நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் தமிழ் தேசிய கட்சி ஆகும். இக்கட்சியின் முக்கிய சாராம்சமே தமிழகத்தை தமிழர் மட்டுமே ஆள வேண்டும் என்பதாகும். மேலும் இதுவே நாம் தமிழர் கட்சியின் அடிப்படை கொள்கையாகும். நாம் தமிழர் கட்சியானது தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு எதிரான சிந்தனை கொண்டது.
 
நாம் தமிழர் கட்சியின் தொடக்கம்:
   தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைவர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளராக திரு.சீமான் அவர்கள் செயல்பட்டு வந்தாலும் இக்கட்சியை முதன்முதலில் தொடங்கியவர் திரு.ஆதித்தனார் அவர்கள் தான். திரு.ஆதித்தனார் அவர்கள் 1958-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் முக்கிய நோக்கமே ஒன்றுபட்ட தனித்துவமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான். அப்போதைய தமிழகத்தின் மிக முக்கியமான கட்சியாக விளங்கிய திராவிடர் கழகத்தின் கொள்கைகளுக்கும் நாம் தமிழர் கட்சியின் கட்சியின் கொள்கைகளுக்கும் நிறைய முரண்பாடுகள் இருந்து வந்தன. 1960-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியானது மாநில அளவிலான போராட்டத்தை நடத்தியது. அப்போராட்டத்தில் இந்திய வரைபடத்தை எரித்து(தமிழக பகுதியை தவிர்த்து) தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் கட்சியின் நிறுவனர் திரு.ஆதித்தனார் கைது செய்யப்பட்டார். திரு. சிவஞானம் அவர்கள் மெட்ராஸ் மாகாணம் என்னும் பெயரை தமிழ் நாடு என பெயர் மாற்றக்கோரி மேற்கொண்ட போராட்டங்களில் நாம் தமிழர் கட்சியும் பங்கு கொண்டது.

திரு.சீமான் தலைமையில் நாம் தமிழர் இயக்கம்:
     இலங்கை அரசாங்கம் நிகழ்த்திய கொடூரமான தமிழர் இனப் படுகொலையை கண்டித்து தமிழகத்தில் போராடியவர்களில் திரு.சீமானும் ஒருவர். ஆக மதுரையில் மே 18, 2009-ம் ஆண்டு திரு. சீமான் அவர்கள் நாம் தமிழர் இயக்கத்தை ஏற்படுத்தினார்.
 
கட்சியாக மாறிய இயக்கம்:
    அன்றிலிருந்து சரியாக ஒரு வருடம் கழித்து மே 18, 2010-ம் ஆண்டு அதாவது தமிழர் இனப்படுகொலை நாளான அன்று நாம் தமிழர் இயக்கமானது நாம் தமிழர் கட்சியாக மாற்றப்பட்டது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திரு. சீமான் பொறுப்பேற்றார். தமிழகத்தில் மாற்று அரசியலுக்காகவே நாம் தமிழர் கட்சி தொடங்கப்பெற்றதாக திரு,சீமான் தெரிவித்திருந்தார். தனித் தமிழ் ஈழம் அமைப்பதே அக்கட்சியின் முதல் மற்றும் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், “நாம் கட்சியை தாங்கள் தொடங்கவில்லை என்றும், திரு.ஆதித்தனார் அவர்கள் தொடங்கிய கட்சியை எடுத்து நடத்தி அவர் வழியில் பயணிப்பதாக கூறியிருந்தார் சீமான்.
 
கட்சியின் முக்கிய செயல்பாடுகள்:
       
கட்சி தொடங்கிய நாளிலிருந்து தமிழகத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளது. அவற்றில் ஒன்று முல்லை பெரியாறு மற்றும் காவேரி நதி நீர் பிரச்சனை. மேலும் தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டாட்சியின் போது, இலங்கை சுற்றுலாப் பயணிகளை சென்னையில் தாக்கியதாக நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் விடுதலைக்காக தமிழகத்தில் பல்வேறு போராட்டத்தை நாம் தமிழர் கட்சி மேற்கொண்டது.
மேலும் கட்சதீவை மீட்க வேண்டும் எனவும் திரு.சீமான் குரல் கொடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாது ஐம்பதாயிரம் வீரர்களை கொண்டு ஒரு சிறப்பு படையை உருவாக்கி கட்சதீவை தன்னால் மீட்க முடியும் எனவும் திரு.சீமான் கூறியிருந்தார்.
இவைகள் மட்டுமின்றி திரு.சீமான் ஒரு வாதத்தை தான் கட்சி தொடங்கிய நாளிலிருந்து முன்வைக்கிறார். அது, தமிழகத்தை தமிழர் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என்பதாகும். “இங்கு வாழும் தகுதி அனைவருக்கும் உள்ளது ஆனால் ஆளும் தகுதி தமிழருக்கே உள்ளது” என்னும் வாசகத்தை திரு.சீமான் தொடர்ந்து கூறி வருகிறார்.
 
