மெர்சல் | Latest tamil news about Mersal | VikatanPedia
Banner 1
திரைப்படம்

மெர்சல்

"மெர்சல்" அட்லி இயக்கத்தில் விஜய்யின் 61 வது படம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

அட்லி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, யோகி பாபு, சத்யன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ் எனப் பல முன்னணி நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. 'மெர்சல்' என்ற டைட்டிலின் ஸ்டைலில் ஆரம்பித்து, 'இளைய தளபதி'க்கு பதில் வெறும் 'தளபதி' என்று குறிப்பிட்டது வரை எல்லாக் கோணத்திலும் கேள்விகள் அனல் பறந்தன. 

ஜூன் 21: படத்தின் பெயர் வெளியானது.

ஜூன் 21:  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Vijay-mersal-first-look

ஆகஸ்ட் 10: இந்தப் படத்தின் 'ஆளப்போறான் தமிழன்' பாடலின் டீசரை படக்குழுவினர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டனர்.
 

 


ஆகஸ்ட் 10: இந்தப் படத்தின் 'ஆளப்போறான் தமிழன்' பாடல் வெளியடப்பட்டது.

’ஆளப்போறான் தமிழன்’ பாடலைக் கேட்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...

’ஆளப்போறான் தமிழன்’ பாடல் வரிகளைக் காண இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க
 

ஆகஸ்ட் 17: இன்று மாலை 'நீதானே' என்கிற மெலடி பாடல் வெளியாக உள்ளது. அந்தப் பாடலுக்கான டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஸ்ரேயா கோஷலின் மயக்கும் குரல்களில், 30 விநாடிகளுக்கு வெளியாகியிருக்கும் இந்த டீசர், முழுப்பாடலையும் கேட்க ஆவலைத் தூண்டுகிறது. 

 

 

ஆகஸ்ட் 20: இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அனைத்து பாடல்களும் வெளியானது.

செப்டம்பர் 19: இன்று இந்தப் படத்தின் டீசர் போஸ்டர் வெளியானது.

Mersal-Teaser-Poster

செப்டம்பர் 21: படத்தின் டீசருக்காக பலர் காத்திருந்த நிலையில் இன்று இந்தப் படத்தின் டீசர் படக்குழுவினரால் இணையத்தில் வெளியிடப்பட்டது

 

அக்டோபர் 18: படம் வெளியானது. மெர்சல் விமர்சனம் இங்கே!

தொகுப்பு : விகடன் டீம்