரும் தொடமுடியாத உயரத்தை தொட்டு விட்டு சென்றவர், மனோரம்மா. 'ஆச்சி ' என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் மனோரம்மா. நகைச்சுவை உலகின் நாயகி, தனது வாழ்நாளின் இறுதி வரை திரைத்துறைக்கென்றே தன்னை அர்பணித்தவர். மனோரம்மாவிற்கு இணை மனோரம்மா மட்டுமே...  

பிறப்பு : 

1937ஆம் ஆண்டு மே  26-ஆம் நாள்  தமிழ்நாடு  மன்னார்குடியில்,  தந்தை கிளார்க்குடையார், தாய் ராமாமிர்தம்மாளுக்கு மகளாக பிறந்தார் கோபிசாந்தா எனும்  இயற்பெயர் கொண்ட 'மனோரம்மா'.

கல்வி மற்றும் குடும்ப சூழல்:

வறுமை மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக கோபி சாந்தாவும் அவருடைய தாயாரும் ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்தில் குடிபெயர்ந்தனர். சிறுவயதிலேயே சிறப்பாக பாடும் திறமை உடைய கோபி சாந்தா, பள்ளத்தூரிலுள்ள  ஆரம்பப் பள்ளியில் பள்ளிப்படிப்பை தொடங்கினார். இவரை  "பள்ளத்தூர் பாப்பா" என்றும் அழைப்பார்கள்.  அம்மாவின் உடல்நிலை (இரத்தப்போக்கு காரணமாக) மோசமாகி விடவே பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தனது பதினொன்றாம் வயதில் பண்ணையார் வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு சேர்ந்தார். 

நாடகத்துறையில்,..(கோபிசாந்தாவிலிருந்து  மனோரம்மா)

'அந்தமான் காதலி ' எனும் நாடகம்  ஒருநாள் கோபிசாந்தாவின் ஊரில் அரங்கேற்றப்பட்டது. அதில் பெண் வேடமிட்டவர்க்கு சரியாக பாட வரவில்லை. எனவே,  அந்த கதாபாத்திரத்தில் கோபி சாந்தாவை நடிக்க வைத்தனர். அப்பொழுது அவருக்கு 12 வயது. இவரின் குரல் வளம், பாடல், நடன திறமையை பார்த்தவர்கள் பாராட்ட தொடங்கினார்கள். இந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடம்,  ஆர்மோனியம் வாசித்த தியாகராஜன் ஆகியோர் கோபிசாந்தா எனும்  பெயரை 'மனோரமா ' என மாற்றினார்கள். தொடர்ந்து பல நாடகங்களில் தனது திறமையை காட்டினார் மனோரமா. " நாடக உலக ராணி " என்று நாடகத்துறையில் போற்றப்பட்டார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில்   நடித்த பெருமையுடையவர், மனோரம்மா. 

திரைப்படத்துறையில்,...