 
 
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் வரையறைகள்:

 • தமிழரை மீட்டெடுப்பதே கட்சியின் முக்கிய பணி என்று கூறியிருக்கிறார்கள்.
 • தனித்தமிழ் ஈழம் அமைப்போம் என்றும் தெரிவித்திருந்தனர்.
 • நிலம் இல்லாமல் வாழும் மக்களுக்கு நிலம் வழங்கப்படும் எனவும் விவசாயம் மற்றும் தொழில்துறையில் தமிழகத்தை உயர்த்துவோம் எனவும் கூறியிருந்தனர்.
 • உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவரிடத்திலும் ஒற்றுமையை நிலைநாட்டுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
 • பொருளாதார ரீதியாக ஒவ்வொரு சராசரி குடிமகனின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதாக கூறியிருந்தனர்.
 • மேலும் ஆடு, மாடு மேய்த்தலை அரசாங்க பணியாக மாற்றுவதாக அறிவித்திருந்தனர்.
 • தமிழகத்தில் சாதி மற்றும் மதம் அடிப்படையிலான பிரிவுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் எனவும் கூறியிருந்தனர்.
 • தமிழ் மொழியையே அனைத்து நீதி மன்றங்களிலும் வழக்காடு மொழியாக மாற்றுவோம் எனவும் கோவில்களில் தமிழ் மொழியிலேயே அர்ச்சனை நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தனர்.
 • சிலம்பம் போன்ற தமிழர் வீர விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் கூறியிருந்தனர்.
 • மேலும் ஊழலை ஒழிப்போம் எனவும் மக்கள் நீதிமன்றம் அமைப்போம் எனவும் தங்கள் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.


தேர்தல்களில் நாம் தமிழர் கட்சியின் பங்கு:
        2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி பங்குகொள்ளவில்லையென்றாலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்கு சேகரிக்கும் வகையில் அக்கட்சி வேட்பாளர்களை எதிர்த்து அதிமுக வேட்பாளர்களை ஆதரித்தும் திரு.சீமான் பல பொதுக் கூட்டங்களில் பேசினார். அப்போது அவர் கூறிய மிக முக்கியனான வாசகம் என்னவென்றால் “இரட்டை இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்பதாகும். அதற்கு பின்னர் அதிமுக கட்சி ஆட்சிக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திரு. சீமான் சொன்னது போல் ஈழம் மலரவில்லை.

        2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்து தேர்தலை எதிர்கொண்டது. கட்சியின் தலைவர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் கடலூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழக வரலாற்றிலேயே முதன்முதலில் திருநங்கை ஒருவரை வேட்பாளராக அறிவித்த பெருமை நாம் தமிழர் கட்சியை சாரும். தேவி என்பவரை RK நகர் தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக களம் இறக்கியது நாம் தமிழர் கட்சி. மார்ச் 2, 2016 அன்று தங்கள் கட்சியின் சின்னமாக இரட்டை மெழுகுவர்த்தியை அறிவித்தார்கள். பின்னர் மார்ச் 23, 2016 அன்று தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டனர்.

        தேர்தல் சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த திரு.அருணன் அவர்களிடம் திரு.சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விட குறைவான வாக்குகளை பெற்றால் தன் கட்சியை கலைத்து விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிடுவதாக ஒரு தனியார் தொலைகாட்சியின் நேர்காணலில் சவால் விட்டார். ஆனால் அத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி NOTA-வை விட குறைவான வாக்குகளையே பெற்றது. கட்சியின் தலைவர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் தான் போட்டியிட்ட கடலூர் தொகுதியில் ஐந்தாவது இடத்தையே பெற்றார்.

  2017-ம் ஆண்டு செல்வி.ஜெயலலிதா மறைவினை அடுத்து RK நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திரு.கலைக்கொட்டுதயம் அவர்களை வேட்பாளராக அறிவித்தனர். ஆனால் பல கட்சியின் வேட்பாளர்கள் லஞ்சம் கொடுத்து வாக்கு சேகரித்ததை அடுத்து தேர்தல் ஆணையத்தால் இடைதேர்தல் ரத்து செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பிரிவின் பெயர் முத்துகுமார் இளைஞர் பாசறை மற்றும் மகளிர் அணியின் பெயர் செங்கொடி மகளிர் பாசறை என்பது குறிப்பிடத்தக்கது.
 

