மித்தாலி ராஜ்

மித்தாலி ராஜ்

மித்தாலி ராஜ்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன். இவரின் இன்னொரு பெயர் பெண்கள் கிரிக்கெட்டின் டெண்டுல்கர் இவரை இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் திருப்புமுனைக்காக ஆரம்பம் என்றே சொல்லலாம் . பெண்கள் வீதியில் கிரிக்கெட் விளையாடுவதை வித்தியாசமாக பார்க்கும் நாட்களில் இவரது தலைமையிலான இந்திய அணி பெண்கள் கிரிக்கெட்டை உலக கோப்பை வரை அழைத்து சென்று அவர்களின் மீதான எதிர்மறை பார்வையை மாற்ற செய்ததில் பெரும் பங்கு வகித்தவர் . ஆண்கள் கிரிக்கெட் மீதான ஒரு ஈர்ப்பு பெண்கள் கிரிக்கெட்டின் மீது இல்லை என்னும் இவரின் வெகுநாளைய ஏக்கத்தை இந்திய மகளிர் அணியை உலக கோப்பை இறுதி போட்டிக்குள் நுழையச் செய்ததன் மூலம் மாற்றி காட்டியவர்.

பிறப்பு :

இவரின் முழு பெயர் மித்தாலி துரை ராஜ் . ராஜஸ்தானின் ஜோத்பூரை சேர்ந்தவரான மித்தாலி தமிழைத் தாய் மொழியாக கொண்டவர் . 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 3 நாள் ஜோத்பூரில் பிறந்தவர் .

குடும்பம் :

மித்தாலியின் தந்தை துரை ராஜ். இந்திய விமானத் துறையில் பணியாற்றியவர். தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவரான இவர்களின் குடும்பம் துரை ராஜின் பணியின் காரணமாக ஹைதராபாத்தில் குடிபெயர நேர்ந்தது. இவரின் தாய் லீலா ராஜ் . 

இளமை பருவம் மற்றும் கல்வி :

எந்த வெற்றியும் ஒரே நாளில் நிகழ்ந்து விடாது . மிதாலியின் பயணமும் கொஞ்சம் நீளமானது . இந்த நிலையை அடைய அவரின் முயற்சிகள் அவரின் 1௦ ஆம் வயதிலே தொடங்கிவிட்டன . ஹைதராபாத்தில் உள்ள செயின்ட்.ஜான் உயர்நிலை பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கிய இவர் கேயேஷ் மகளிர் பள்ளியிலும் பயிற்சியை தொடர்ந்துள்ளார் .பத்து வயதில் பள்ளி மைதானத்தில் தொடங்கிய அவரது கிரிக்கெட் ஆட்டம் அவரின் 17 வது வயதில் அவரை இந்திய மகளிர் அணியில் கொண்டு சேர்த்தது .

துறை பங்களிப்பு :

இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களில் விளையாடி வரும் இவர்  கவனிக்கப்பட்டது 1999 ஆம் ஆண்டு நடந்த அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 114 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் நின்றபோது தான்.

இவர் 2௦௦1 – 2௦௦2 ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல்முறையாக பங்கேற்ற இவர் ஆகஸ்ட் 2௦௦2 ஆம் ஆண்டு நடத்திய சாதனையே அவரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது .அதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தனி நபர் அதிகபட்ச ரன் குவித்திருந்த (209*) கரேன் ரோல்டனின் சாதனையை தனது மூன்றாவது சர்வதேச ஆட்டத்திலே 214 குவித்ததன் அந்த பெருமையை தன் வசமாக்கினார். இதை நிகழ்த்தி முடிக்கும் போது இவருக்கு வயது வெறும் பத்தொன்பது தான் .இந்த சாதனை பின்னர் பாகிஸ்தான் வீராங்கனையால் முறியடிக்கப்பட்டது. 

2௦௦5 தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் உலக கோப்பை போட்டியில் இவரின் பங்கு அளவிடமுடியாத போதும் கத்துகுட்டியான நாம் ஆஸ்திரேலியாவிடம் பணிய வேண்டி இருந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால் அதே இந்திய அணி 2017 ஆம் ஆண்டு உலக கோப்பைத் தொடரின் அரையிறுதியிலே ஆஸ்திரேலியாவை வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது தான் இவரின் முயற்சிக்கான வெகுமானமாக இருக்க முடியும் . 