ஆரம்பத்தில் வைரம் நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்தார்,  மனோரம்மா.  அப்பொழுது ஜானகி இராமன் என்பவர்  'இன்ப வாழ்வு' எனும் படத்தை தயாரிக்கப் போவதாகவும்,  அதில் நடிக்க மனோரம்மாவின்  ஒப்பந்தத்தையும் பெற்றார்.  படம் பாதியிலேயே தடைபட்டு போனது. பிறகு  கவிஞர் கண்ணதாசனின் 'ஊமையன் கோட்டை' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் . இந்த படமும் பாதியிலேயே நின்று போனதால் மனமுடைந்து போனார்  மனோரம்மா. எனினும் 1958ஆம் ஆண்டு மனோரமாவை நகைச்சுவை நடிகையாக 'மாலையிட்ட மங்கை' என்ற படத்தில் அறிமுகம் செய்தார், கண்ணதாசன். இதுவே மனோரமா திரையில் தோன்றிய முதல் படம். 1963ஆம் ஆண்டில் 'கொஞ்சும் குமரி' படத்தில்  முதல்முறையாக கதாநாயகியாக வலம் வந்தார். இருந்தாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலேயே தனது கவனத்தையும், ஆர்வத்தையும் காட்டினார்.   தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி,மலையாளம்,  சிங்களம் என ஆறு மொழிகளின் திரைபடங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தார்,  மனோரம்மா.
    அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜீ.ஆர், ஜெயலலிதா, என்.டி.  ராமராவ் என ஐந்து முதல்வர்களோடு  நடித்த பெருமை உடையவர்,மனோரம்மா.  அறிஞர் அண்ணா எழுதிய 'வேலைக்காரி' நாடகத்திலும்,  அவரோடு 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்', ஓர் இரவு நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.  கருணாநிதி எழுதிய 'உதயசூரியன்' நாடகத்தில்  கருணாநிதி கதாநாயகனாகவும், மனோரம்மா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். எம். ஆர். ராதா, கே. ஏ. தங்கவேலு, ஜே.பி. சந்திரபாபு, என்னத்த கண்ணையா, வி.கே ராமசாமி, தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன்,  சுருளிராஜன், ஜனகராஜ், வெண்ணிறாடை மூர்த்தி, பாண்டியராஜன், கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு என ஐந்து  தலைமுறை நகைச்சுவை கதாநாயகர்களை  கடந்து வந்தவர், மனோரம்மா.

மனோரம்மா நடித்த படங்கள் :

 (1958 - 1969 வரை,...)
 
1958 மாலையிட்ட மங்கை, பெரிய கோவில்  
1958 உத்தமி பெற்ற ரத்தினம்              
1960 களத்தூர் கண்ணம்மா, பொன்னி திருநாள், தெய்வத்தின் தெய்வம், நெஞ்சில் ஓர் ஆலயம், எதையும் தாங்கும் இதயம்
1962 முத்து மண்டபம், படித்தால் மட்டும் போதுமா, போலீஸ்காரன் மகள்,  கொஞ்சும் குமரி, பார் மகளே பார், லவகுசா, குங்குமம், குபேரத் தீவு, குலமகள், ராதை, இரத்த திலகம்.
1963 நெஞ்சம் மறப்பதில்லை நீங்காத நினைவு, யாருக்கு சொந்தம், நானும் ஒரு பெண், நினைப்பதற்கு நேரமில்லை, ஆனந்த ஜோதி, கற்பகம், காஞ்சித்தலைவன், ஏழை பங்காளன், மகளே உன் சமத்து,  தாலிபாக்கியம், புதிய பார்வை, படகோட்டி.
1964 நவராத்திரி, வேட்டைகாரன், தெய்வதிருமகள், சர்வர் சுந்தரம், பூம்புகார்,  திருவிளையாடல், கன்னி தாய்,  தாழம்பூ, கலங்கரை விளக்கம்.
1965 கல்யாண மண்டபம், படித்த மனைவி, அன்புகரங்கள்,  வல்லவனுக்கு வல்லவன், பூமாலை, சாந்தி, தாயும் மகளும், அன்பே வா, சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, யார் நீ. 
1968 மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, முகராசி, சந்திரோதயம்,  தேன்மழை, மணிமகுடம், கௌரி கல்யாணம், தாலிபாக்கியம், இரு வல்லவர்கள்.
1967 விவசாயி, திருவருட்செல்வர், தாய்க்கு  தலைமகன், நினைவில் நின்றவன், பாலாடை, இருமலர்கள், அனுபவம் புதுமை, எதிர்நீச்சல், கலாட்டா கல்யாணம், பொம்மலாட்டம். 
1968 தில்லானா மோகனாம்பாள், தேர்திருவிழா,  டில்லி மாப்பிள்ளை. 
1969 ஆயிரம் பொய், நிறைகுடம்.

