நமிதா | Latest tamil news about Namitha | VikatanPedia
Banner 1
நடிகை

நமிதா

சொந்தம், ஜெமினி போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர், தமிழில் அறிமுகமானது 2004-ஆம் ஆண்டு விஜயகாந்த ஜோடியாக நடித்த “எங்கள் அண்ணா” திரைப்படம், தொடர்ந்து சரத்குமார் ஜோடியாக “ஏய்” திரைப்படத்தில் நடித்தார்.

தமிழ் நாட்டின் கவர்ச்சி புயல் நமிதா, ஃபேவரைட் ஹீரோயின்கள் பலபேர் இருந்தாலும்,தமிழ் இளைஞர்களின் ஆல் டைம் ஃபோவரைட்களில் ஒருவர் நமிதா. சொந்தம், ஜெமினி போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர், தமிழில் அறிமுகமானது 2004-ஆம் ஆண்டு விஜயகாந்த ஜோடியாக நடித்த “எங்கள் அண்ணா” திரைப்படம், தொடர்ந்து சரத்குமார் ஜோடியாக “ஏய்” திரைப்படத்தில் நடித்தார். 2001-ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தார்,1998 ஆம் ஆண்டு மிஸ்.சூரத் என்ற பட்டத்தை வென்றார்.இடையில் லவ் கெ சக்கர் மெயின் என்னும் ஹிந்தி திரைப்படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார் நமிதா.
 
 
பில்லா, அழகிய தமிழ் மகன் என்று பெரிய ஸ்டார்களுடனும் ஜோடி சேர்ந்தார் நமிதா, அழகு முகம் 6 அடி உயரம் என  இன்று படங்கள் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் ஃபேன் ஃபாலோயிங் அப்படியேதான் உள்ளது.தமிழ் தவிர தெலுங்கு கன்னடா, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள இவர் கலைஞர் தொலைக்காட்சியின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக 10-சீசன்கள் பங்கேற்றுள்ளார்.
 
இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய இவர், நான்காவது வாரம் வெளியேற்றப்பட்டார்.

தொகுப்பு : GOMATHI S M