மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

பிறப்பு:
  1953ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று மு.கருணாநிதி-தயாளு அம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாக ஸ்டாலின் பிறந்தார்.ரஷ்ய அதிபர் 'ஜோசப் ஸ்டாலின்' நினைவாக தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்தார் கருணாநிதி.

குடும்பம்:
  1975ம் ஆண்டு துர்கா என்கிற சாந்தாவை திருமணம் செய்து கொண்டார் ஸ்டாலின்.இவர்களுக்கு உதயநிதி என்ற மகனும்,செந்தாமரை என்ற மகளும் உள்ளனர்.மகன் உதயநிதி ஸ்டாலின் திரைப்பட தயாரிப்பாளராகவும்,நடிகராகவும் உள்ளார். 

பள்ளிப்பருவம்:
  சென்னை அண்ணா சாலையில் உள்ள 'சர்ச் பார்க் கான்வெண்ட்'டில் விண்ணப்பித்த போது, அவரின் புரட்சி பெயரை கண்டு பள்ளி அவரை சேர்க்க மறுத்தது.'பள்ளியை தான் மாற்ற வேண்டுமே தவிர,பெயரை மாற்ற முடியாது' என்று கலைஞர் கருணாநிதி கூறினார்.இதனால்,ஸ்டாலின் கிறிஸ்துவ மேனிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

இளமைப்பருவம்:
  தனது 14வது வயதில்,பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டார்.திமுகவில் உறுப்பினாராகி பின்னர்,பள்ளி மாணவர்கள் அனைவரையும் இணைத்து,அருகில் உள்ள முடி திருத்தும் கடையில், 'கோபாலபுரம் இளைஞர் திமுக' என்ற அமைப்பினை உருவாக்கினார்.அதன் மூலம் அப்பகுதியில் சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மிசா சட்டத்தில் கைது:
  தனது மனைவி துர்காவை மணந்தபோது அவரது வயது 23, அதே 1976ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆணையின் பேரில் அவர் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்பட்டார்.சிறையில் தன் உயிரை காப்பாற்றிய சிட்டிபாபுவை இன்றளவும் மறக்காமல் நினைவு கூறுகிறார் ஸ்டாலின்.

திமுக இளைஞர் அணி:
  1980 ஜூலை 20இல் மதுரை,ஜான்சிராணி பூங்காவில் 'திமுக இளைஞரணி' தொடங்கப்பட்டது.இந்தியாவிலேயே மாநில கட்சி ஒன்று தொடங்கிய முதல் இளைஞரணி திமுக  தான்.1982 மே மாதம் திருச்சியில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.கழக இளைஞரணி அமைப்பாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர்,1984இல் இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இடப்பிரச்சனை:
  சென்னை அண்ணா சாலையில் 28.1.1964ல் திமுகவுக்கென ஒரு இடம் வாங்கப்பட்டது. 15.6.1964 அன்று அது திமுக தலைமையகமாக அன்பகம் என்ற பெயரில் திறக்கப்பட்டது. நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் அண்ணா அதனை திறந்து வைத்தார். தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான அறிவாலயத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இளைஞர் அணியின் அலுவலகம் செயல்பட ஒரு இடம் தேவைப்பட்டது. அறிவகத்தை ஒதுக்கித் தரும்படி தலைமைக் கழகத்திடம் இளைஞரணி கோரியது. இதுபோல திமுக தொழிலாளர் அணியும் தனது அலுவலகத்திற்காக அன்பகத்தைக் கோரியது.

அன்பழகன் வைத்த போட்டி:
  பிள்ளையார் முருகனைப் போல ஒரு அலுவலகத்துக்கு இரண்டு அணிகளும் போட்டியிட்டதால் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், யார் முதலில் 10 லட்சம் ரூபாய் கட்சிக்கு நிதி தருகிறார்களோ அவர்களுக்குத்தான் அன்பகம் என ஒரு போட்டி வைத்தார்.
இதையடுத்து திமுக இளைஞரணிச் செயலாளரான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். காலை, மாலை கொடி கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிகளிலும், இரவில் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு 100 ரூபாய், 200 ரூபாய் என வசூல் செய்து அதன் மூலம் 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்.