(1970 - 1979 வரை)

1970 தலைவன்,  எங்கள் தங்கம், திருமலை தென்குமரி,  விளையாட்டு பிள்ளை. 
1971 கண்காட்சி, முகம்மது பின் துக்ளக், தங்ககோபுரம், சுமதி என் சுந்தரி, பட்டிக்காடா பட்டணமா, காசேதான் கடவுளடா, நீதி, கண்ணா நலமா, ராமன் தேடிய சீதை. 
1972 தாய்க்கு ஒரு பிள்ளை, வெள்ளிவிழா, மிஸ்டர்  சம்பத், அன்னமிட்ட கை, ஞான ஒளி, சக்தி லீலை,  காதலிக்க வாங்க, இராஜராஜசோழன், சூரியகாந்தி, காசியாத்திரை, அலைகள்.
1973 கங்கா கௌரி, பொன்னூஞ்சல், மனிதரில் மாணிக்கம், ராஜபாட் ரங்கதுரை, பொண்ணுக்கு தங்க மனசு. 
1974 அன்பை தேடி, என் மகன், குமஸ்தாவின் மகள், புதுவெள்ளம், மேலநாட்டு மருமகள், சினிமா பைத்தியம், அந்தரங்கம். 
1975 அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா,  தங்கத்திலே  வைரம், பட்டாம்பூச்சி,  வாழ்ந்து காட்டுகிறேன், யாருக்கும் வெட்கமில்லை, அக்கா, உனக்காக நான், உண்மையே உன் விலை என்ன, ரோஜாவின் ராஜா, நீ ஒரு மகாராணி, மோகம் முப்பது வருஷம், கிரகபிரவேசம், வரப்பிரசாதம், பத்ரகாளி.
1976 வாழ்வு என் பக்கம், உங்களில் ஒருத்தி, பேரும் புகழும், பாலூட்டி வளர்த்த கிளி, ஒரு கொடியில் இரு மலர்கள், நல்ல பெண்மணி, முத்தான முத்தல்லவோ, மேயர்  மீனாட்சி, ஜானகி சபதம், ஆளுக்கொரு ராசி, ஆறு புஷ்பங்கள், ஆசை மனைவி, துர்கா தேவி. 
1977 துணை இருப்பாள்  மீனாட்சி, நீ வாழவேண்டும், அவன்  ஒரு சரித்திரம், ஸ்ரீ கிருஷ்ணா லீலை, உன்னை சுற்றும்  உலகம், குப்பத்து ராஜா, அன்ன லட்சுமி, மாரியம்மன் திருவிழா, காமாட்சியின் கருணை, சிட்டுக்குருவி, என் கேள்விக்கென்ன பதில்,  ஜெனரல்  சக்ரவர்த்தி, பைலட் பிரேம்நாத்,  புண்ணிய பூமி. 
1978 வண்டிக்காரன் மகன், வருவான் வடிவேலன், வாழ நினைத்தால் வாழலாம், ருத்ர தாண்டவம், சீர்வரிசை, ஆயிரம் ஜென்மங்கள், பைரவி, அந்தமான் காதலி, தியாகம்.
1979 - ல்  இமயம், கல்யாணராமன், பில்லா, ஏணிப்படிகள்,  என்னடி மீனாட்சி, நாடகமே உலகம், நீச்சல் குளம்.