தனிநபர் சாதனை :

2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒருநாள் போட்டிக்கான அட்டவணையில் மித்தாலி ராஜ் பிடித்திருந்த இடம் இதுவரை எந்த இந்திய பெண்ணும்  அலங்கரிக்காத முதல் இடம். இந்தியாவில் பல பெண்கள் கிரிக்கெட்டுக்குள் நுழைய வேண்டும் என்று நினைத்துகொண்டு இருக்கும் போதே இவர் 6 சதங்களை தனதாக்கி விட்டிருந்தார் .தொடர்ந்து 7 அரை சதங்களை அடித்து மகத்தான சாதனை படைத்தார். மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6௦௦௦ ரன்கள் குவித்த முதல் பெண் இவரே என்பது இவரின் தனி நபர் சாதனையின் உச்சக்கட்டம்.

விருதுகள் :

இந்தியாவின் தலை சிறந்த வீரர்களுக்கு தரப்படும் அர்ஜுனா விருது இவருக்கு 2௦௦3 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது . இந்தியாவின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் 2௦15 ஆம் ஆண்டு சொந்தமாக்கினார். விஸ்டன் விருதை முதன் முதலாக வாங்கிய இந்திய வீராங்கனையான இவர் இன்னும் பல விருதுகளை வாங்கி குவிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

மந்தனா, மித்தாலி பொறுப்பான ஆட்டம், ஸ்நே கேமியோ... இங்கிலாந்துக்கு எதிராக ஆறுதல் வெற்றிபெற்ற இந்தியா!
அய்யப்பன்

மந்தனா, மித்தாலி பொறுப்பான ஆட்டம், ஸ்நே கேமியோ... இங்கிலாந்துக்கு எதிராக ஆறுதல் வெற்றிபெற்ற இந்தியா!

மீண்டும் அரை சதம் அடித்தார் மித்தாலி ராஜ்... ஆனால், இந்தியாவின் தோல்வி ஏன்?!
அய்யப்பன்

மீண்டும் அரை சதம் அடித்தார் மித்தாலி ராஜ்... ஆனால், இந்தியாவின் தோல்வி ஏன்?!

ஓய்வு பெற வேண்டிய மித்தாலி ராஜ் தொடர்ந்து விளையாடுவது ஏன்… பெண்கள் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது?!
அய்யப்பன்

ஓய்வு பெற வேண்டிய மித்தாலி ராஜ் தொடர்ந்து விளையாடுவது ஏன்… பெண்கள் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது?!

Sneh Rana : தந்தைக்காக, தாய்நாட்டுக்காக ஒரு எமோஷனல் இன்னிங்ஸ்... யார் இந்த ஸ்நே ராணா?
உ.ஸ்ரீ

Sneh Rana : தந்தைக்காக, தாய்நாட்டுக்காக ஒரு எமோஷனல் இன்னிங்ஸ்... யார் இந்த ஸ்நே ராணா?

அஞ்சும் சோப்ரா - இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முன்னத்தி ஏர்!
உ.ஸ்ரீ

அஞ்சும் சோப்ரா - இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முன்னத்தி ஏர்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் W.V.ராமன் ஏன் மாற்றப்பட்டார், பிரச்னை எங்கே?
Pradeep Krishna M

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் W.V.ராமன் ஏன் மாற்றப்பட்டார், பிரச்னை எங்கே?

மிதாலிராஜ் மூன்று தலைமுறையின் வெளிச்சம்!
Pradeep Krishna M

மிதாலிராஜ் மூன்று தலைமுறையின் வெளிச்சம்!

மித்தாலி ராஜ்... மகளிர் கிரிக்கெட்டின் ராஜமாதா... ரன் மெஷின்... இன்ஸ்பிரேஷன்!
அய்யப்பன்

மித்தாலி ராஜ்... மகளிர் கிரிக்கெட்டின் ராஜமாதா... ரன் மெஷின்... இன்ஸ்பிரேஷன்!

``மிதாலி டீம்ல நான்  ஆடியிருக்கேன்; அதனாலதான் அந்த ஆசை!" - லட்சுமி ப்ரியா சந்திரமெளலி
உ. சுதர்சன் காந்தி

``மிதாலி டீம்ல நான்  ஆடியிருக்கேன்; அதனாலதான் அந்த ஆசை!" - லட்சுமி ப்ரியா சந்திரமெளலி

பிட்ஸ் பிரேக்
விகடன் டீம்

பிட்ஸ் பிரேக்

``தமிழனாய் வாழ்வது பெருமை...!" - ட்விட்டரில் தமிழில் பதிலடி கொடுத்த மிதாலி ராஜ்
சு.சூர்யா கோமதி

``தமிழனாய் வாழ்வது பெருமை...!" - ட்விட்டரில் தமிழில் பதிலடி கொடுத்த மிதாலி ராஜ்

மிதாலி ராஜ் பயோபிக்கில் நடிக்கிறார், டாப்ஸி!
உ. சுதர்சன் காந்தி

மிதாலி ராஜ் பயோபிக்கில் நடிக்கிறார், டாப்ஸி!