  கட்சி மேலிடம் கேட்ட 10 லட்சத்திற்கும் மேலாக 1 லட்சத்தை வசூலித்து அதனை தலைமைக் கழகத்திடம் ஒப்படைத்து அன்பகத்தை இளைஞரணிக்கு பெற்றார்.02.6.1988 அன்று அன்பகத்தில் இளைஞரணியின் தலைமை அலுவலகத்தை பேராசிரியர் அன்பழகன் தலைமையில் தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார்.

என் மகன்:
  1990ல் நடந்த ஐம்பெரும்விழா பேரணியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் ஒரு ராணுவம் போல் நடைபோட்டு வந்ததைக் கண்ட அன்றைய பிரதமர் வி.பி.சிங், இந்த இளைஞரனியின் தலைமையில் இவ்வளவு பேர் கட்டுக்கோப்புடன் நடைபோட்டு வருகிறார்களே என அருகிலிருந்த கருணாநிதியிடம் கேட்க, திமுக இளைஞரணி செயலாளர்-என் மகன் ஸ்டாலின் என கருணாநிதி பதிலளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்:
 1984இல் ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ஸ்டாலின், தோல்வி அடைந்தார்.பின்னர்,1989,1996,2001,2006 என நான்கு முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றார்.

மேயர் பதவி:
  இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு 'ஆசிட் டெஸ்ட்' வைப்பது போல சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை வழங்கினார் கருணாநிதி.1996இல் பஞ்சாயத்துராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர்,கவுன்சிலர் (மாநகராட்சி உறுப்பினர்கள்) களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 'முதல் மேயர்' என்ற சிறப்பினையும் பெற்றார்.2001இல் தொடர்ந்து 2வது முறையாக மேயர் பொறுப்பை ஏற்றார் ஸ்டாலின்.

 அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த சட்ட திருத்தத்தின் படி,ஒரு நபர் இரு அரசு பதவி என்ற முறையை நீக்கினார்.இதனால்,தனது மேயர் பதவியை ராஜினாமா செய்து விட்டு,சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றார்.

அமைச்சர் டூ துணை முதல்வர்:
  2003இல் நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டத்தில்,துணை பொதுச்செயலாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.2006இல் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தார்.2008இல் திமுகவின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.2009 மே 9இல் துணை முதல்வராக பதவியேற்றார்.

நமக்கு நாமே:
  'நமக்கு நாமே' குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், ஒரேயடியாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஸ்டாலின் பக்கம் அந்த நடைப்பயணம் திரும்பிப் பார்க்க வைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. காலையில் எழுந்ததும் – எந்த ஒரு தமிழக அரசியல்வாதியும் செய்யாத பிரச்சார யுக்தியாக, அதிகாலையில் நடைப்பயிற்சி என்ற பெயரில் மக்கள் அதிகம்கூடும் இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தார். சைக்கிளில் சென்றார், ஆட்டோவில் தொங்கிக் கொண்டு போனார். சாலையோரக் கடையில் மக்களோடு, மக்களாக அமர்ந்து தேநீர் அருந்தினார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.சில இடங்களில் கடந்த கால திமுக தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டதும் அவரது பணிவை எடுத்துக்காட்டியது. அரசியலுக்காக, தேர்தலுக்காக அப்படிக்கூறுகின்றார் என்றாலும், கடந்த காலத் தவறுகளை அவர் உணர்ந்திருக்கின்றார் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டியது.

எதிர்க்கட்சி தலைவர்:
  கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக 89 தொகுதிகளை கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறது.அதன் எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார் ஸ்டாலின்.