(1980 - 1989 வரை,... )
1980 பஞ்சபூதம், பூந்தளிர்,  ஸ்ரீ ராமஜயம், ருசி கண்ட பூனை, ரிஷிமூலம், கோட்டீஸ்வரன் மகள், கீழ் வானம் சிவக்கும், தீ, சவால்.
1981 மங்கம்மா சபதம், இரட்டை மனிதன், லாரி டிரைவர் ராஜ கண்ணு,  வாழ்வே மாயம், சிம்லா ஸ்பெஷல், தாய் மூகாம்பிகை, சங்கிலி, தீர்ப்பு,  மணல் கயிறு, மருமகளே வாழ்க.
1982 கண்ணோடு  கண், கைவரிசை, ஜோடி புறா,  போக்கிரி ராஜா, பக்கத்து வீட்டு  ரோஜா, வசந்தத்தில் ஓர்நாள், சட்டம் சிரிக்கிறது, சட்டம்,  சிவப்பு சூரியன், மிருதங்க சக்கரவர்த்தி, நீதிபதி நிரபராதி.
1983 தங்கம் மகன், அடுத்த வாரிசு, பாயும்புலி, சினேக பந்தம், யாமிருக்க பயமே, சந்திப்பு, எனக்குள் ஒருவன்,  கைராசிக்காரன், மண்சோறு,  ஓ மானே மானே,  குவா குவா வாத்துகள். 
1984 அன்பே ஓடிவா, குடும்பம், ராஜா வீட்டு கண்ணுக்குட்டி, நினைவுகள், நாளை உனது நாள், அந்த சில நாட்கள், ஆகாய தாமரைகள்,  இரு மேதைகள், ஸ்ரீராகவேந்திரர், வீதி, இளமை, சிம்மசொப்பனம்.
1985 நியாயம்,  சிதம்பர ரகசியம், ஜான்சி,  கடிவாளம், பந்தம், நல்லதம்பி, ஒரு மலரின் பயணம், விக்ரம், சம்சாரம் அது மின்சாரம், காவல்,  பெருமை, பொருத்தம். 
1986 ஓடங்கள், கைதியின் தீர்ப்பு,  வீரன், கண்ணை திறக்கனும்  சாமி, சர்வம் சக்திமயம், நம்பினார் கெடுவதில்லை, நிலவே மலரே, பேர் சொல்லும் பிள்ளை, நான் அடிமை இல்லை.
1987 மக்கள் என் பக்கம், பருவ ராகம்,  வளையல் சத்தம், சின்னக்குயில் பாடுது, குரு சிஷ்யன், பாட்டி சொல்லை தட்டாதே, என் ஜீவன் பாடுது, கதாநாயகன்.
1988 உன்னால் முடியும் தம்பி, இது நம்மஆளு, தம்பி தங்க கம்பி, பெண்மணி அவள் கண்மணி, அண்ணாநகர் முதல் தெரு, குற்றவாளி, வசந்தி,  உலகம் பிறந்தது எனக்காக ஆராரோ ஆரிராரோ, அபூர்வ சகோதரர்கள்.
1989 புதிய பாதை, மீனாட்சி திருவிளையாடல்,  ராஜா ராஜாதான், பொங்கிவரும் காவேரி. 

(1990 - 1999 வரை,... )
1990 மைக்கேல் மதன காமராஜன், எங்கள்  சுவாமி ஐயப்பன், எதிர்க்காற்று, நடிகன்,   என்கிட்ட மோதாதே, கிழக்கு   வாசல், வேடிக்கை என் வாடிக்கை, ஆரத்தி எடுங்கடி, என் வீடு என் கணவர்,ஆடி விரதம்,  பொண்டாட்டி சொன்னா கேட்கணும், சின்னகவுண்டர்,  சின்ன தம்பி.
1991 மரிக்கொழுந்து,  நண்பர்கள், புது மனிதன், ஞான பறவை, நாட்டுக்கு ஒரு நல்லவன்,  பொண்டாட்டி பொண்டாட்டிதான், மன்னன், சிங்காரவேலன், பங்காளி, நீ பாதி நான் பாதி, அண்ணாமலை, மகுடம்,  சூரியன், ராசுகுட்டி, ஒன்னா இருக்க கத்துக்கணும்.
1992 பட்டத்து  ராணி, ஹரிகரபுத்திரன், நீங்க நல்லா இருக்கணும், தூரத்து சொந்தம், இது நம்ம பூமி, உன்னை வாழ்த்தி பாடுகிறேன், பாண்டி துரை,  எஜமான், ஜென்டில்மேன், பொன்னுமணி, உத்தம ராசா,   தர்மசீலன்.
1993 செந்தூரபாண்டி,   அத்தை மக  ரத்தினமே, நல்லதே நடக்கும், காதலன், மே மாதம், தேவா, ஜெய்ஹிந்,  சரிகமபதநி, சீமான்.
1994 அன்பு மகன், வியட்நாம் காலணி,  ரசிகன், ராவணன்,  நாட்டாமை,  தாய்மனசு, முறைமாமன்,  டியர் சன் மருது, மருமகன், கூலி, பெரிய குடும்பம், திருமூர்த்தி, நந்தவன தெரு. 
1995 நான் பெத்த மகளே, வேலுச்சாமி,  முத்துக்காளை, ராஜா எங்க ராஜா,  செல்லக்கண்ணு,  தேவா, நீலக்குயில், மகாபிரபு, பரம்பரை.
1996 இந்தியன்,  நாட்டுபுறப்பாட்டு,  
1997 அருணாச்சலம், வள்ளல் சக்தி, பூவேலி, நட்புக்காக,  வீரதாலாட்டு.
1998 மறுமலர்ச்சி, பூந்தோட்டம், தர்மா, ரோஜாவனம்,  உன்னை தேடி,  பெரியண்ணா, கும்மி  பாட்டு, சிம்ம ராசி.
1999 பூவெல்லாம் கேட்டுப்பார், உன்னருகே நானிருந்தால், எதிரும் புதிரும், சுந்தரி நீயும்,  சுந்தரன் நானும்.