`தி ஃபேமிலிமேன்-2 தொடரை நீக்குக!’ - லண்டன் அமேஸான் அலுவலகத்தில் ஒலித்த புலம்பெயர் தமிழர்களின் குரல்
ஆ.பழனியப்பன்

`தி ஃபேமிலிமேன்-2 தொடரை நீக்குக!’ - லண்டன் அமேஸான் அலுவலகத்தில் ஒலித்த புலம்பெயர் தமிழர்களின் குரல்

'சாட்டை துரைமுருகன் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சியா?' - குற்றச்சாட்டும் விளக்கமும்
எம்.திலீபன்

'சாட்டை துரைமுருகன் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சியா?' - குற்றச்சாட்டும் விளக்கமும்

திருச்சியில் 'சாட்டை' துரைமுருகன் கைது! யார் இவர்... பின்னணி என்ன?
எம்.திலீபன்

திருச்சியில் 'சாட்டை' துரைமுருகன் கைது! யார் இவர்... பின்னணி என்ன?

`ஸ்டாலின் அரசு 30+’ - வானதி சீனிவாசன் அளிக்கும் மதிப்பெண் என்ன?
இரா.செந்தில் கரிகாலன்

`ஸ்டாலின் அரசு 30+’ - வானதி சீனிவாசன் அளிக்கும் மதிப்பெண் என்ன?

பழுவேட்டரையரா... தொல்காப்பியரா... - சமூக ஊடகங்களில் பரவும் சீமானின் புகைப்படம்... உண்மை என்ன?!
நமது நிருபர்

பழுவேட்டரையரா... தொல்காப்பியரா... - சமூக ஊடகங்களில் பரவும் சீமானின் புகைப்படம்... உண்மை என்ன?!

ம.தி.மு.க: மதுராந்தகத்தில் மல்லை சத்யாவின் வெற்றியை காலி செய்த நாம் தமிழர் வேட்பாளர்!
இரா.செந்தில் கரிகாலன்

ம.தி.மு.க: மதுராந்தகத்தில் மல்லை சத்யாவின் வெற்றியை காலி செய்த நாம் தமிழர் வேட்பாளர்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: திமுக கூட்டணி - 159 ; அதிமுக கூட்டணி -75..!  #LiveUpdates
ஜூனியர் விகடன் டீம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: திமுக கூட்டணி - 159 ; அதிமுக கூட்டணி -75..! #LiveUpdates

பெரும்பாலான தொகுதிகளில் 3 -வது இடம்! - கவனம் ஈர்க்கும் நாம் தமிழர் கட்சி!
த.கதிரவன்

பெரும்பாலான தொகுதிகளில் 3 -வது இடம்! - கவனம் ஈர்க்கும் நாம் தமிழர் கட்சி!

#TNelections2021 நாற்காலி யாருக்கு...?! முதல்வர் வேட்பாளர்களும் தமிழக தேர்தல் ஓர் அறிமுகமும்!
ரா. அரவிந்த்ராஜ்

#TNelections2021 நாற்காலி யாருக்கு...?! முதல்வர் வேட்பாளர்களும் தமிழக தேர்தல் ஓர் அறிமுகமும்!

TN Elections Exit poll results:| சி வோட்டர் முதல் இந்தியா டுடே வரை..! - கருத்துக்கணிப்பு முடிவுகள்!
பிரேம் குமார் எஸ்.கே.

TN Elections Exit poll results:| சி வோட்டர் முதல் இந்தியா டுடே வரை..! - கருத்துக்கணிப்பு முடிவுகள்!

``திருவொற்றியூர் மக்களே''  மேடையில் கர்ஜித்த பாரதிராஜா... நெகிழ்ந்த சீமான் - தொகுதி ஸ்பாட் விசிட்!
இரா.செந்தில் கரிகாலன்

``திருவொற்றியூர் மக்களே'' மேடையில் கர்ஜித்த பாரதிராஜா... நெகிழ்ந்த சீமான் - தொகுதி ஸ்பாட் விசிட்!

பா.ஜ.கவின் B-டீமா நாம் தமிழர் கட்சி? - சீமான் நேர்காணல்
ஜூனியர் விகடன் டீம்

பா.ஜ.கவின் B-டீமா நாம் தமிழர் கட்சி? - சீமான் நேர்காணல்