செயல் தலைவர்:
  வயது மூப்பின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.அதனால் திமுகவின் சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டு,செயல்தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.இதனை அன்பழகன் முன்மொழிந்தும்,துரைமுருகன் வழிமொழிந்தும் பேசினர்.ஸ்டாலின் வகித்த இளைஞரணி தலைவர் பதவி தற்போது,மு.பெ.சாமிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது.இவர் இதற்கு முன்னர் ,இளைஞரணி இணை செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். அண்ணா பிறந்த நாள் விழா,பெரியார் பிறந்த நாள் விழா,திமுக தொடங்கப்பட்ட விழா ஆகிய மூன்று விழாக்களையும் ஒன்றிணைத்து வருடம் தோறும் கொண்டாடப்படும் 'முப்பெரும் விழா',கலைஞரின் சட்டசபை 'வைரவிழா' போன்றவை ஸ்டாலினின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

எந்த பதவி வேண்டும் ? :
  "திமுக பொருளாளர் பதவி வேண்டுமா? அல்லது திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி வேண்டுமா என்று என்னைக் கேட்டால் எனக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் பதவிதான் வேண்டும் என்று நான் தயங்காமல் சொல்வேன் "என்று நமக்கு நாமே பயணத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னார் மு.க. ஸ்டாலின்.

நடிப்பில் ஆர்வம்:
  தந்தையைப் போலவே ஸ்டாலினுக்கும் ஆரம்ப காலத்தில் நாடகங்களின் மீது ஈடுபாடு பிறந்தது. இதனால் நாடகத்திலும் நடித்தார். ஸ்டாலின் நடித்த முதல் நாடகம் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய "முரசே முழங்கு" என்ற நாடகமாகும். இந்நாடகம் கலைஞர் முன்னிலையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது. இந்நாடகம் பல இடங்களிலும் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து அதன் வெற்றிவிழா திருவல்லிக்கேணியில் அதே மேடையில் நடத்தப்பட்டது.இதேபோல, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என பல நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்டாலின்.
அத்தனையும் திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்க நாடங்கள் ஆகும்.இந்த அனுபவமே பின்னாளில் குறிஞ்சி மலர், சூர்யா என டிவி நாடங்களிலும், ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் என இரு திரைப்படங்களிலும் நடிக்க தூண்டியது ஸ்டாலினை.

பொழுதுபோக்கு:
  துடுப்பாட்டம்,கணினி விளையாட்டு,பூப்பந்தாட்டம்,கேரம்,சதுரங்கம் போன்ற பல விளையாட்டுகளில் ஆர்வமுடையவர்.

பெற்ற விருதுகள்:
  ஆட்சி நிர்வாகம் மற்றும் சமூக மேம்பாட்டு பங்களிப்புகளுக்காக, இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம்,மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அமெரிக்காவிலுள்ள கெண்டுக்கி மாகாணத்தின் காமன்வெல்த் அளிக்கும் மிகஉயரிய கவுரவமான கெண்டுக்கி கர்னல் விருது ஸ்டாலினின் பொது சேவைக்காக வழங்கப்பட்டது. கெண்டுக்கியின் நல்லெண்ணத் தூதுவராகவும் அவருக்கு கவுரவம் அளிக்கப்பட்டு, இந்த கவுரவத்தை அவர் முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் ரொனால்ட் ரீகன், நோபல் பரிசு பெற்றவரும் முன்னாள் இங்கிலாந்து பிரதமருமான வின்ஸ்டன் சர்ச்சில், புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி மற்றும் பலருடன் பகிர்ந்து கொள்கிறார்.

முதல்வர்:
  அண்ணாவிடம் இருந்து கருணாநிதிக்கு எளிதாக வந்த முதல்வர் பதவி,கலைஞரிடம் இருந்து ஸ்டாலினுக்கு வருவதற்கு இன்னும் பல முட்டு கட்டைகள்  உள்ளது.விஜயகாந்த்,வைகோ,அன்புமணி என பல பேர் இவருக்கு அரசியல் எதிரிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய பிறகு தான்,ஸ்டாலினின் வளர்ச்சி அதிவேகமாக இருந்தது' என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அமைதியான குணம் கொண்ட ஸ்டாலினுக்கு,வெற்றிக்காக எதையும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளும் குணம் அவரிடம் 'மிஸ்ஸிங்' என்று அவரிடம் பழகியவர்களுக்கு நன்கு தெரியும்.
கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் திமுகவில் முன்னிறுத்தப்படுவது,'வாரிசு அரசியல்' என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டினாலும்,ஸ்டாலினின் வளர்ச்சி திமுக தொண்டனை போன்றது என்பது நிதர்சனமான உண்மை.