(2000 - 2017 வரை,...)
2000 கண்ணால்  பேசவா, வெற்றி கொடி கட்டு,  திருநெல்வேலி,  கண்ணன் வருவான், சிநேகிதியே, உன்னருகே நான் இருந்தால்,  மாயி, டபுள்ஸ்,  கிருஷ்ணாகிருஷ்ணா,  பாண்டவர் பூமி.
2001 சீறிவரும் காளை, பிரியாத வரம் வேண்டும், தமிழ், ஜெயா, ஜெமினி.
2002 காதல் வைரஸ், கார்மேகம், சாமி, திவான். 
2003 விசில், அன்பே அன்பே, ஒற்றன்,  பேரழகன், 7G ரெயின்போ காலணி.
2004 குத்து, நிறைஞ்ச மனசு, அழகேசன்.
2005 கற்க  கசடற, ஆடும் கூத்து.
2006 இம்சை அரசன்  23ஆம் புலிகேசி, பாச கிளிகள்.
2007 ஆழ்வார், தாமிரபரணி.
2008 உளியின் ஓசை, அருந்ததி, லாடம். 
2009 அஆஇஈ,  சிங்கம்.
2010 இரும்பு கோட்டை  முரட்டுச் சிங்கம், காதல் அல்ல அதையும் தாண்டி.
2012 வாலிபன் சுற்றும் உலகம், சிங்கம் - 2, தாயே நீ கண்ணுறங்கு.
2017 சிங்கம் -3.

சின்னத்திரையில்,...

காட்டுப்பட்டி சரித்திரம், அன்புள்ள அம்மா, தியாகியின் மகள், வானவில், ஆச்சி  இன்டர்நேஷனல், அல்லி ராஜ்ஜியம் போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றினார். 

மனோரம்மா பாடிய பாடல்கள் : 

சிறு வயதிலிருந்தே நன்றாக பாடும் திறமை கொண்ட மனோரம்மா, திரைப்படங்களிலும் பாடி அசத்தியுள்ளார் .

பார்த்தாலே தெரியாதா" ( ஸ்ரீ ராகவேந்திரா),  
"கானான் குருவிக்கு கல்யாணம்"  ( வாழ நினைத்தால் வாழலாம்),
"தெரியாதோ நோக்கு தெரியாததோ" (சூரியகாந்தி)  
டில்லிக்கு ராஜான்னாலும் (பாட்டி சொல்லை தட்டாதே)
தாத்தா தாத்தா பொடி கொடு (மகளே உன் சமத்து)
பாசகிளைகள் ( தங்கையேனும்)
போகாதே போகாதே என் கணவா(ரத்த திலகம்)
திமிக்கிட திமிக்கிட (கங்கா கௌரி)
பொம்மலாட்டம் (வா வாத்தியாரே)
தமிழ்விடு தூது(ஆயிரம் பொய்).