காப்புக் காடுகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்; முதல்வருக்குக் கடிதம்
நந்தினி.ரா

காப்புக் காடுகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்; முதல்வருக்குக் கடிதம்

ஈரோடு: மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா-வின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
நாராயணசுவாமி.மு

ஈரோடு: மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா-வின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

அதிகாரத் திமிர்: அடித்து நொறுக்கிய நீதிபதி... ஆமோதிப்பாரா முதல்வர் ஸ்டாலின்?
Guest Contributor

அதிகாரத் திமிர்: அடித்து நொறுக்கிய நீதிபதி... ஆமோதிப்பாரா முதல்வர் ஸ்டாலின்?

`பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்ப்பு; முறைகேடுகளே தாமதத்திற்கான காரணம்!'
ந.நீலம் இளமுருகு

`பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்ப்பு; முறைகேடுகளே தாமதத்திற்கான காரணம்!'

கால்நடைகளுக்கு பாலி கிளினிக் திறக்கப்படுமா? எதிர்பார்ப்பில் விவசாயிகள்...
மு.கார்த்திக்

கால்நடைகளுக்கு பாலி கிளினிக் திறக்கப்படுமா? எதிர்பார்ப்பில் விவசாயிகள்...

கேரளாவில் `டிஜிட்டல் ரீ சர்வே' - குறிவைக்கப்படும் தமிழர்கள்... கவனிக்குமா தமிழக அரசு?
மு.கார்த்திக்

கேரளாவில் `டிஜிட்டல் ரீ சர்வே' - குறிவைக்கப்படும் தமிழர்கள்... கவனிக்குமா தமிழக அரசு?

தமிழக அரசின் கனவு இல்லத் திட்டம்; பத்து எழுத்தாளர்களுக்கு வீடு!
மு.பூபாலன்

தமிழக அரசின் கனவு இல்லத் திட்டம்; பத்து எழுத்தாளர்களுக்கு வீடு!

காட்டாற்றைக் கடந்து படித்த பழங்குடி மாணவியின் நர்ஸிங் கனவு... நிறைவேற்றுமா தமிழக அரசு?
மு.கார்த்திக்

காட்டாற்றைக் கடந்து படித்த பழங்குடி மாணவியின் நர்ஸிங் கனவு... நிறைவேற்றுமா தமிழக அரசு?

``மக்கள், முதல்வர் திருப்தி போதும், வேறு யாரையும்..!" - பி.டி.ஆர் பாய்ச்சலுக்கு ஐ.பெரியசாமி பதில்
மு.கார்த்திக்

``மக்கள், முதல்வர் திருப்தி போதும், வேறு யாரையும்..!" - பி.டி.ஆர் பாய்ச்சலுக்கு ஐ.பெரியசாமி பதில்

``தொடர்ந்து மழை பெய்கிறது; இது நம்ம ராசி, உங்க ராசி" - முதல்வர் ஸ்டாலின்
நாராயணசுவாமி.மு

``தொடர்ந்து மழை பெய்கிறது; இது நம்ம ராசி, உங்க ராசி" - முதல்வர் ஸ்டாலின்

திண்டுக்கல்: பிரதமர், முதல்வர் வருகை; கொடிக்கம்பங்கள் நடுவதில் திமுக, பாஜக-வினர் இடையே மோதல்!
மு.கார்த்திக்

திண்டுக்கல்: பிரதமர், முதல்வர் வருகை; கொடிக்கம்பங்கள் நடுவதில் திமுக, பாஜக-வினர் இடையே மோதல்!

பிரதமர் வருகை கன்ஃபார்ம்; இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் - திண்டுக்கல்லில் ஏற்பாடுகள் தீவிரம்!
மு.கார்த்திக்

பிரதமர் வருகை கன்ஃபார்ம்; இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் - திண்டுக்கல்லில் ஏற்பாடுகள் தீவிரம்!