விருதுகள்:

1. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததற்காக கின்னஸ்  உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்றார்.   
2. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
3. 1988 -  புதிய பாதை திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது. 
4. 2000-ம்ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது
5. மலேசிய அரசிடம் இருந்து 'டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி' விருது
6. கேரள அரசின் 'கலா சாகர்' விருது
7. சினிமா எக்ஸ்பிரஸ் விருது 8.சிறந்த குணச்சித்திர நடிகைக்கான  அண்ணா விருது, என்.எஸ். கே விருது,  எம்.ஜீ.ஆர் விருது,  ஜெயலலிதா விருது என பல்வேறு விருதுகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
 கலிபோர்னியா  பல்கலைக் கழகம் ஆச்சிக்கு,  கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை:

கண் திறந்தது பட கதாநாயகன் எஸ்.எம். ராமநாதனோடு திருச்செந்தூர் கோவிலில்  1964 - ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மனோரம்மாவிற்கு   பூபதி என்ற ஒரு மகன் உண்டு. காதல் திருமணமாக இருந்தபோதிலும், சில காரணங்களால் 1966-ல் மணமுறிப்பு செய்துகொண்டு சென்னையில் தனியாக வாழ்ந்தார். 

இறப்பு :

சென்னையில்  உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த மனோரம்மா அக்டோபர்  2015, 10 - ம்  தேதி இரவு 11 மணி அளவில் மாரடைப்பின் காரணமாக 78 வயதில்  உயிரிழந்தார். மனோரம்மாவின் இழப்பு தமிழக மக்களை பெரும்துயரத்தில் ஆழ்த்தியது. அவருடைய இடத்தை ஈடுகட்ட யாராலும் முடியாது. 

``காம்ரேட் பினராயி விஜயனுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமிருக்கிறது!"- நெகிழ்ந்த ஸ்டாலின்
சிந்து ஆர்

``காம்ரேட் பினராயி விஜயனுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமிருக்கிறது!"- நெகிழ்ந்த ஸ்டாலின்

சீதை தேடிய ராமன் - பத்மினி ராமச்சந்திரன் #AppExclusive
Vikatan Correspondent

சீதை தேடிய ராமன் - பத்மினி ராமச்சந்திரன் #AppExclusive

“சர்க்கஸ்காரி ஆகியிருப்பேன்!” - மனோரமா
Vikatan Correspondent

“சர்க்கஸ்காரி ஆகியிருப்பேன்!” - மனோரமா

இதயம்! - விகடன் விமர்சனம்
விகடன் விமர்சனக்குழு

இதயம்! - விகடன் விமர்சனம்

வெற்றிக்கொடிகட்டு! - விகடன் விமர்சனம்
விகடன் விமர்சனக்குழு

வெற்றிக்கொடிகட்டு! - விகடன் விமர்சனம்

ஜெயலலிதா - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
Vikatan Correspondent

ஜெயலலிதா - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

மனோரமா - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
Vikatan Correspondent

மனோரமா - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

ஸ்ரீதேவி - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
Vikatan Correspondent

ஸ்ரீதேவி - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

சுருளிராஜன் - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!
Vikatan Correspondent

சுருளிராஜன் - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

7G ரெயின்போ காலனி!
விகடன் விமர்சனக்குழு

7G ரெயின்போ காலனி!

மனோரமா: சிங்களப் படத்தில் அறிமுகமாகி 5 முதல்வர்களுடன் நடித்த தமிழ் நடிகை! | The Legend
Mouriesh SK

மனோரமா: சிங்களப் படத்தில் அறிமுகமாகி 5 முதல்வர்களுடன் நடித்த தமிழ் நடிகை! | The Legend

`சினிமாவைப் போலவே உறவுகளையும் உசுராகக் கொண்டவர் ஆச்சி மனோரமா!’ -நெகிழும் தம்பி மகள் ஜோதி
கே.குணசீலன்

`சினிமாவைப் போலவே உறவுகளையும் உசுராகக் கொண்டவர் ஆச்சி மனோரமா!’ -நெகிழும் தம்பி மகள் ஜோதி